No icon

மணிப்பூர் கிறிஸ்தவர்கள் குடியரசுத் தலைவரைச் சந்தித்தார்கள்!

மணிப்பூரில் பாதிக்கப்பட்ட சிறுபான்மை கிறிஸ்தவர்களின் நம்பிக்கையைப் பின்பற்றுவதில் எவ்வகையிலும் இடையூறு ஏற்படாது என்பதற்கு இந்திய அரசும், மாநில அரசும் தேவையான பாதுகாப்பை வழங்க வேண்டும் என்றும், மதச்சுதந்திரம் என்பது மதச்சார்பற்ற இந்திய நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமக்களுக்கும் அளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமை என்பதை உறுதி செய்ய வேண்டுமென்றும் ஜூன் 26 அன்று கிறிஸ்தவ குழுக்கள் இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் கோரிக்கை மனு கொடுத்திருக்கிறார்கள். சிறுபான்மை கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறையை நிறுத்த வேண்டுமென்றும், கலவரம் மற்றும் வன்முறைகள் துவங்கியதிலிருந்து, 360-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ வழிபாட்டுத் தலங்கள் சேதப்படுத்தப்பட்டுத் தரைமட்டமாக்கப்பட்டுள்ளது; அந்த வழிபாட்டுத் தலங்களை மீண்டும் கட்டியெழுப்பவும், மக்களிடையே ஒற்றுமையை மீட்டெடுக்கவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டி குடியரசுத் தலைவரை வலியுறுத்தி உள்ளனர்.

Comment