No icon

திருத்தந்தையின் 45-வது திருத்தூதுப் பயணம்

செப்டம்பர் 1 அன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உரோம் நகரில் உள்ள சாந்தா மரியா மேகியோர் பசிலிக்காவிற்குச் சென்று, கன்னி மரியாவின் திருவுருவச் சிலை சாலுஸ் பாப்புலி உரோமானி முன்னிலையில் செபித்தார். இந்தோனேசியா, பப்புவா நியூகினி, திமோர்-லெஸ்தே, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கான தனது 45-வது திருத்தூதுப் பயணத்தை ஒப்படைத்தார். செப்டம்பர் 2 முதல் 13 வரை இருக்கும் இந்தத் திருப்பயணம் 32,814 கிலோமீட்டர் என்ற வகையில் இதுவரை உள்ள திருப்பயணங்களில் அதிக தூரத்தைக் கொண்டுள்ளதாக உள்ளது. மேலும், அண்மை நாள்களில் உடல் நலம் குன்றிக் காணப்படும் திருத்தந்தை, அதிலும் டிசம்பர் மாதத்தில் 88 வயதை நிறைவு செய்யவுள்ள திருத்தந்தை, இந்த நீண்ட திருத்தூதுப் பயணத்தை நிறைவு செய்ய உள்ளார் என்றால் எவ்வளவு மனவுறுதியுடையவராக இருப்பார் என்பது புரிகிறது.

Comment