No icon

​​​​​​​சமூகக் குரல்கள்

பெண்கள் ஆரோக்கியமாக இருந்தால்தான் நாடு முன்னேற முடியும். எனவே, குடும்பத்தைப் பராமரிக்கும் அதே வேளையில், தங்கள் ஆரோக்கியத்தையும் பெண்கள் கவனித்துக்கொள்ள வேண்டும். பெண்களின் திறனைப் புரிந்துகொண்டு அவர்களின் கனவுகளை அடைய ஆண்களும் அவர்களுக்கு உறுதுணையாக நிற்க வேண்டும். பெண்களை மதிப்பது நமது  கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. அது ஒவ்வொரு குடும்பத்திலும் பிரதிபலிக்க வேண்டும்.”

- இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

ஜம்மு-காஷ்மீர் பல கடுமையான சூழ்நிலைகளைக் கடந்து வந்துள்ளது. எனவே, வளர்ச்சிக்கு மாநில அந்தஸ்து தேவை என்பதை நாட்டு மக்கள் அனைவரும் நன்கு உணர்வார்கள். ஒரு மாநிலத்தை யூனியன் பிரதேசமாக அந்தஸ்து குறைப்பதை நாட்டில் இப்போதுதான் முதல்முறை பார்க்கிறேன். இதுபோன்ற நிலை மாறவேண்டும். எனவேதான் ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து என்பதில் உறுதியாக இருக்கிறோம்.”

- ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா

மத்திய பா... அரசின் தவறான கொள்கைகளால் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துள்ளது. அத்தியாவசியப் பொருள்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தாத மத்திய அரசைக் கண்டித்து அனைத்து மாநிலங்களிலும் போராட்டம் நடத்த உள்ளோம்.”

- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியப் பொதுச்செயலர் டி. ராஜா

Comment