திருத்தந்தையின் 46-வது திருத்தூதுப் பயணம்
செப்டம்பர் மாதம் 26 முதல் 29 வரை இலக்ஸம்பர்க் மற்றும் பெல்ஜியம் நாடுகளுக்கான தன் 46-வது திருத்தூதுப் பயணத்தை மேற்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ், அமைதி, புலம்பெயர்வு, காலநிலை மாற்றம், இளையோரின் எதிர்காலம் உள்ளிட்ட பல்வேறு கருப்பொருள்களில் உரையாற்றினார். 1425 -ஆம் ஆண்டு நிறுவப்பட்ட Louvain கத்தோலிக்கப் பல்கலைக்கழகத்தின் 600-வது ஆண்டு நிறைவை முன்னிட்டும் இந்தத் திருத்தூதுப் பயணம் திட்டமிட்டப்பட்டுள்ளது. மேலும், 14 ஆண்டுகளாகப் பெல்ஜியத்தின் துறவுமடத்தை வழிநடத்திய வணக்கத்திற்குரிய Anna de Jesus அவர்களுக்கு அருளாளர் பட்டம் வழங்கும் நிகழ்வும் நடைப்பெற்றது.
Comment