No icon

அழிவுக்கு இயந்திரம் தேவையில்லை!

ஜூலை 8, 9 ஆகிய தேதிகளில் ஜப்பானின் ஹிரோஷிமா நகரில்  ‘செயற்கை நுண்ணறிவு அமைதிக்கான நெறிமுறைகள்என்ற தலைப்பில் உலகின் முக்கியத் தலைவர்கள் ஒன்றுகூடி கலந்துரையாடிய உலக மன்றத்திற்குத் திருத்தந்தை பிரான்சிஸ் வழங்கிய செய்தியில்ஓர் இயந்திரம் என்பது  நன்கு வரையறுக்கப்பட்ட அளவுகோல் அல்லது புள்ளிவிவர அடிப்படையில் ஒரு தொழில்நுட்பத் தேர்வைச் செய்கிறது. இருப்பினும், மனிதர்கள் தேர்வு என்பது அவர்களின் இதயங்களில் தீர்மானிக்கும் திறன் கொண்டவர்கள். இயந்திரங்களின் தேர்வுகளை நம்பியிருப்பதன் வழியாக, தங்களைப் பற்றியும் அவர்களின் வாழ்க்கையைப் பற்றியும் முடிவெடுக்கும் மக்களின் திறனைப் பறித்தால், நம்பிக்கையற்ற எதிர்காலத்திற்கு மனிதகுலத்தை அழைத்துச் செல்லும் வழியாக அமைந்துள்ளது. மக்களின் திறனை இயந்திரங்கள் பறித்தால், நம்பிக்கை இல்லாத எதிர்காலத்திற்கு மனிதகுலம் தள்ளப்படும்என்று எச்சரித்துள்ளார். மேலும், “செயற்கை நுண்ணறிவுத் திட்டங்களால் செய்யப்படும் தேர்வுகளின் மீது சரியான மனிதக் கட்டுப்பாட்டிற்கான இடத்தை நாம் உறுதிசெய்து பாதுகாக்க வேண்டும். உலகில் ஆயுத மோதல்கள் நிகழ்ந்து வரும் தருணத்தில்கொடிய தன்னாட்சி ஆயுதங்கள்என்று அழைக்கப்படும் சாதனங்களின் வளர்ச்சி மற்றும் பயன்பாட்டை மறுபரிசீலனை செய்வது அவசியமாகிறது. மனித அழிவுக்கு இட்டுசெல்லும் இயந்திரங்களைத் தடைசெய்ய வேண்டும்என்றும் கேட்டுக்கொண்டார்.

Comment