No icon

எண்ணம் போல் வாழ்க்கை 

மனதிற்கு பிடித்ததைச் செய் 

மனதிற்கு பிடித்ததைச் செய் 

நீ பார்க்கும் வேலைதான் உன் வாழ்வின் பெரும்பகுதியாக இருக்கப்போகிறது. அப்படியிருக்கும்போது உன் மனமும் திருப்தியடைய வேண்டுமெனில், எது உனக்குப் பிடிக்கிறதோ அதைச் செய். அப்படி ஒரு வேலையை நீ கண்டடையவில்லை எனில், அது கிடைக்கும்வரை தொடர்ந்து தேடு. இதுதான் நமக்கு வாய்த்த வேலை என்று தேங்கிவிடாதே. உனக்குப் பிடித்த வேலையை மட்டுமே உன்னால் முழு அர்ப்பணிப்புடனும் காதலுடனும் செய்யமுடியும்”.

இவ்வார்த்தைகளை உதிர்த்தவர் யாராக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?... உலகில் டிஜிட்டல் புரட்சிக்கு வித்திட்டவரும் ஆப்பிள் நிறுவனத்தின் நிறுவனருமான ஸ்டீவ் ஜாப்ஸ் என்பவரே ஆவார். நாம் நமது மனதிற்கு பிடித்த வேலையைச் செய்கின்றபோது, யாராலும் கற்பனை செய்ய முடியாத உயரத்திற்கு நம்மால் செல்ல முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியவர் இவர். எனவே இவருடைய வாழ்க்கை நமக்கு எந்தளவுக்கு நம்பிக்கையை ஊட்டுவதாக இருக்கின்றது என்று இப்போது பார்ப்போம்.

ஸ்டீவ் ஜாப்ஸ், 1955 ஆம் ஆண்டு, அமெரிக்காவில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தார். ஒருசமயம் கலிபோர்னியா மாகாணத்திலிருந்து வந்திருந்த ஒரு குழந்தையில்லாத தம்பதியர் ஸ்டீவ் ஜாப்ஸின் அன்னையிடம், “உங்களுடைய குழந்தையை - ஸ்டீவ் ஜாப்சை - எங்களுக்குத் தத்துக்கொடுக்க முடியுமா?, நாங்கள் அவனை நல்லவிதமாய் பார்த்துக்கொள்கிறோம்என்றார்கள். ஒருகணம் யோசித்துப் பார்த்த ஸ்டீவ் ஜாப்ஸின் தாயார், “என்னுடைய குழந்தையை உங்களுக்குத் தத்துக் கொடுக்கிறேன். ஆனால் ஒரு நிபந்தனை... என்னுடைய குழந்தைக்கு நீங்கள் நல்லதொரு கல்வி கொடுக்கவேண்டும். இதற்குச் சம்மதித்தால் நான் என்னுடைய குழந்தையை உங்களுக்குத் தத்துத் தருகிறேன்என்றார். அவர்களும் அதற்குச் சம்மதம் தெரிவிக்க, ஸ்டீவ் ஜாப்ஸின் தாயார் தன் குழந்தையை அவர்களுக்குத் தத்துக் கொடுத்தார்.

கலிபோர்னியாத் தம்பதியரும் ஸ்டீவ் ஜாப்சுக்கு நல்லதொரு கல்வி கொடுத்து, அவரைச் சிறந்தவிதமாய் வளர்த்துவந்தனர். ஸ்டீவ் ஜாப்சும் பெற்றோர் தன்மீது வைத்த நம்பிக்கைக்கு ஏற்ப நல்லவிதமாய் படித்துவந்தார். பள்ளிப்படிப்பு வரை ஸ்டீவ் ஜாப்சுக்கு எல்லாம் நன்றாகப் போய்க்கொண்டிருந்தது. கல்லூரிப் படிப்பைப் படிக்கத் தொடங்கியபோதுதான் பிரச்சினை தொடங்கியது. ஆம். கல்லூரியில் அவருக்குக் கற்றுக்கொடுக்கப்பட்ட பாடங்கள் அனைத்தும் அலுப்புத் தட்டத் தொடங்கின. ‘என்ன இது... நம்முடைய வாழ்க்கைக்கும் நம்முடைய படிப்பிற்கும் எந்தவொரு தொடர்பும் இல்லாமல் இருக்கிறதே... இதிலே கிடந்து வாழ்க்கையைத் தொலைத்துக்கொள்வதற்குப் பதில், நம்முடைய மனதிற்குப் பிடித்த வேறு ஏதாவது ஒன்றை முயற்சி செய்து பார்ப்போமேஎன்று கல்லூரிப் படிப்பைப் பாதியில் விட்டுவிட்டு, வீட்டைவிட்டு வெளியேறினார்.

