No icon

வகுப்புவாதம் எப்படி வெற்றி பெறுகிறது?

சுதந்திரம் பெற்ற இந்தியா சனநாயகத்தை தன் அரசியல் விழுமியமாக ஏற்றுக்கொள்கிறது. சனநாயகம் உள்ளடக்கும் சமத்துவம், சமயச்சார்பின்மை, இறையாண்மை என்பன சனநாயக அரசின் அடிப்படை கூறுகளாகி அரசியல் சாசன வழி அறிவிக்கப்பட்டன. மேற்கூறிய விழுமியங்கள் சட்டங்களாயின. மீறப்பெறுகையில் நீதிபெறும் வகையில் நீதித்துறை உருவாக்கப்பட்டது. நீதி மன்றங்கள் மூலமே சட்டங்கள் பாதுகாக்கப்படுமா என்ற வினாவெழுந்த போது, நீதிமன்றங்களையும் தாண்டி, நீதிகாக்க மனித உரிமை ஆணையங்கள் தோற்றுவிக்கப் பெறுகின்றன. தேசிய மனித உரிமைகள் ஆணையம் சட்டப்பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. தேசிய அளவிலான ஆணையம் போலவே, மாநில அளவிலான மனித உரிமை ஆணையங்களும் தோற்றுவிக்கப்பட்டன. நீதிமன்றங்கள் மட்டுமே மனித உரிமைகளைக் கண்காணிக்கவும் காத்திடவும் முடியாது என்பதால், சமூகத்தின் நலிந்த பிரிவினராம் தாழ்த்தப்பட்ட மக்கள் பட்டியலினத்தவர், பெண்கள், மதமொழிச் சிறுபான்மையினர் என்போரின் உரிமைகள் பாதுகாக்கப் பெற ஆணையங்கள் உருவாக்கப்படுகின்றன.
ஆக, சனநாயகத்தின் அனைத்து எச்சங்களையும் பிரதிபலிக்கும் வகையில் நிறுவனங்கள் உருவாக்கப்படுகின்றன. பன்மையைப் போற்றும் வகையில் தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. உள்ளாட்சி  அமைப்புகள் வலுவாக்கப்பட்டுள்ளன. குடிகள் சனநாயகத்தில் குடிமக்களாக்கப்பட்டன என்று நிரூபிக்க அனைத்து மட்டங்களிலும் தேர்தல்கள் நடத்தப் பெறுகின்றன. தேர்தல் எவ்வளவு ஆக்ரோஷமாக நடந்தாலும் தேர்தல் முடிவுகளை சனநாயகப் பண்போடு ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மை உருவாகி யுள்ளது. சனநாயகத்தின் உள்ளீடுகளாம் சமத்துவமும், சமயச் சார்பின்மையும் இறையாண்மையும் எழுத்து வடிவிலாவது நிச்சயம் காக்கப்படுகின்றன. இன்னும் இவை இன்று உயிர்ப்புடன் இல்லையெனினும், சாசன அளவிலும் கூட அவ்வப்போது சிதைப்பதற்கான முயற்சிகள் நடந்தாலும் இன்னும் இவை அரசியல் சாசன உயிர்ப்பண்பாக இருப்பதை எவரும் மறுக்க இயலாது.
அரசியல் சாசன உயிர்ப் பண்புகள் அறியா தோரும், அல்லது சித்தாந்த ரீதியாக முரண்பட்டு மறுப்போரும் கூட, இச்
சாசனத்தின் மீது நம்பிக்கை கொண்டிருப் பதாகவே உறுதிமொழியேற்கின்றனர். சனநாயகம் பேசும், அதிகாரப் பரவல், கூட்டாட்சித் தத்துவம், தேசிய இனங்கள், தேசம் என்பனவெல்லாம் இன்றும் நாம் பேசும் சனநாயகத்துள் பேசுபொருளாகவே (னளைஉடிரசளந) உள்ளன என்பதும் உண்மையே. 
