No icon

Popr Francis

ஊருக்கும் உலகுக்கும் (Urbi et Orbi) தமிழாக்கம்:

புனித பேதுரு பசிலிக்காவில் கொரோனோ பெருந்தொற்றால் உலகம் பாதிக்கப்பட்டுள்ள இவ்வேளையில் மார்ச் 27 ஆம் தேதி திருத்தந்தை வழிநடத்திய சிறப்புமிக்க செபவேளையில் வழங்கிய உரை..  மாற்கு 4 : 35-47

 

A humble Request

உலகில் கொரோனா தாக்குதல் நடந்துள்ள  இவ்வேளையில் திருத்தந்தையின் செய்தி

மக்கள் யாருமின்றி காலியாக இருந்த வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில், மார்ச் 27 ஆம் தேதி  வெள்ளிக்கிழமை மாலை ஆறு மணிக்கு, அதாவது இந்திய-இலங்கை நேரம் இவ்வெள்ளி இரவு 10.30 மணிக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையேற்று வழிநடத்திய மிகவும் சிறப்பு வாய்ந்த ஜெபவழிபாடு  நடைபெற்றது. உலகின் அனைத்து கத்தோலிக்க      சமூகத்  தொடர்பு சாதனங்கள் வழியாக, இந்நிகழ்வு நேரலையில் ஒளிபரப்பப்பட்டது.

ஏறத்தாழ ஒரு மணி நேரம் நடைபெற்ற இச்செப நிகழ்வில், முதலில் இறைவார்த்தை வாசிக்கப்பட்டதுஅதனைத் தொடர்ந்து  மன்றாட்டுக்கள் இறைவனை நோக்கி எழுப்பப்பட்டுதிருநற்கருணை ஆராதனை நடைபெற்றதுஇந்நிகழ்வின் இறுதியில்ஊர்பி எத் ஓர்பி (ருசbi நவ டீசbi)’  செய்தி வழங்கப்பட்டு, சிறப்பு ஆசீர் கொடுக்கப்பட்டது. இதனைப் பெறுகிறவர்களுக்குப் பரிபூரணபலனும் கிடைக்கிறது.

இச்செப நிகழ்வின்போது, வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் மையக் கதவுக்குமுன், உரோம் மக்களுக்கு சுகமளிக்கும் (ளுயடரள ஞடியீரடi சுடிஅயni) அன்னை மரியா திருப்படமும், புனித மர்ச்செல்லோ (ளுயn ஆயசஉநடடடி) ஆலயத்தில் வணங்கப்பட்டுவரும் புதுமை திருச்சிலுவையும் வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இச்செப நிகழ்வில் இறைவார்த்தை வாசிக்கப்பட்ட பின்னர், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வழங்கிய தியானச் சிந்தனையை தமிழக இறைமக்களுக்காகநம் வாழ்வு வார இதழ் தமிழாக்கம் செய்து, டிஜிட்டல் முறையில் வெளியிடுகிறதுஇதனைப் படிக்கும் ஒவ்வொருவரும் தங்களுடைய -மெயில், வாட்ஸ்அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் வழியாக பகிர்ந்து  அனைவருக்கும் கொண்டு சேர்க்கும்படி அன்புடன் வேண்டுகிறேன்.

திருத்தந்தையின் செய்தி  ஊருக்கும் உலகுக்கும் (Urbi et Orbi)

 

