No icon

திருத்தந்தை பிரான்சிஸ்

அருட்சகோதரி மரிய கன்சேட்டா

ஆப்பிரிக்க அன்னை தெரசாவுக்கு பாராட்டு

திருத்தந்தை பிரான்சிஸ் மார்ச் மாதம் 27 ஆம் தேதி புதன் கிழமை மறைக்கல்வி உரையாற்றிய பின், ஆப்பிரிக்க கர்ப்பினித் தாய்மார்களின்  பேறுகாலத்தில் உதவி செய்து, ஆயிரக்கணக்கான குழந்தைகள் சுகமாகப் பிறந்திட உதவியுள்ள அருள்சகோதரி மரிய கன்சேட்டா யேசு   அவர்களைப்  பாராட்டி, அவர்களின் சேவையை அங்கீகரிக்கும் விதமாக, பாப்பிறை பதக்கம் ஒன்றையும், சான்று பத்திரம் ஒன்றையும் வழங்கினார் . மிகவும் பின்தங்கிய நாடு கண்டமான ஆப்பிரிக்காவில் அருட்சகோதரி மரிய கன்சேட்டா ஏறக்குறைய தம் வாழ்நாளின் பெரும்பகுதியை அதாவது அறுபது ஆண்டுகளை பிரசவம் பார்க்கும் மருத்துவச் சேவையில் செலவிட்டுள்ளார். தற்போது 85 வயது நிரம்பிய இவரை நம் திருத்தந்தை பிரான்சிஸ் மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் திருத்தூதுப் பயணம் மேற்கொண்டபோது சந்தித்துள்ளார். இதனைக் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ், ‘ தங்கள் வாழ்க்கைச் சான்று வழியாக இறையரசின் விதைகளைத் தூவி, பிறர் வாழ்வில் ஒளியூட்டும் இத்தகைய மறைப்பணியாளர்களுக்கு ஊக்கத்தையும் வழங்கினார். இறுதியில் இந்த அருட்சகோதரி அவர்களின் ஆப்பிரிக்க சேவைத் தொடர செபிக்கும்படி திருப்பயணிகளைக் கேட்டுக்கொண்டார். 

Comment