முதன்மைக் குருவின் வாழ்த்துரை
நாடி வருவோருக்கு வரங்களை அள்ளித் தரும் செபமாலை அன்னை!
கோவை மறைமாவட்டத்தில் முதல் தலைமை ஆலயமாக உருவானது கருமத்தம்பட்டி, புனித செபமாலை அன்னை பசிலிக்காவாகும். இங்கு வரும் பல்லாயிரக்கணக்கான இறைமக்கள் செபித்து, ஏராளமான அருள் வரங்களைப் பெற்றுச் செல்வதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். இதுவே அன்னை தன்னை நாடி வரும் மக்களுக்கு இறைவனிடம் பரிந்து பேசி, ஏராளமான புதுமைகளை அருள்கின்றார் என்பதற்குச் சாட்சியாகும்.
இறைவனுக்கும் மக்களுக்கும் இடையேயான பாலம் அன்னை மரியா. பல நூற்றாண்டுகளையும் கடந்த பின்பும் அனைத்து நலன்களையும் பெற்றுத் தருபவள் அன்னை மரியா. இப்பேர்பட்ட அன்னைக்கு நாம் நன்றி கூறி திருவிழா கொண்டாடுகிறோம். வருகின்ற அக்டோபர் மாதம் முதல் ஞாயிறு அன்று வெகு சிறப்பாகக் கொண்டாடப்படும் புனித செபமாலை அன்னையின் தேர்த் திருவிழாவில் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து, திரளாகக் கலந்துகொண்டு அன்னையின் பரிந்துரை வழியாக இறை இயேசுவின் ஆசிரைப் பெற்றுச்செல்ல அன்புடன் அழைக்கிறேன். பசிலிக்கா அருள்பணியாளர்களுக்கும், இறைமக்களுக்கும் மற்றும் வருகின்ற, திருப்பயணம் மேற்கொள்ளும் அனைவருக்கும் திருவிழா நல்வாழ்த்துகள்! இறையாசிர்!
- பேரருள்திரு. ஜான் ஜோசப் ஸ்தனிஸ், முதன்மைக்குரு, கோவை மறைமாவட்டம்
Comment