No icon

சமூகக் குரல்கள்

“இந்தியா முழுவதும் பள்ளி மாணவர்கள் புகையிலை பொருள்களுக்கு அடிமையாகாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். முதல் கட்டமாக, பள்ளி வளாகங்கள் அருகே புகையிலை பொருள்கள் விற்பதை இந்தியா முழுவதும் தடை செய்ய வேண்டும். தொடர்ந்து குட்கா, கூல் லிப் உள்ளிட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்வதற்கு மத்திய அரசு தடைவிதிக்க வேண்டும். குட்கா, கூல் லிப் உள்ளிட்ட புகையிலை பொருள்கள் தயாரிப்பு நிறுவனங்களுக்குப் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். புகையிலை பொருள்கள் விற்பனை தொடர்பாக மத்திய அரசின் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும்.”

- திரு. பரத சக்கரவர்த்தி, உயர் நீதிமன்ற நீதிபதி

“இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டம் குறித்து பா.ச.க. பெரிதாகப் பேசுகிறது. ஆனால், அனைத்து ஒப்பந்தங்களும் அதானி வசமாகின்றன என்பதே உண்மை நிலவரம். ஓர் இஸ்ரேல் நிறுவனம் ஆயுதங்களைத் தயாரிக்கிறது. அதில் தனது முத்திரையை இடுகிறார் அதானி. இதுதான் ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டமா? பாதுகாப்பு உற்பத்தி மட்டுமன்றி, அனைத்துத் துறைகளிலும் இதுவே நிலைமை.”

- திரு. இராகுல் காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர்

“வழக்கு விசாரணை உள்ளிட்ட நீதிமன்ற நடவடிக்கைகளின்போது பெண் வெறுப்பு அல்லது எந்தவொரு சமூகப் பிரிவுக்கும் பாதகமான கருத்துகளை வெளியிடாமல் கவனமாக நீதிபதிகள் செயல்பட வேண்டும். இந்தியாவின் எந்தவொரு பகுதியையும் ‘பாகிஸ்தான்’ என்று குறிப்பிட முடியாது. ஏனெனில், அவ்வாறு குறிப்பிடுவது அடிப்படையில் நமது தேசத்தின் பிராந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிரானது.”

- உச்ச நீதிமன்றம்

“அரசியலமைப்பில் குறிப்பிட்டுள்ளபடி நாட்டின் ஒருங்கிணைந்த கலாச்சாரச் சூழலை உருவாக்க அலுவல் மொழியை மேம்படுத்துவதோடு, உள்ளூர் மொழியை வலுப்படுத்த வேண்டும். மொழி வளர்ச்சியை இரயில்வே பணியாளர்கள் ஊக்குவிக்க வேண்டும்.”

- திரு. கௌசல் கிஷோர், தெற்கு இரயில்வே கூடுதல் பொது மேலாளர்

Comment