அன்றொரு நாள் மாலைநேரம் (மாற் 4:35).  நாம் சற்றுமுன் கேட்ட நற்செய்திப் பகுதி இப்படித்தான் தொடங்குகிறதுதற்சமயம், பல வாரங்களாகவே மாலை நேரமாகவே விளங்குகிறது. நம்முடைய சதுக்கங்களையும் நம்முடைய தெருக்களையும் நம்முடைய நகரங்களையும் அடர்த்தியான இருள் சூழ்ந்திருக்கிறது. அது  நம்முடைய வாழ்க்கையைக் கைப்பற்றி சூறையாடி, ஒவ்வொன்றையும் செவிடாக்கும் அமைதியுடனும் கடுந்துயர்  நிறைந்த வெற்றிடத்துடனும் நிறைத்துகடந்து செல்லும் ஒவ்வொன்றையும் தடுத்து நிறுத்துகிறதுகாற்றினில் அதனை நாம் உணர்கிறோம்மக்களின் செய்கைகளில் நாம் அதனைக் காண்கிறோம். அவர்களுடைய பார்வைகளே அவற்றைக் காட்டிக்கொடுக்கின்றன. நம்மை நாமே அஞ்சுபவர்களாகவும் தொலைந்தவர்-களாகவும்  கண்டுணர்கிறோம். நற்செய்திப் பகுதியில் இடம்பெற்றுள்ள சீடர்களைப் போல நாமும் எதிர்பாராத கொந்தளிக்கிற பெரும்புயலில் சிக்கியிருக்கிறோம்அதே படகில் பலவீனமானவர்களாக, தன்னி லையிழந்தவர்களாக நாமும் உணர்ந்திருந்தாலும்ஆனால் அதே சமயம், முக்கியமானவர்களாக, தேவையானவர்களாகஅனைவரும் ஒன்றிணைந்து துடுப்பு வளிக்க அழைக்கப்பட்டவர்களாகநாம் ஒவ்வொருவரும் ஒருவர் மற்றவரைத் தேற்றுவதற்கு தேவையுள்ளவர்களாக உணர்ந்திருக்கிறோம். இந்தப் படகில்... நாம் அனைவருமே இருக்கிறோம்.  “ சாகப்போகிறோம் (மாற் 4:38என்று ஒருமித்த குரலில்  கவலையுடன் கூக்குரலிட்ட அந்தச் சீடர்களைப் போல, நாமும் கூட, நம்மைப் பற்றி மட்டுமே சிந்திப்பதைத் இன்னும் தொடராமல்,   நாம் அனைவரும் ஒன்றிணைந்து இதனைச் செய்ய முடியும் என்று நாமும் உணர்ந்திருக்கிறோம்.

                இந்த நிகழ்ச்சியில் நம்மை நாமே கண்டுணர்வதன்பது மிகவும் எளிதாகும். ஆனால் இயேசுவின் மனப்போக்கைப் புரிந்துகொள்வதென்பது மிகவும் கடினமாக உள்ளது. அவர்தம் சீடர்கள் இயற்கையாகவே முற்றிலும் எச்சரிக்கப்பட்டுநம்பிக்கையிழந்து இருக்கும்போதுமுதலில் மூழ்கும் படகின் ஒருபகுதியானஅதன் பிற்பகுதியில், தூங்கிக் கொண்டிருக்கிறார்அப்படி என்ன செய்து கொண்டிருக்கிறார்பெரும்புயல் அடித்துக்கொண்டிருக்கும் போது, தந்தையாம் இறைவன் மீது நம்பிக்கை வைத்து, அவர் ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருக்கிறார். நற்செய்திகளில் இந்த ஒரே ஒருமுறை மட்டுமே இயேசு தூங்கிக்கொண்டிருப்பதாக நாம் பார்க்கிறோம்அவர் விழித்தெழுந்துகாற்றையும் கடலையும்கடிந்து, அமைதியை ஏற்படுத்திய பிறகு, சீடர்களைக் கடிந்து கொள்ளும் குரலில், அவர்கள் பக்கம் திரும்பி, ‘ ஏன் அஞ்சுகிறீர்கள்உங்களுக்கு இன்னும் நம்பிக்கை இல்லையா?’ (வசனம். 40) என்று கேட்கிறார்.

                நாம் புரிந்துகொள்ள முயற்சிப்போமாகஇயேசுவினுடைய நம்பிக்கையுடன்  வேறுபட்டு இருக்கிற  சீடர்களுடைய இறைநம்பிக்கையில் குறைபடுவது என்னஅவர்கள் அவரில் நம்பிக்கை கொள்வதை இடைநிறுத்தவில்லை. உண்மையில், அவர்கள் அவரிடம் கோரிக்கைவிடுத்தனர்.

