No icon

2030 -ஆம் ஆண்டில் ஏழ்மையை அகற்ற வேண்டும்!

ஏழை நாடுகளின் வளர்ச்சியில் தடைக்கற்களாக வெளிநாட்டுக் கடன், உணவுப் பாதுகாப்பின்மை, சத்துணவின்மை, காலநிலை மாற்றம், இயற்கைப் பேரிடர்கள் உள்ளன எனப் பேராயர் கபிரியேலே காச்சா கூறியுள்ளார். அமெரிக்க ஐக்கிய நாட்டின் நியூயார்க் நகரில் இடம்பெற்றசிறிய தீவு நாடுகளின் வளர்ச்சிக்கு உதவுதல்என்ற .நா. அவைக் கூட்டத்தில் பேராயர் கலந்து கொண்டு உரையாற்றினார். “வளர்ச்சி கண்டு வரும் சிறிய தீவு நாடுகளுக்கு உதவும் நோக்கத்தில் வெளிநாட்டுக் கடன் குறைப்பு மற்றும் கடன் ஒழிப்பு போன்ற முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். 2030 -ஆம் ஆண்டில் ஏழ்மையை அகற்ற வேண்டும் என்ற திட்டத்துடன் செயல்படும் உலக நாடுகள், அந்தத் திட்டத்தில் ஏழை நாடுகள் பொருளாதாரத்தில் வளர பணக்கார நாடுகள் உதவ வேண்டும். அனைத்து நாடுகளும் ஒரே நேரத்தில் முன்னேற உதவ வேண்டும் என்பது ஒரு வெறும் பரிந்துரையாக அல்ல; மாறாக, ஓர் ஒழுக்க ரீதி சார்ந்த கட்டாயமாக நோக்கப்பட வேண்டும்என்றார்.

Comment