இந்திய நாடு ஒரு சனநாயக நாடு என்று அறிவிக்கப்பட்ட பின்பும், சனநாயக நடைமுறைகள்  பல்வழி நடைமுறைப்படுத்தப்பட்ட பின்பும், சன
நாயகத்தை நம்பாத, சனநாயகம் பேசும் சமத்துவத்தை அதர்மமாகக் கருதும் ஒரு சித்தாந்ததை, மதவாதமே உயிர்க் கொள்கையாகக் கொண்ட ஒரு நாடு, சமயசார்பற்ற கொள்கைக்கு எதிரான ஒரு வகுப்புவாத கருத்தியல் எப்படி இந்திய மனங்களுள் புகுந்தது? வகுப்புவாதம் என்றும் மதவாதம் என்றும் மதஅடிப்படைவாதம் என்றும் மக்களை ஒதுக்கும் இந்து தேசியம் என்றும், ஒருமைப்பாடு என்றும் பேசி வரும் ஒரு கட்சி, சனநாயகத்திற்கு எதிரான ஒரு கட்சி, எப்படி இவ்வளவு வெற்றி பெற முடிந்தது. தேர்தலில் வெற்றி தோல்வி சகஜம் தானே என்று பலர் எண்ணுவது போல் இவ்வெற்றியையும் எடுத்துக் கொள்ளலாமா? சனநாயகத்தின் சிறப்பு தேர்தலில் மக்கள் பங்கேற்பில்தானே உள்ளது. தேர்தல், போட்டி வெற்றி, தோல்வி என்பது ஒருமுறை (ஞசடிஉநளள) தானே. இதில் என்ன ஆச்சரியப்படவுள்ளது? ஏன் கலங்குகிறோம்? ஏன் அஞ்சுகிறோம்? 
கடந்த 70 ஆண்டுகளாக இந்தியா கண்டு கொண்ட சனநாயகப் பாதையில் தடம் பதித்துவரும் நம் சனநாயக அரசியலார் ஏன் இப்போது கலங்க வேண்டும்? இதுவரை ஆட்சி நடத்தியோரெல்லாம் மிகப்பெரிய சனநாயகவாதிகளா? மிகப்பெரிய சமதர்மவாதிகளா? சமயச் சார்பற்ற நம்பிக்கை கோட்பாட்டில் அசைக்க முடியாதவர்களா? இல்லையே! பின் ஏன் பாரதிய சனதா ஆட்சி மோடி தலைமையில் மீண்டும் அரசோச்ச வந்தமை கண்டு கவலை கொள்கின்றோம். 
வகுப்புவாத அரசியலுக்கு கொடுக்கப்பட்ட வெளி (ளயீயஉந) எது?
மோடி தலைமையிலான பாரதிய சனதா ஆட்சி மீண்டும் ஆட்சிக் கட்டிலில் ஏறுமானால் சனநாயகம் மிகப்பெரிய சரிவைச் சந்திக்கும் என்று எச்சரித்து வந்த நிலையில், இந்த சன
நாயகத்துக்கான குரல் மக்களிடமிருந்து எழுந்த ஒன்றா? என்று கேட்டால் அதற்கு எங்கு பதில் தேடுவது? மதவாத கட்சிகளைப் புறக்கணிப்போம் என்று ஓங்கி குரல் கொடுத்தோமே. 