போதகரே, சாகப்போகிறோமே! உமக்கு கவலையில்லையா?” (வசனம் 38) என்று ஓலமிட்டு அவரை உதவிக்கு அழைத்ததை நாம் பார்க்கிறோம்உமக்கு கவலையில்லையா?.  இயேசுவுக்கு அவர்கள் நலனில் அக்கறையில்லை, அவர்களைப் பாதுகாக்கப் போவதில்லை என்று அவர்கள் நினைக்கின்றனர். என்மீது அக்கறையில்லையா? என்பதை நாம் கேட்கும்போது, அதுவே நம்மையும் நம் குடும்பங்களையும் மிகவும் காயப்படுத்துகிற ஒன்றாக அமைந்துவிடுகிறதுஅந்த வார்த்தை இயேசுவையும் அசைத்துப் பார்த்திருக்க வேண்டும்ஏனெனில், அவரே, மற்ற எல்லாரையும் விட, நம்மீது அக்கறை கொண்டவராக இருக்கிறார்உண்மையில், அவர்கள் அவரை உதவிக்கு அழைத்தபோது, அவர், அவர்தம் சீடர்களுடைய அவநம்பிக்கையிலிருந்து அவர்களை மீட்கிறார்.

                பெரும்புயல் நம்முடைய பலவீனத்தை வெளிப்படுத்திஅந்தத் தவறான - மேம்போக்கான நிச்சமாக  நிகழக்கூடியவைகளை அம்பலப்படுத்துகிறது. அவற்றைச் சுற்றிதான் நாம்  நம்முடைய அன்றாட கால அட்டவணைகளையும் (schedules) நம்முடைய திட்டங்களையும் நம்முடைய பழக்கங்களையும் நம்முடைய முன்னுரிமைகளையும் கட்டமைத்திருக்கிறோம்நம்முடைய வாழ்வையும் நம்முடைய குழுமங்களையும்  (communities) பேணி, ஊட்டமளித்து, பாதுகாத்து, வலிமைப்படுத்தும் மிகவும் முக்கியமானவைவை எழுச்சியற்றவைகளாகவும் பலவீனமானவைகளாகவும் மாற நாம் அனுமதித்துவிட்டோம் என்பதை அது நமக்குக் காட்டுகிறதுநம்முடைய முன்அடைத்த வைக்கப்பட்ட கருத்துருக்களையும்  (prepackaged ideas) நம்முடைய மக்களின் ஆன்மாக்களை வளப்படுத்தும் மறதியையும் வெறுமையாக்கி வைத்துவிடுகிறது. நம்மைக்காப்பாற்றும் ((Save) என்று   ஊகித்தறிந்த சிந்தனை மற்றும் செயல்பாட்டு வழிகளுடன் நம்மை மயக்கமுறச் செய்யும் (anesthetize) இந்த முயற்சிகள்  அனைத்தும், அதற்கு மாறாக, நம்மை திறமையற்றவர்கள்  என்று நிலைநிறுத்தி, நம்முடைய வேர்களாடு நம்மைத் தொடர்புக் கொள்ளச் செய்து, நமக்கு முன் சென்றவர்களுடைய நினைவை உயிர்ப்புடன் கொண்டிருக்கச் செய்யும்.நாம் நோய் எதிர்ப்புப் பொருளிலிருந்து (antibodies) நம்மை நாமே விலகி நிற்கச் செய்கிறது. நாம் இன்னலை எதிர்த்து நிற்கச் செய்கிறது.

                இந்தப் பெரும்புயலில்நம்முடைய ஆணவத்திற்கு மாற்றுருவம் தந்து, நம்முடைய சாயல் குறித்து மட்டுமே எப்போதும் கவலைப்படுவதை கீழே உதிரச் செய்து,  (பேறுபெற்ற) பொதுவுடைமை (Common Belongingஎன்பதை மீண்டும் ஒருமுறை ஆரத் தழுவி, சகோதர சகோதரிகள் என்பதே நம் உடைமை என்பதிலிருந்து விலகாமல் இருப்பதே இப்படிப்பட்ட ஒரே மாதிரியானவற்றின் புறத்தோற்றமாகும்.

