No icon

சமூகக் குரல்கள்

 “இந்தத் தேர்தல் ஊடகங்களில் பரப்பப்படுவதைக் காட்டிலும் சிறப்பான, மிக நெருக்கமான தேர்தலாக அமையப் போகிறது. தேர்தலில்இந்தியாகூட்டணி நிச்சயம் வெற்றிபெறும். கடந்த 2004-இல் வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, இதேபோன்ற உணர்வை ஊடகங்கள் பரப்பின. ‘இந்தியா ஒளிர்கிறதுஎன்ற பிரச்சாரம் பரப்பப்பட்டது. ஆனால், அப்போது இந்தப் பிரச்சாரத்துக்கு என்ன நடந்தது? தேர்தலில் யார் வென்றனர்? என்பதை நினைவில் கொள்ள வேண்டும். தேசிய சனநாயகக் கூட்டணி தோல்வியைச் சந்தித்து, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆட்சியமைத்தது. மேலும், நாட்டின் சனநாயகமும், அரசமைப்புச் சட்டமும் இன்றைக்கு மிகப் பெரிய ஆபத்தில் உள்ளன. இந்தியாவின் அரசியல் கட்டமைப்பில் என்ன நடக்கிறது என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.”

- திரு. இராகுல் காந்தி, காங்கிரஸ் மக்களவை உறுப்பினர்

இந்த மக்களவைத் தேர்தலில் பா... அரசால் ஏற்பட்ட வேலையில்லாத் திண்டாட்டம்தான் முக்கிய பிரச்சினையாக எதிரொலிக்கும். நமது இளைஞர்கள் வேலை தேடுவதில் சிரமப்படுகின்றனர். இந்தியாவின் முதன்மையான கல்வி நிறுவனங்களான 12 ..டி.களில் பயின்ற சுமார் 30% மாணவர்கள் வேலைவாய்ப்பைப் பெறவில்லை. 21 ..எம்.களில் 20% மாணவர்கள் மட்டுமே கல்லூரிப் படிப்பு நிறைவடையும்போதே வேலை வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர். ..டி. மற்றும் ..எம். கல்வி நிலையங்களிலேயே இதுதான் நிலையென்றால், நாடு முழுவதும் உள்ள நமது இளைஞர்களின் எதிர்காலத்தைப் பா... எப்படி அழித்திருக்கிறது என்பதை நீங்கள் தெரிந்துகொள்ளலாம். 2014-ஆம் ஆண்டு முதல் மோடி அரசில் இளைஞர்களின் வேலையின்மை விகிதம் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.”

- திரு. மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் தலைவர்

அமலாக்கத் துறை, சி.பி.., தேசியப் புலனாய்வு முகமை (என்...), வருமான வரித்துறை ஆகிய மத்திய விசாரணை அமைப்புகள், பா...வின் ஆயுதங்களாகச் செயல்படுகின்றன. திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களைத் துன்புறுத்தும் இந்த அமைப்புகள், திடீரென வீடுகளுக்குள் அத்துமீறி புகுந்து சோதனை நடத்துகின்றன. பா...வில் இணையாவிட்டால், தங்களது நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்று திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களை விசாரணை அமைப்புகள் மிரட்டுகின்றன.”

- செல்வி மம்தா பானர்ஜி, மேற்கு வங்க முதல்வர்

Comment