No icon

மதக் கலவரத்தை தூண்டியதாக வழக்கு..

பாஜக நிர்வாகி சவுதாமணி கைது

சென்னை: மதக் கலவரத்தை தூண்டியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் பாஜக நிர்வாகி சவுதாமணி கைது செய்யப்பட்டுள்ளார்.

மத கலவரத்தை தூண்டும் வகையிலும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் ட்வீட் வெளியிட்டதாக கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையிடம் புகார் அளிக்கப்பட்டது.இந்த புகாரின் பேரில் பாஜக செயற்குழு உறுப்பினர் சவுதாமணி சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். அப்போது அந்த மனுவை நீதிபதி பொங்கியப்பன் விசாரணை நடத்தினார்.

சவுதாமணி

அப்போது விசாரணையில் சவுதாமணி பதிவிட்ட வீடியோவால் மதக்கலவரம் தூண்டப்படும் என்பதை உறுதி செய்த காவல் துறையினர் அவர் மீது கலகம் செய்ய தூண்டி விடுதல், அரசுக்கு எதிராக அல்லது பொது அமைதிக்கு எதிராக எந்தவொரு நபரையும் கலகம் செய்யத் தூண்டுதல் ஆகிய இரு பிரிவுகளின் கீழ வழக்குப் பதிவு செய்துள்ளதாக மத்திய குற்றப்பிரிவு போலீஸார் தெரிவித்தனர்.

முன்ஜாமீன் மனு இதையடுத்து மனுதாரர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில் புதிதாக முன்ஜாமீன் மனு தாக்கல் செய்யலாம் என உத்தரவிட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதையடுத்து அந்த வழக்கில் தனக்கு முன் ஜாமீன் கோரி சவுதாமணி மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி பொங்கியப்பன் முன்பு விசாரணைக்கு வந்தது.

சவுதாமணி கைது அந்த மனுவை விசாரித்த நீதிபதி சமுதாயத்தில் உயர் இடத்தில் இருக்கும் படித்தவரே இது போன்ற தவறை செய்யலாமா என கேள்வி எழுப்பி முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார். இந்த நிலையில் மதத்தின் அடிப்படையில் பகைமையை வளர்க்கும் வகையில் கருத்து பதிவிட்டால் கடும் நடவடிக்கை என சென்னை கமிஷனர் சங்கர் ஜிவால் ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில் சவுதாமணி சைபர் கிரைம் போலீஸாரால் இன்று கைது செய்யப்பட்டார். அவர் மீது எந்த கலகத்தை உண்டு செய்தல் உள்பட இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் புழல் அல்லது சைதாப்பேட்டை சிறையில் அடைக்கப்படுவார் என தெரிகிறது.

யார் சவுதாமணி சவுதாமணி ஆசிரியை, செய்தி வாசிப்பாளர், பெண் தொழில் முனைவோர் போன்ற பன்முகத் திறமைகளுக்கு சொந்தக்காரர், இவர் பாஜக மாநில செயற்குழு உறுப்பினராக இருந்து வருகிறார். கடந்த 2017ஆம் ஆண்டு அப்போதைய பாஜக தலைவராக இருந்த தமிழிசை முன்பு பாஜகவில் இணைந்தார். சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். முதலில் ஆசிரியராக இருந்த இவர் நண்பர்களின் மூலம் தமிழை நன்றாக கற்றுக் கொண்டு செய்தி வாசிப்பாளர் பணிக்கு சென்றது குறிப்பிடத்தக்கது.

Comment