அதுவரைக்கும் பொருளாதார அளவில் எந்தவொரு நெருக்கடியையும் எதிர்கொண்டிராத ஸ்டீவ் ஜாப்ஸ், வீட்டைவிட்டு வெளியேறியதும், பொருளாதார நெருக்கடியை சந்திக்கத் தொடங்கினார். தன்னுடைய நண்பர்களுடைய அறையில் தங்கி வேலைதேடத் தொடங்கினார். ஆனால், நண்பர்களுடைய அறையில், அவர்களுடைய தயவில் எத்தனை நாளுக்குத்தான் பிழைப்பை ஓட்டுவது என்று, அங்கிருந்தும் வெளியேறி, காலி குளிர்பானப் புட்டிகளைச் சேகரித்து, அவற்றை விற்று, அதிலிருந்து கிடைத்த பணத்தைக் கொண்டு பசியாறிவந்தார். இதற்கிடையில் அவருக்கு ஆன் மிகத்தின்மீது நாட்டம் வரத்தொடங்கியது. நான் யார்? எதற்காக இந்த உலகத்திற்கு வந்திருக்கிறேன்? இறைவன் யார்? அவர் எப்படிப்பட்டவர்? என்பது போன்றே கேள்விகளை அவர் தனக்குள்ளே கேட்டுக்கொண்டு இந்தியாவிற்கு வந்தார். விஷயம் அறிந்த அவருடைய பெற்றோர், அவரைத் தேடி இந்தியாவிற்கு வந்து, அவரை மீட்டுக்கொண்டு போயினர்.

தன்னுடைய பெற்றோருடன் அமெரிக்கா விற்குத் திரும்பி வந்த ஸ்டீவ் ஜாப்ஸ் அங்கிருந்த ஒரு வீடியோ கேம் நிறுவனத்தின் விற்பனையாளராக வேலைபார்க்கத் தொடங்கினார். வாழ்க்கையில் ஏற்ற, இறக்கங்களைச் சந்தித்த போதிலும் தனது மனதிற்குப் பிடித்த மாதிரி ஒரு வேலை அமையும் என்று அவர் மிக நம்பிக்கையோடு இருந்தார். வீடியோ கேம் சாதனங்களை மக்களுக்கு விற்றுக்கொண் டிருக்கும்போது மக்களுக்கு எது தேவை யாக இருக்கின்றது, எதைக் கண்டுபிடித்தால் அதிகம் விற்பனையாகும் என்பது பற்றிய தெளிவினை அவர் பெற்றார்.

இந்த சமயத்தில்தான் ஸ்டீவ் ஜாப்ஸ் தன்னுடைய பால்ய காலத்து நெருங்கிய நண்பனா கிய ஸ்டீபன் போஸ்ந்யாக் என்பவரைச் சந்தித்தார். அவர் ஸ்டீவ் ஜாப்ஸோடு ஒத்த கருத்தினை உடையவர். ஸ்டீவ் ஜாப்ஸ் அவரிடத்தில், “நாம் ஏன் மக்கள் எளிதாகப் பயன்படுத்தக்கூடிய அளவில் ஒரு கணினியைத் தயாரிக்கக்கூடாதுஎன்றார். இந்த யோசனை அவருடைய நண்பருக்குச் சரியெனப் படவே, “தயாரிக்கலாம்என்றார். ஏனென்றால் அந்தக் காலத்தில் கணினி இன்றைக்கு இருப்பது போல கையடத்திலோ, எங்கு சென்றாலும் தூக்கிச் செல்லக்கூடிய அளவிலோ இல்லை. அது ஓர் அறை அளவுக்கு மிகவும் பெரிதாக இருந்தது. விலையும் யாரும் வாங்கமுடியாத அளவுக்கு, அலுவலகத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படக்கூடிய அளவில் இருந்தது. இதையெல்லாம் உணர்ந்ததால்தான் ஸ்டீவ் ஜாப்ஸ் இப்படியொரு கருத்தினை முன் மொழிந்தார். அவருடைய நண்பரும் அதற்குச் சம்மதம் தெரிவித்ததால், இருவரும் கையிலிருந்த காசைப் போட்டு ஆப்பிள் நிறுவனத்தைத் தொடங்கினார்.

