No icon

திருத்தந்தையின் முழக்கம்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள், மேலும் சுற்றறிக்கைகளின் இரத்தினச் சுருக்கம்

 “நமது உலகின் பிரச்சினை என்பது அதில் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை அல்ல; மாறாக, சுயநலம், நுகர்வோர் மற்றும் தனிமனிதவாதம்தான் அப்பிரச்சினைக்குக் காரணம்.”

- ஜூலை 11, ‘எக்ஸ்தளப்பதிவு செய்தி

எதார்த்தங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் கருத்தியல்களைப் பிடித்துக் கொண்டிருப்பது தவறு. திரு அவைக்குள் பெண்களின் மறைப்பணிகள், கருத்தியலிலிருந்து அல்ல; மாறாக, அனுபவங்கள் என்ற எதார்த்தத்தைப் பெண்கள் பகிர்ந்துகொள்வதிலிருந்து துவங்குகிறது.”

- ஜூலை 12, ‘ஒன்றிணைந்து பயணிக்கும் திரு அவையில் பெண்களும், அவர்களின் மறைப்பணிகளும்நூலின் அணிந்துரை செய்தி

கடவுளின் தாயான புனித கார்மேல் அன்னை போரின் துயரத்தால் ஒடுக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் ஆறுதல் அளித்து அமைதியை அளிக்கட்டும்.”

- ஜூலை 14, மூவேளைச் செப உரை செய்தி

கடவுளின் மகிழ்ச்சியையும், அன்பையும் முழுமையாக அனுபவிக்க, தேவையற்ற சுமையை விட்டுவிடுங்கள். இது நம்மைச் சுமையாக்குகிறது, இறைவனை நோக்கிய பயணத்திற்கு இடையூறாக உள்ளது.”

- ஜூலை 14, ஞாயிறு மறையுரை செய்தி

கடவுளின் அன்பு எளிமையானது; அவரது அழகு எளிமையானது. நற்கருணை பிரசன்னத்தின் முன் அமர்ந்து அவருடன் உரையாட வேண்டும். மனப்பாடம் செய்யப்பட்ட செபங்களைச் செபிப்பதைவிட, இதயத்தின் ஆழத்தில் இருந்து இறைவனுடன் உரையாடுவது சாலச்சிறந்தது.”

- ஜூலை 15, துறவற அருள்சகோதரிகளின் பொதுப்பேரவைச் சந்திப்புச் செய்தி

Comment