No icon

‘ஒளவையார் விருது’பெறும் எழுத்தாளர் ‘கருக்கு’ பாமா!

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தமிழக அரசின் 2024-ஆம் ஆண்டுக்கான ஒளவையார் விருதை இலக்கியத்தில் தலித் மக்களின் குரலாக ஒலித்து, சமூகத் தொண்டாற்றி வரும் முன்னணி எழுத்தாளரான விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பாஸ்டினா சூசைராஜ் () பாமாவுக்கு வழங்கப்படுகிறது.

2012 - ஆம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் சர்வதேச மகளிர் தினத்தன்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் தமிழக அரசால்ஒளவையார் விருதுவழங்கப்பட்டு வருகிறது. விருது பெறுவோருக்கு ரூ.1.50 இலட்சத்துக்கான காசோலை மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகிறது. பெண்களின் வாழ்க்கையை, குறிப்பாக ஒடுக்கப்பட்ட பெண்களின் வாழ்க்கையை, இலக்கியப் படைப்புகளாகவும், சாதி மற்றும் பாலினம் சார்ந்து சமூகத்தில் நிலவும் சமத்துவமின்மையை எடுத்துக்காட்டும் தொகுப்புகளாகவும் எழுதியுள்ளார். இவரது கருக்கு, சங்கதி, வன்மம், மனுசி போன்ற நாவல்களும், கிசும்புக்காரன், கொண்டாட்டம், ஒரு தாத்தாவும் எருமையும் போன்ற சிறுகதைத் தொகுப்புகளும் குறிப்பிடத்தக்கவை. இவர் எழுதியகருக்குஎன்ற புதினம் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, 2000-இல்கிராஸ் வேர்ல்ட்புக்விருதைப் பெற்றுள்ளது.

Comment