ஏன் அஞ்சுகிறீர்கள்? உங்களுக்கு இன்னும் நம்பிக்கை இல்லையா?” ஆண்டவரே, உம்முடைய இந்த வார்த்தை இம்மாலை வேளையில் எங்களைத் தட்டி எழுப்புகிறது. எங்கள் மீது, எங்கள் அனைவர் மீதும் அக்கறை கொள்ளச் செய்கிறதுஇந்த உலகில், நாங்கள் அன்பு செய்வதைவிட நீர் எம்மை அன்புச் செய்கிறீர். தலை தரிக்கும் வேகத்தில் (breakneck speed) நாங்கள் ஒடிக் கொண்டிருக்கிறோம். ஆற்றல் வாய்ந்தவர்களாக, எதையும் செய்ய இயலக்கூடியவர்களாக நாங்கள் உணர்கிறோம்இலாப போரசையால். அற்பமானவற்றில் நாங்கள் சிக்கிக்கொள்ள எங்களை அனுமதிக்கிறோம். பரபரப்பால் நாங்கள் வஞ்சகமாக கவர்ந்திழுக்கப்படுகிறோம்உம்முடைய கூக்குரலுக்கு நாங்கள் நிற்கவில்லை. போர்களோ அல்லது உலகமெங்கும் அரங்கேறும் அநீதிகளாலோ எங்களை அசைத்துப் பார்க்கவில்லை. ஏழைகளின் அழுகுரலுக்கும் இந்த நலிவுறும் இந்தக் கிரகத்தின்  அழுகுரலுக்கும் நாங்கள் செவிசாய்க்கவுமில்லைஎதையும் பொருட்படுத்தாமல், நோயுற்றுள்ள இந்த உலகில் நாங்கள் நலமுடனே வாழ்ந்திடுவோம் என்று நினைத்துக் கொண்டே தொடர்ந்து சென்றோம்தற்போது நாங்கள் புயல்சூழ்ந்த கடலில், தத்தளித்து, “ஆண்டவரே, எழுந்திரும் என்று உம்மை இரந்து நாங்கள் மன்றாடுகிறோம்.

ஏன் அஞ்சுகிறீர்கள்? உங்களுக்கு இன்னும் நம்பிக்கை இல்லையா?” ஆண்டவரே, நீர் எங்களை அழைக்கிறீர். இறைநம்பிக்கைக் கொள்ள எங்களை அழைக்கிறீர். அது நீர் இருக்கிறீர் என்று நம்புவதைவிட உம்மிடம் வருவதும் உம்மில் நம்பிக்கை கொள்வதும் ஆகும். “மனந்திரும்புங்கள் (Be Converted) என்ற உம்முடைய குரல் இந்தத் தவக்காலத்தில் எதிரொலிக்கிறது.  “உங்கள் முழு இதயத்தோடு என்னிடம் திரும்பி வாருங்கள் (யோவேல் 2:12). இந்தச் சோதனைக் காலத்தை தேர்ந்தெடுப்பதற்கான காலமாக (Choosing tome ) வலிந்து கைக்கொள்ள எம்மை நீர் அழைக்கிறீர்.

