No icon

சமூகக் குரல்கள்

 “இந்தியா உலகில் 5-வது மிகப்பெரிய பொருளாதார நாடாக உருவாகியுள்ளதாகக் குடியரசுத் தலைவர் குறிப்பிட்டுள்ளார். இந்த வளர்ச்சி நமது விவசாயிகளை முன்னேற்றிவிட்டதா? ஏன் பல இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றித் தவிக்கின்றனர்? ‘அக்னி வீர்போன்ற திட்டங்கள் அமல்படுத்தப்பட்டது ஏன்? விலைவாசி உயர்வை ஏன் கட்டுப்படுத்த முடியவில்லை? முதலீடுகள் குறித்தும் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார். அதிக முதலீடுகள் வந்துள்ளது என்றால், அதிக வளர்ச்சியும் நாடு கண்டிருக்க வேண்டும். சில தனிநபர்களின் வளர்ச்சி, தேசத்தின் வளர்ச்சியாக முடியாது.”

- திரு. அகிலேஷ் யாதவ், சமாஜ்வாதி கட்சித் தலைவர்

நீட் தேர்வு முறைகேடு பிரச்சினைக்குத் தீர்வு, விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை, மணிப்பூர் வன்முறை, ஜம்மு-காஷ்மீர் பயங்கரவாதத் தாக்குதல், பயணிகள் இரயில் விபத்து, பா... ஆளும் மாநிலங்களில் தலித்துகள், ஆதிவாசிகள், சிறுபான்மையினருக்கு எதிரான கொடுமைகள் தொடர்பாகக் குடியரசுத் தலைவர் உரையில் எதுவும் குறிப்பிடவில்லை.”

- திரு. கார்கே, காங்கிரஸ் தலைவர்

மக்களவைத் தலைவர் இருக்கைக்கு வலது பக்கம் (தமிழகத்திலிருந்து கொண்டு வரப்பட்ட) ‘செங்கோல்வைக்கப்பட்டுள்ளது. இந்தச்செங்கோல்என்பது அதிகாரத்தின் அடையாளம் அல்ல; நேர்மையின் அடையாளம். இது யார் பக்கமும் சாயக்கூடாது; நேர்மையாக இருக்க வேண்டும் என்பதற்காக உள்ளது. கடந்த காலங்களில் பல்வேறு மசோதாக்களை நிதி மசோதாக்களாக அறிமுகப்படுத்தி, அதை ஆளும் அரசு நிறைவேற்றியது. எது பண மசோதா? என்பதைத் தீர்மானிக்கிற அதிகாரம் மக்களவைத் தலைவருக்குத்தான் உள்ளது. எனவே, ஆளும் அரசு மீண்டும் அதிகாரத்தைப் பயன்படுத்த முயற்சிக்கும். அதற்கு ஒருபோதும் மக்களவைத் தலைவர் ஒத்துழைக்கக் கூடாது.”

- திரு. திருமாவளவன், சிதம்பரம் மக்களவைத் தொகுதி உறுப்பினர்

Comment