நம் குடிமக்களுக்கு மதவாதம் என்ன செய்யும் என்பது பற்றியோ, மதவாதம், மத அடிப்படைவாதம் பற்றியோ எப்போது தெளிவு படுத்தியுள்ளோம்? பெரும்பான்மை இந்து மக்கள் வாழும் இந்திய நாட்டில் மதவாதம் பற்றிப் பேசுகின்றபோது, இந்து மதம் சார்ந்த மக்கள் எத்தனை பேர் இக்கருத்தை ஏற்றுக் கொள்வர்? மதச்சார்பின்மை என்பது சனநாயகத்தின் மிகப்பெரிய தார்ப்பரியம் மதச்சார்பின்மை மதமில்லாமை அல்ல. மதத்தை மறுப்பதல்ல. இந்தியப் பன்முகச் சமய நாட்டில் மதங்களை சமமாக நடத்துதல் என்பதையும் மதங்களுக்கு அரசியலில் எந்தப் பங்கும் இல்லை என்பதையும் குடிமக்களுக்குப் புரியவைத்துள்ளோமா? மதச்சார்பின்மையை ஏற்காத நாடு அழிந்துபோகும் என்பதையும் ளுநஉரடயசளைந டிச யீநசiளா-சமய சார்பின்மையை ஏற்றுக்கொள் அல்லது அழிந்துபோ என்று கூறி மறைந்த பிரபல மனித உரிமை நீதியரசரின் கூற்றை, நாம் மக்களுக்குச் சொல்லியிருக்கிறோமா? நமக்கொரு அரசியல் சாசனம் உண்டென்பதையும் அச்சாசனத்துள் அரிய விழுமியங்கள் உள்ளன என்பதையும் இவ்விழுமியங்கள் மானுட உரிமைகளைத் தாங்கியவை என்று என்றாவது எங்காவது மக்களுக்குக் கொண்டு சேர்த்திருக்கோமா? எங்கு சமதர்மிகளும், மதசார்பற்ற மானுடர்களும் தோற்றனரோ அங்கு மதவாதம் வென்றது.
மண்ணில் ஊன்றா சனநாயகம்
சனநாயகத்திற்கும் இம்மண்ணிற்கு மான தொடர்பு என்ன? இந்தியாவில் வாழ்ந்து மறைந்த அரசியல் விமர்சகர் ரஜினி கோத்தாரி அவர்கள் இந்தியாவில் ஏன் சனநாயகம் வேரூன்றவில்லை என்ற கேள்விக்கு தரும் பதில் இங்கு சிந்திக்கத் தக்கது?
“இந்தியாவில் சனநாயகம் மக்களின் சமத்துவம், சகோதரத்துவம் என்ற கோரிக்கைகளால் உருவான ஒன்றல்ல. இந்திய சனநாயகம் இந்திய மண்ணில் வேரூன்றாமல், மேலிருந்து நடப்பட்ட (ஐஅயீடயவேநன) ஒன்று என்பார்”.
இங்கு சனநாயக அரசும் சனநாயக நிறுவனங்களும் உள்ளன. ஆனால் சனநாயகம் பண்பு இல்லை. இங்கு மக்கள் சனநாயகத்தைப் பழக்கப்படுத்திக் கொள்ளவில்லை (கூhநல னடிn’வ யீசயஉவiஉந). 
“சனநாயகமும் இந்திய சமூக அமைப்பும் ஒன்றுக்கொன்று அமைப்பை
யும், அதன் கலாச்சாரத்தையும் மாற்றுவதற் கான எந்த முயற்சியும் எடுக்காமல், சனநாயகம் திணிக்கப்பட்டது.”
சமூக அமைப்பை, இச்சமூகத்தில் வலுவாகக் கட்டப்பட்ட படிநிலை அமைப்பான சாதிய கட்டுமானம் உடைய
வில்லை. மூடநம்பிக்கைகள் கேள்விக் குள்ளாக்கப்படவில்லை. சமயத்தின் பெயரால் நியாயப்படுத்தப்பட்ட சனாதன
அமைப்புகள், சித்தாந்தங்கள் கேள்விக் குள்ளாக்கப்படவில்லை. 
