No icon

31.03.2019 தவக்காலம் நான்காம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை:
கிறிஸ்துவில் பேரன்புக்குரியவர் களே, திருவருகை காலத்தின் மூன்றாம் ஞாயிறும் தவக்காலத்தின் நான்காம் ஞாயிறும், மகிழ்ச்சியின் ஞாயிறு என அழைக்கப்படுகின்றன. ஆம் இன்று மகிழ்ச்சியின் ஞாயிறு என அழைக்கப்படுவது முற்றிலும் பொருத்தம். ஏனென்றால் தப்பான
புரிதலால், உலகத் தாக்கத்தின் விரிதலால், உப்பாகவும் ஒளியாக வும் வீற்றிருக்கும் அப்பாவைப் பிரிந்து, அக்கிரமத்தின் சுவடுகளில் பயணித்து, ஆனந்தத்தின் விளிம்பு வரை சென்று உண்மையான மனமாற்றம் பெற்று, தந்தையிடம் திரும்பி வந்த காணாமல்போன மகனின் வருகை உள்ளபடியே எல்லார்க்கும் மகிழ்ச்சிதரும் உன்னத நிகழ்வு ஆகும். ஆம் கிறிஸ்துவோடு இணைந்து புதிய வாழ்வைத் தொடரும் ஒவ்வொரு நொடியும் நமக்கு மகிழ்ச்சியளிக்கும் ஒப்புரவுப்
பெருவாழ்வு என்பது பேருண்மை யாகும். இது நம்மீது பேரன்பு கொண்ட
நமது திருஅவை எதிர்நோக்கி காத்திருக்கும் அன்னை என்பதன் அடையாளமாகத் திகழ்கிறது. இப்
படி எத்தனை வாய்ப்புகள் இருந்
தாலும் நாம் தன்நிலை உணரா மலும் நன்நிலை தொடராமலும் வாழ்ந்து, உண்மை மகிழ்ச்சிக்கு ஊறுவிளைவிக்கும் சூழல்களில் சிக்கித் தவிக்கும் செயல்பாடுகளை கவனத்தோடு ஒதுக்கி, இறை மனித உறவுகளில் நிலைத்து இறையாட்சியின் கருவி களாய் வாழ இத்திருப்பலியில் அருள்வேண்டுவோம்.
முதல் வாசக முன்னுரை: யோசுவா 5: 9,10-12
விடுதலைப் பயணத்தை வெற்றி பெறச் செய்த நலமான கூறுகளுள் ஒன்று இஸ்ரயேல் மக்கள் உண்ட மன்னா என்ற உணவு ஆகும். அது ஆண்டவர் பழிச்சொல்லை அகற்றிய கில்காலில் விளைச் சலைப் பெறும்வரை தொடர்ந்தது. இது இறைவனது இணையற்ற வழி நடத்துதலைப் படம் பிடித்துக் காட்டுகிறது என்பதை விளக்கும்  முதல் வாசகத்தைக் கேட்போம்.
பதிலுரைப்பாடல்: திருப்பாடல் 34:1-2, 3-4, 5-6
பல்லவி: ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்.
இரண்டாம் வாசக முன்னுரை:
2 கொரிந்தியர் 5: 17-21
தந்தை, கிறிஸ்து வழியாக நம்மைத் தம்மோடு ஒப்புரவாக்கத் தாகம் கொண்டுள்ளார். அதற்கான பல வழிமுறைகளையும் அவரே வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக ஒப்புரவாக்கும் திருப் பணியை நாம் அனைவருமே செய்ய வேண்டுமென்று விரும்பு கிறார். இதனை விளக்கும் இரண்
டாம் வாசகத்திற்குச் செவிசாய்ப் போம்.
நற்செய்தி வாசகம் : லூக்கா 15: 1-3, 11-32
நம்பிக்கையாளர்களின் மன்றாட்டுகள்
1. காத்திருந்து கண்டடைவதில் மகிழ்விலும் இறைவா!
எம் திருத்தந்தை பிரான்சிஸ், ஆயர்கள், குருக்கள், துறவிகள் மற்றும் திருநிலையினர் அனை வரும் தமது பணி வாழ்விலும் தனிவாழ்விலும் உண்மையை, நன்மையை விட்டுப் பிரிந்து
போன அமைப்புகள், தனிமனிதர் கள் மனம் மாற்றம் பெற்று விரை
வில் திரும்பி வரவேண்டு மென்று காத்திருக்கவும் அப்படி
அவர்கள் வரும்போது ஏற்றுக் கொண்டு  உரிய முறையில் கொண்டாடி மகிழ்ச்சியை வெளிப்
படுத்தவும் வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. நன்மையை வரவேற்கக் கற்றுத் தரும் இறைவா!
முன்சார்பு எண்ணங்களால், தங்
களிடம் குடிகொண்டுள்ள ஈகோ
வின் வெளிப்பாடுகளால் நன்மை களை வரவேற்பதில் தயக்கம் காட்டி நாட்டு வளர்ச்சியைப் பற்றி அக்கறையில்லாமல் இருக் கும் அரசு அதிகாரிகள் எங்கிருந்து நன்மைகள் தென்பட்டாலும் அவற்றை ஏற்று, வரவேற்று நலம் தரும் பணிகளை எமக்கு நாளும் ஆற்றிட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
3. புதிய வாழ்வை வழங்கும் இறைவா!
மரபு என்ற பெயராலும் வழக்கம் என்ற நடை முறையாலும் பழைய
தீய வாழ்வை விரும்பி, மூட
நம்பிக்கையின்படி வாழும் எமது
இல்ல, சமுதாயத் தலைவர்கள் நன்மை தரும்புதிய வாழ்வை பல சோதனைகள், பிரச்சினை களுக்கு மத்தியிலும் துணிவுடன்
ஏற்று நடைமுறைப்படுத்த வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
4. ஒப்புரவு வழங்கும் உன்னத இறைவா!
இத்தவக்காலத்தில் திருநிலை யினர் அனைவரும் ஒப்புரவு அருளடையாளத்தால் தங்களைப் புதுப்பித்துக் கொண்டு
பெருமகிழ்ச்சியடைய முன்வர வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
5. நல்ல தலைமைய எமக்கு வழங்கும் இறைவா!
அண்மையில் நடைபெற உள்ள
எம் நாட்டு நாடாளுமன்ற தேர்த
லில் பெரும்பான்மைவாதம், சிறு
பான்மையினத்தவரை ஒதுக்குதல், இலவசங்களால், ஊதியங்களால் வாக்குகளைப் பெறும் போக்கு ஆகியவை முறியடிக்கப்பட்டு நல்ல சன நாயகம்மலர துணைநிற்கும், மதவாத சக்திகளை முறியடிக்கும் அமைப்புகள் வெற்றிபெற வேண்
டுமென்று உம்மை மன்றாடு கிறோம். (அரசுத் தேர்வு எழுது வோர், நல்ல மழை பெறுதல் ஆகிய கருத்துகளுக்கான மன்றாட்
டுகளையும் இணைத்துக் கொள்ளலாம்).

Comment