ஆப்பிள் நிறுவனத்தின் முதல் வெளியீடாக 1976 ஆம் ஆண்டு, ஹயீயீடந என்ற கணினியை வெளியிட்டார்கள். அதுவரைக்கும் கணினி என்றால் யானையளவுக்கு பெரிதாகப் பார்த்துப் பார்த்துப் பழகியவர்கள், கையடக்கத்தில் இருப்பதையும் விலை மிகக் குறைவாக இருப்பதையும், அதைவிட பயன்பாட்டுக்கு மிக எளிதாக இருப்பதையும் கண்டு போட்டிபோட்டுக்கொண்டு வாங்கினார்கள். இதனால் மிகக் குறுகிய காலத்தில் ஆப்பிள் கணினி பற்றிய பேச்சு எங்கும் பரவியது. நிறுவனமும் 4000 க்கும் மேற்பட்டார் பணிபுரியும் அளவில் உயர்ந்தது.

இப்படி ஆப்பிள் நிறுவனம் நல்ல முறையில் வளர்ந்து கொண்டிருந்த தருணத்தில், அந்நிறுவனத்தில் ஸ்டீவ் ஜாப்சுக்கு எதிரான சதிவேலைகள் நடைபெறத் தொடங்கின. இதனை நன் குணர்ந்த ஸ்டீவ் ஜாப்ஸ், ஆப்பிள் நிறுவனத்தி லிருந்து வெளியேறி நேஓகூ என்றொரு நிறு வனத்தைத் தொடங்கி அதன்மூலம் தான் கண்டுபிடித்த கணினி, ஐபோன்,ஐபாட் போன்றவற்றை மக்களுடைய பயன்பாட்டிற் குக் கொண்டு வந்தார். இதனால் ஆப்பிள் நிறுவ னத்தின் விற்பனையை விட, நேஓகூ நிறுவனத்தின் விற்பனை சூடுபிடிக்கத் தொடங்கியது. இதற்கிடையில் iஒயச என்றொரு அனிமேசன் நிறுவனத்தைத் தொடங்கிய ஸ்டீவ் ஜாப்ஸ், டிஸ்னி என்ற நிறுவனத்தோடு இணைந்து 1995 ஆம் ஆண்டு, கூடில ளுவடிசல என்ற படத்தை வெளியிட்டார். இப்படம் பயங்கரமாக ஓடி உலகத்தாரின் கவனத்தை ஈர்த்தது.

ஸ்டீவ் ஜாப்ஸ் தொடங்கிய நேஓகூ நிறுவனத் தின் வளர்ச்சி ஜெட்  வேகத்தில் இருந்ததால், அதனைப் பெரும் தொகை கொடுத்து ஆப்பிள் நிறுவனம் வாங்கியது. இதனால் ஸ்டீவ் ஜாப்ஸ் ஆப்பிள் நிறுவனத்திற்குள் வந்தார். அவர் கண்டுபிடித்த புதிய தொழில்நுட்பங்களை எல்லாம் ஆப்பிள் நினுவனத்திற்குள் டிஜிட்டல் புரட்சி யினை செய்துகாட்டினார். இதனால் அவர்உலக பிரபலமானார். இன்றைக்கு நாம் பயன்படுத்தக் கூடிய கையடக்கக் கணினி, அலைபேசியிலே உள்ளஎல்லா வசதிகள், இவற்றுக்கான விதை அவர் போட்டது என்று சொன்னால் அது மிகையாகாது.