இந்நிலைக்குச் சரியான எடுத்துக்காட்டு கேரளம் மாநிலமே. சாதிய மற்றும் வர்க்க ஒடுக்குமுறைகளைக் கேள்விகேட்ட நாராயண குருவும், வைகுண்ட அய்யங்காளியும் தோன்றும் மாநிலத்தில், இதைக் காட்டிலும் தேர்தல் மூலம் முதல் பொதுவுடைமை கட்சி ஆட்சியேற்ற கேரளத்தில், சபரிமலையில் பெண்கள் நுழைதலை மறுத்த மனோபாவத்தை என்ன சொல்வது? இன்றைய கேரள அரசு உச்சநீதிமன்றத் தீர்ப்பை மதித்ததால், 19 பாராளுமன்ற இடங்களை இழந்தது. கேரளத்தில் பா.ச.கவின் வெற்றியைத் தடுக்க மதச்சிறுபான்மையினர் எடுத்த முயற்சி பலனளித்தது. ஆனால் இடது சாரிகளின் தோல்வி எதைக் காட்டுகிறது? சமூக அமைப்பில், காலச்சாரத் தளத்தில் நூறு சதவீதம் கல்வி அறிவு படைத்த கேரளம் கூட சனநாயக சிந்தனையை ஏற்கவில்லை. பாரதிய சனதா எனும் வகுப்புவாத நச்சு கேரளத்தில் கால்பதித்துவிடுமோ என்று மதச்சிறுபான்மையினர் கொண்ட அச்சத்தில் கேரளம் தப்பித்தது. ஆனால் கேரள மக்கள் சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது குறித்து எழுந்த போராட்டம் தரும் செய்திகள் பற்பல.
இந்தியத் துணைக்கண்டம் மட்டுமே சனநாயக நெறியை வழுவாமல் காத்து வருகிறது என்று பெருமை பாராட்டிக் கொள்வதில் கொஞ்சம் உண்மை இருந்தாலும் சனநாயகம் உள்ளடக்கிய விழுமியங்கள் இன்னும் ஊடுருவவில்லை என்பதே பொருள். இந்திய மாநிலங்களில் பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் 400 ஆண்டு கால மசூதி தகர்க்கப்படுகிறது. இவ்வன்முறையை நிகழ்த்திய எவரும் தண்டிக்கப்படவில்லை. சனநாயகத்திற்கு எதிரான மதவாதம் தோற்கவில்லை. சாதி ரீதியாக பிளவுபட்டு நின்ற இருபெரும் சக்திகள், தேர்தலில் அதிக இடங்களைப் பெறவே சாதி ரீதியாக ஒன்றிணைக்கின்றன. குடிமக்களை இங்கு இணைப்பது மதவாதமா? சாதியா? இவ்விரண்டும் சாகாவரை, சனநாயகம் சாத்தியமில்லை. வகுப்புவாதம், மதவாதம், மத அடிப்படை வாதங்களை எதிர்கொள்ளும் ஆற்றல் இன்றைய கட்சிகளுக்கு இல்லை.
காங்கிரஸ் தலைவரின் நம்பிக்கையூட்டும் பரப்புரை களில் மதவாதம் மிகப்பெரிய அளவில் இடம்பெறவில்லை. வகுப்புவாதக் கருத்தியலுக்கு மாற்றுக்கருத்தை மதசார்பற்ற கட்சிகள் முன்வைக்கவில்லை. “உத்திர பிரதேச மாநிலத் தேர்தலில் அகிலேஷின் சமாஜ்வாதி கட்சியும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் வாதி கட்சியும்  அஜித் சிங்கின் ராஷ்டிரிய லோக் தளமும் சமூக நீதிபற்றி பேசினாலும், ஒவ்வொரு கட்சிக்குப் பின்னும் ஒரு சாதியும், குடும்ப அரசியலும் இருப்பதைப் பார்க்க முடிகிறது. அரசு அதிகாரத்தைக் குடும்பங்களே பகிர்ந்து கொள்வதில் என்ன சமூக நீதி இருக்கிறது? இப்போக்கைக் கவனித்து வரும் மக்கள் வேறு முடிவெடுக்கின்றனர். இக்கட்சிகள் பாரதிய சனதாவுக்கு ஈடுகொடுக்கும் நிலையில் இல்லாமைக்கு என்ன காரணம்? சித்தாந்தத் தெளிவும் நிறுவனக் கட்டமைப்பும் பணபலமும் மிக்க பாரதிய சனதாவை எதிர்த்து நிற்கும் வலு இக்கட்சிகளுக்கு இல்லை” - இந்து நாளிதழ் தலையங்கம் 5.6.2019.