உம்முடைய தீர்ப்பின் காலம் இதுவன்று, மாறாக இது எம்முடைய தீர்ப்பின் காலம்முக்கியத்துவம் வாய்ந்தவை எவைகடந்து போகக் கூடியவை எவை என்பதைத் தேர்ந்தெடுப்பதற்குரிய காலம். அவசியமற்றவையிடமிருந்து அவசியமானவற்றைப் பிரித்தெடுக்கிற காலம்உம்மீதும் மற்றவர்மீதும் அக்கறை கொண்டு எம்முடைய வாழ்வை மீண்டும் புனரமைக்கிற காலம் இதுவேஇந்தப் பயணத்தில் பயம் இருந்தபோதும். தங்களுடைய வாழ்வையே தந்து எதிர்வினையாற்றிய முன்னுதாரணமிக்க எண்ணிறந்த தோழர்களை நாங்கள் பார்க்க இயலும்இந்த ஆற்றல் தூய ஆவியாரால் பொழியப்பட்டு, துணிச்சல்மிக்க, தாராளமிக்க தன் மறுப்பால் அமைக்கப்பட்டுள்ளதுஆவிக்குள் நிறைந்த வாழ்வேநம்முடைய இந்த வாழ்வு எப்படி ஒன்று மற்றொன்றுடன் பின்னி நெய்யப்பட்டுசெய்தித் தாள்களிலும் இதழ்களிலும்

தலைப்புச் செய்திகளாகத் தோன்றாமல், அல்லது  காட்சி மேடைகளில்  பிரமாண்ட மிடுக்கு நடை போடாமல், (Cat Walk) சாதாரண மக்களால் - பெரும்பாலும் மறக்கப்பட்ட மக்களால்பேணி பாதுகாக்கப்பட்டு, எவ்வித சந்தேகத்திற்கு இடமின்றிஇந்நாட்களில், நம் காலத்து நிகழ்வுகளை அறுதி செய்து தீர்மானித்து எழுதுகிறவர்கள் இவர்கள்.. ஆம். மருத்துவர்கள், செவிலியர்கள், அங்காடித் தொழிலாளர்கள், சலவைத் தொழிலாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள், நலப் பணியாளர்கள், போக்குவரத்துப் பணியாளர்கள், சட்ட ஒழுங்கை நிலைநாட்டுபவர்கள், தன்னார்வலர்கள், குருக்கள், இருபால் துறவிகள், மற்றும் எவரும் தங்களுக்குத் தாங்களே மீட்பை அடைந்திட முடியாது என்பதைப் புரிந்து சேவையாற்றும் ஏனையோர்..

இந்தத் துயரத்தின் நடுவில், நம் மக்களின் அதிகாரப்பூர்வமான வளர்ச்சி சோதிக்கப்படும் இவ்வேளையில்,   எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக (யோவா 17: 21) என்ற இயேசுவின் குருத்துவ செபத்தை நாம் அனுபவித்திடுவோம். எண்ணற்ற மக்கள் ஒவ்வொரு நாளும் பொறுமையை செயல்படுத்தி, நம்பிக்கையை அளிக்கின்றனர். பேரச்சத்திற்குப் பதிலாக பகிரப்பட்ட பொறுப்புணர்வை  விதைப்பதில் அக்கறை செலுத்துகின்றனர்.

எத்தனையோ பெற்றோர், பெற்றோரின் பெற்றோர் மற்றும் ஆசிரிய பெருமக்கள் தங்களுடைய அன்றாட சிறு சிறு செயல்களால், தங்களுடைய வழக்கமான பணிகளுக்கு தக்கவாறு பொருந்தி, இந்த குழப்பான சூழ்நிலையை எப்படி எதிர்கொள்வது எப்படி நம்முடைய குழந்தைகளுக்கு காட்டுகின்றனர். தங்களுடைய  கவனத்தை ஏறெடுத்து, செபத்தில் பேணி வளர்க்கின்றனர்எண்ணற்றார் செபித்து, உதவி செய்து, எல்லாருடைய நலனுக்காகவும் பரிந்துரைக்கின்றனர்செபமும் அமைதியான  வழிபாடும் நம்முடைய வெற்றிமிக்க ஆயுதங்களாக உள்ளன.

