No icon

திருத்தந்தையின் முழக்கம்

நம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள், மேலும் சுற்றறிக்கைகளின் இரத்தினச் சுருக்கம்:

அர்ப்பண வாழ்வுக்கு அழைக்கப்பட்ட ஒவ்வொருவரின் வாழ்விலும், நல்ல பலனைத் தரும் வகையில் ஒவ்வொரு நாளும் இறையழைத்தல் என்ற வரம் பாதுகாக்கப்பட வேண்டும்; அது ஒவ்வொரு நாளும் வளர்க்கப்பட வேண்டும்.”

- மே 30, பிரேசிலில் அர்ப்பண வாழ்வு அமைப்பின் நிறைவு விழா செய்தி

கல்வி என்பது கல்வி நிலையங்களோடு முடிவடைவது கிடையாது; மாறாக, நம் வாழ்வு முழுவதும் அதன் விளைவுகள் உணரப்படுகின்றன.”

- மே 31, மாணவர்களின் பெற்றோர் அமைப்பு மாநாட்டின் செய்தி

உடைக்கப்பட்ட அப்பத்திலும், சீடர்களுக்குப் பருகக் கொடுக்கப்பட்ட கிண்ணத்திலும் மனிதகுலம் அனைத்திற்காகவும், இவ்வுலகின் நல்வாழ்விற்காகவும் இறைவன் தம்மையே வழங்குகிறார்.”

- ஜூன் 2, திரு உடல், திரு இரத்தப் பெருவிழா, மூவேளைச் செபம்

உண்மையான சுதந்திரம் என்பது நாம் விரும்புவதை எந்தவொரு தடையும் இல்லாமல் செய்வதும், மற்றவர்களைப் பொருட்படுத்தாமல் இருப்பதும் என்று சிலர் எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள். இது சுதந்திரம் அல்ல; மறைக்கப்பட்ட அடிமைத்தனம். உண்மையான சுதந்திரம் என்பது அன்பினால் உந்தப்பட்டு, மற்றவர்களுக்குப் பணிவுடன் பணியாற்றுவதால் கிடைக்கின்றது.”

- ஜூன் 2, புனித யோவான் பெருங்கோவிலில் திரு உடல், திரு இரத்தப் பெருவிழா மறையுரை

தங்கள் பயணத் தோழராகவும், வழிகாட்டியாகவும், மீட்பின் நங்கூரமாகவும் இறைவனை அனுபவிக்கின்றனர். கடவுள் தம் மக்களோடு மட்டுமல்ல, அவர்களுக்குள்ளும் நடக்கிறார்.”

- ஜூன் 3, 110-வது உலகப் புலம்பெயர்ந்தோர் தினத் தயாரிப்புச் செய்தி

Comment