மதவாதிகளை இன்று எதிர்ப்பதற்கு ஆழமான கருத்தியல் பலம் ஒன்று தேவை. இடது சாரி கட்சிகளும் இதில் தோற்றுப்போய்விட்ட அவலத்தைத்தான் பார்க்கிறோம். பழங் குடியினரை பெரும்பான்மையாகக் கொண்ட திரிபுரா மாநிலம் இன்று இடதுசாரிகள் வசம் இல்லை. ஏறக்குறைய 30 ஆண்டுகாலம் முதல்வராக இருந்தவர் தோழர் மாணிக் சர்க்கார். நேர்மையாகவும் எளிமையாகவும் வாழ்ந்த இம்மனிதரின் ஆட்சியை காங்கிரஸ் கைபற்றவில்லை. மாநில ஆட்சியைக் கைபற்றிய பா.ச.க இரண்டு நாடாளுமன்ற தொகுதிகளையும் கைப்பற்றியது. எதிர்கட்சியான காங்கிரசை ஏற்க மறுத்த திரிபுராவின் குடிமக்கள் ஏன் பாரதிய சனதாகட்சியை ஆதரிக்கின்றனர்? உண்மையான இடதுகள் ஆட்சியில் மக்களுக்கான சித்தாந்தம் இருந்திருக்க வேண்டும். பெரும்பான்மை பழங்குடிகள் சமத்துவத்தை அனுபவித்திருக்க வேண்டும். இக்கொள்கைகளுக்கெல்லாம் எதிரான மதவாத பா.ச.க திரிபுராவில் எப்படி காலூன்றியது? மக்களுக்கு எதிரான பா.ச.க வெல்லுகையில் மக்களுக்கான கொள்கை எது என்று கண்டறியத் தவறிவிட்டோமோ?
கால் நூற்றாண்டளவும் தூய்மையான ஆட்சி நடத்தி வெற்றி கண்ட சோதி பாசுவின் மேற்கு
வங்காளத்தில் இன்று மம்தாவும் ஆட்டங் காண்கிறார்.
காங்கிரசையும் காணவில்லை. கலாச்சார வளமும், அறிவு சீவிகளும் நிறைந்த வங்காளம் ஏன் காவி வண்ணத்தை ஏற்கிறது. வங்காளத்தில் பதினேழு இடங்களை பாரதிய சனதா கைப்பற்றியுள்ள நிலையில், முழு மாநிலமும் காவியாகும் காலம் தூரத்தில் இல்லை. 
இந்திய சனநாயகத்தின் எதிர்பாரா வெற்றிக்கு என்ன காரணம்?
சில ஆண்டுகளுக்கு முன் இந்து நாளிதழ் வெளியிட்ட ஆய்வுக்கட்டுரை இதைத் தெளிவு படுத்தும். “இந்தியாவில் சனநாயகம் இன்னும் நடை
முறையில் உள்ளது. காரணம் என்ன? இந்தியர்கள் சனநாயகத்தில் நம்பிக்கையுடையவர்கள் என்பதால் அல்ல. சனநாயகம் எனும் கருவிலே தமது அதிகாரத்தைத் தக்க வைக்கவும் உயர்த்தவும் உதவும் ஆயுதம் என்பதாலேயே” அது சாதி ஆதிக்கத்தை வளர்க்க, மத ரீதியாக மக்களைத் துருவப்படுத்தி, ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற சனநாயகம் தரும் தேர்தல் உதவுகிறது.
என்ன செய்ய போகிறோம்?
தேர்தலின்போது மட்டும் பரப்புகள் வழி மக்களைச் சந்தித்து பேசுவது மட்டும் போதாது.
மதவாத பாரதிய சனதாவின் தொண்டர்கள் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பயிற்சிபெற்ற உழைப்பவர்களல்லர். எப்போதும் களத்திலிருப்பவர்கள். மதசார்பற்ற அணியினர் மக்களிடம் பதிந்து நிற்கும் கருத்தியலை, மக்களுக்கு எதிரான கருத்தியலை எப்படி தகர்க்கப் போகிறோம்?  

Comment