                ஏன் அஞ்சுகிறீர்கள்? உங்களுக்கு இன்னும் நம்பிக்கை இல்லையா?” நமக்கு மீட்புத் தேவையாக உள்ளது என்பதை நாம் உணரும்போது இறைநம்பிக்கை தொடங்குகிறது. நாம் நமக்கு நாமே சுயதேவையைப் பூர்த்திச் செய்கிறவர்கள் இல்லை. நாம் தோற்றுவிப்பவர்கள்தான்முற்காலத்து கப்பலோட்டிகளுக்கு திசையைக்  காண விண்மீண்கள்தேவைப்பட்டது போல ஆண்டவர் நமக்குத் தேவைப்படுகின்றார். நம்முடைய வாழ்க்கைப் படகுகளில் இயேசுவை நாம் வரவேற்போமாக. நம்முடைய பயங்களை அவர் வென்றெடுக்கும் பொருட்டுஅவரிடம் நாம் ஒப்படைப்போமாக. அவர் நம்மோடு பயணத்தில் இருக்கும்போது நம் படகிற்கு ஒருபோதும் விபத்து நேரிடாது என்பதை அந்தச் சீடர்களைப் போல நாம் அனுபவித்திடுவோம். ஏனெனில், இதுவே கடவுளின் வல்லமை. நமக்கு நேரும் அனைத்தையும், ஏன் கெட்டதே நடந்தாலும்கூட அதனை அவர் நன்மையாக மாற்றுவார், நம் புயல்களுக்கு அவர் அமைதியைக் கொணர்வார்; ஏனெனில், இறைவனுடன் வாழ்வு என்பது மரணிப்பதில்லை.

                நம்மைச் சுற்றி ஒவ்வொன்றும் தட்டுத் தடுமாறி துயரத்துடன் நடக்கும் இந்நேரங்களில் நமக்கு வலிமையை  தரும் தோழமைiயும் ஆதரவையும் செயல்முறைப்படுத்த பெரும்புயலின் நடுவில், ஆண்டவர் நம்மை கூப்பிட்டு, மீண்டும் தட்டியெழுப்பி, அழைக்கிறார். நம்முடையஉயிர்ப்பு நம்பிக்கையை மீண்டும் தட்டியெழுப்பவும் அதற்கு புத்துயிரளிக்கவும் ஆண்டவர் எழுச்சியூட்டுகிறார்நம்மிடம் நங்கூரம் ஒன்று உள்ளதுஅவர்தம் சிலுவையால் நாம் காப்பாற்றப்பட்டோம்நம்மிடம் சுக்கான் ஒன்று உள்ளது: அவர்தம் சிலுவையால் நாம் மீட்கப்பட்டோம். நம்மிடம் நம்பிக்கை ஒன்று உள்ளது: அவர்தம் சிலுவையால் நாம் குணமடைந்தோம், ஆரத் தழுவப்பட்டோம். ஆகையால் அவர்தம் மீட்கும் அன்பிலிருந்து நம்மை ஒன்றும் பிரிக்க இயலாது.   தனித்திருத்தலின் (ளைடிடயவiடிn) நடுவில், கனிவின்றி, சந்திப்பதற்கான வழியுமின்றி நாம் துன்புறும்போதுபலவற்றை இழந்துவிட்டதுபோன்று உணரும் போது,  ‘அவர் உயிர்த்துவிட்டார்; நம்மோடு வாழ்கிறார்  என்று நம்மைக் காப்பாற்றும் அந்த முழக்கத்திற்கு மீண்டும் ஒருமுறை நாம் செவிசாய்ப்போமாக. நம்மைக் காண்பவர்களைக் நாம் காண்பதற்கு, வலிமைப்படுத்துவதற்கு, அடையாளம் காணுவதற்கு, நமக்குள் வாழும் அருளைப் பேணி வளர்ப்பதற்கு, நமக்காக காத்திருக்கும் வாழ்வை மீண்டும்