சமூகத்தில் இருக்கின்ற கடைகோடி மனிதனும் கணினியை மிக எளிதாகப் பயன்படுத்த வேண்டும் என்பதுதான் ஸ்டீவ் ஜாப்ஸின் கனவு, இலட்சியம் மற்றும் பிடித்த விஷயமாக இருந்தது. அதிலே அவர் தன்னுடைய உடல், பொருள், ஆவி அத்தனையும் செலுத்தி சாதித்துக் காட்டினார். நாமும் நமது மனத்திற்குப் பிடித்ததைக் கருத்தூன்றி, எல்லாருக்கும் பயன்படும் வகை யில் செய்தோமெனில் உன்னத நிலையை - நம்முடைய எண்ணம் போல் வாழக்கையை - அமைத்துக் கொள்ள முடியும் என்பதில் எந்தவொரு மாற்றுக்கருத்தும் கிடையாது.

இன்றைக்கு பலருக்கு நினைத்த வாழ்க்கை, நினைத்த வேலை கிடைக்கவில்லையே என்ற அங்கலாய்ப்பு உண்டுஇப்படிப்பட்டவர்கள் தங்கள் மனத்திற்குப் பிடித்த வேலையைச் செய்தார்களா? அல்லது கிடைத்த வேலையைச் செய்துவிட்டு, அதிலே திருப்தியடைந்துவிட்டார்களா? என்ற

கேள்வியை எழுப்பிப் பார்க்கவேண்டும். ஒரு வேளை மனத்திற்குப் பிடித்த வேலையை செய்யத்தான் ஆசைப்பட்டார்கள் என்றாலும், அது  கிடைக்குமட்டும் முயற்சி செய்தார்களா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

 நமக்கு முன்பாக இருப்பது இந்த ஒரே ஒரு வாழ்க்கைதான். இதில் நாம் மனத்திற்குப் பிடித்த மாதிரி வேலையைச் செய்கின்றபோதுதான், நம்முடைய வாழ்க்கை அர்த்தம் பெறும்.

இறுதியாக ஒரு சிறு கதை. அந்தத் தெருவில் ஒரு நான்குவயது குழந்தை இருந்தது. அக்குழந்தை என்னென்ன செய்ததோ, என்னென்ன விளையாட்டுகளை எல்லாம் விளையாடியதோ அதையே அந்த தெருவில் இருந்த எல்லாக் குழந்தைகளும் செய்தன, விளையாடின. இதைக் கூர்ந்து கவனித்த ஒரு பெரியவர், ‘அது எப்படி இந்த குழந்தை செய்வதுபோல் மற்றெல்லாக் குழந்தைகளும் செய் கின்றனஎன்று அந்தக் குழந்தையைத் தொலைவில்இருந்து பார்க்கத் தொடங்கினார். அக்குழந்தையோ தான் விளையாடுவது போன்று மற்றவர்கள் விளையாட வேண்டும் என்று வற்புறுத்தவில்லை. அது தான் விளையாடிய விளையாட்டை மிகவும் இரசித்து, மகிழ்ச்சியாக விடையாடியது. இதைப் பார்த்துவிட்டுதான் மற்றெல்லாக் குழந்தைகளும் விளையாடுகின்றன போலும் என்று அவர் புரிந்து கொண்டார்.

ஆம், நாம் மனத்திற்குப் பிடித்த விஷயங் களை மனமொன்றிச் செய்தால் இந்த உலகமே திரும்பிப் பார்க்கும் என்பது உறுதி. ஆகவே, எண்ணம் போல் வாழ்க்கை வாழ நினைக்கும் நாம் மனத்திற்குப் பிடித்ததை, அது எல்லாருக்கும் பயனுள்ள விதத்தில் செய்வோம். அதன்வழியாக வையத்துள் வாழ்வாங்கு வாழ்வோம்.

Comment