கண்டடைய சிலுவையிலிருந்து ஆண்டவர் நம்மைக் கேட்கிறார்மங்கி எரியும் திரியை நாம் அணைக்காதிருப்போமாக (காண்க எசா 42:3). அது ஒருபோதும் தடுமாறாதுநம்முடைய நம்பிக்கையை நாம் மீண்டும் தூண்டி எழுப்புவோமாக.  அவருடைய சிலுவையை ஆரத் தழுவுதல் என்றால் நிகழ்காலத்து இன்னல்கள் அனைத்தையும் ஆரத்தழுவுவதற்காக ஊக்கத்தைக் கண்டடைவதும்அதிகாரத்திற்கான, உடைமையாக்கிக் கொள்வதற்கான நம்முடைய பேராவலையும் தூய ஆவியார் தூண்டுதல் தரவல்ல படைப்புத் திறனுக்கு உரிய இடத்தைத் தரும்பொருட்டு, தற்சமயம் கைவிடுவது ஆகும்ஊக்கத்தைக் கண்டடைவது என்பதற்கு பொருள் என்னவெனில், ஒவ்வொருவரும் தாங்கள் அழைக்கப்பட்டுள்ளோம் என்பதைக் கண்டுணர்வதற்கான வெளியை உருவாக்குவது, விருந்தோம்பல், சகோதரத்துவம் மற்றும் தோழமைக்கான புதிய வடிவங்களை அனுமதிப்பது ஆகும்அவர்தம் சிலுவையால், நம்பிக்கையைதழுவும்பொருட்டுநாம் மீட்கப்பட்டிருக்கிறோம்.அது அனைத்து வழிமுறைகளையும் சாதகமான வழிகளையும் பேணி , வலிமைப்படுத்தி, நம்மையும் பிறரையும் பாதுகாக்க உதவுவதாக. நம்பிக்கையைஆர்வமாக ஏற்றுக்கொள்ளஆண்டவரை ஆர்வமாக ஏற்றுக்கொள்வீர்களாக. அந்த இறைநம்பிக்கையின் வலிமையே, பயத்திலிருந்து நம்மை விடுவித்து, நமக்கு நம்பிக்கை தருகிறது.

ஏன் அஞ்சுகிறீர்கள்? உங்களுக்கு இன்னும் நம்பிக்கை இல்லையா?” அன்பார்ந்த சகோதர சகோதரிகளே, புனித பேதுருவின் உறுதியான பாறைப்போன்ற விசுவாசத்தை எடுத்துரைக்கும் இவ்விடத்திலிருந்து, இந்த மாலைப் பொழுதில் மக்களின் ஆரோக்கியமும் கொந்தளிக்கும் கடல் நடுவே வழிகாட்டும் விண்மீனான அன்னை மரியாவின் பரிந்துரையின் வழியாக, உங்கள் அனைவரையும் ஆண்டவரிடம் ஒப்படைக்க விழைகிறேன்உரோமையையயும் ஒட்டுமொத்த உலகையும் சூழ்ந்துள்ள இத்துயரமான நேரத்தில், ஆறுதல் அளிக்கும் வகையில் இறைவனின் ஆசீர் இறங்கி வருவதாக. ஆண்டவரே, நீரே இந்த உலகை ஆசிர்வதிப்பீராக. எங்கள் உடல்களுக்கு நலமும் உள்ளத்திற்கு ஆறுதலும் அளிப்பீராகஅஞ்சாதிருக்கும்படி நீர் எங்களைக் கேட்டுக்கொண்டீர்எம்முடைய இறைநம்பிக்கையோபலவீனமாக உள்ளது. நாங்கள் பயப்படுகிறோம். ஆனால், பெரும்புயலின் கோரத்திற்கு எங்களை விட்டுவிடமாட்டீர்.  ‘நீங்கள் அஞ்சாதீர்கள்  (மத் 28:5) என்று மீண்டும் ஒருமுறை எங்களுக்குச் சொல்லும்நாங்கள் புனித பேதுருவுடன் இணைந்து, ‘ எங்கள் கவலைகளையெல்லாம் உம்மிடம் விட்டுவிடுகிறோம். ஏனெனில் நீர் எங்கள் மேல் கவலை கொண்டிருக்கிறீர் (காண்க. 1 பேது 5:7).

 

Comment