No icon

திருத்தந்தை பிரான்சிஸ்

மறைக்கல்வியுரை: தலைமுறைகளுக்கிடையே நல்லிணக்கம் இன்றியமையாதது

மார்ச் 02 ஆம் தேதி, புதனன்று திரு அவையில் தவக்காலம் தொடங்கியுள்ள நிலையில் வத்திக்கானில் திருத்தந்தை புனித ஆறாம் பவுல் அரங்கத்தில் அமர்ந்திருந்த ஆயிரக்கணக்கான திருப்பயணிகளுக்கு, முதுமை பற்றிய தன் இரண்டாவது பகுதியை வழங்கினார். திருத்தந்தை தன் மறைக்கல்வியுரையைத் துவக்குவதற்கு முன்னர், முதல் மனிதர் ஆதாமின் நீடிய ஆயுள் பற்றிக் கூறும் பகுதி ஒன்று, தொடக்க நூலிலிருந்து (தொநூ 5:1-5) வாசிக்கப்பட்டது.

அன்புச் சகோதரர், சகோதரிகளே, உங்கள் எல்லாருக்கும் காலை வணக்கம். விவிலியத்தில்

மூதாதையர் பட்டியல் பற்றி பதிவு செய்யப்பட்டுள்ள பகுதியை வாசிக்கும்போது, அவர்களின் மிக நீண்ட ஆயுள் காலம் நம்மை உடனடியாக வியப்பில் ஆழ்த்துகிறது. முதுமை எப்போது தொடங்குகிறது? இந்தப் பழங்காலத் தந்தையர்கள், பிள்ளைகளுக்குத் தந்தையரான பின், நீண்ட காலம் வாழ்ந்திருப்பதன் முக்கியத்துவம் என்ன? தந்தையரும் பிள்ளைகளும் நூற்றாண்டுகளாக ஒன்று சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனரே! என்பதைக் குறித்து நூற்றாண்டுகளாகவும் நாம் பேசி வருகிறோம். நூற்றாண்டுகள் என்று குறிப்பிடப்பட்டுள்ள இந்த விவிலியப் பகுதி, நீடிய ஆயுளுக்கும்,

மூதாதையர் பட்டியலுக்கும் இடையேயுள்ள உறவில் ஓர் ஆழமான அர்த்தத்தை வழங்குகிறது. படைப்பு வரலாற்றின் துவக்கத்தில், ஆன்மா, வாழ்வு, மனச்சான்று, சுதந்திரம்  உணர்வுத்திறன், கடமையுணர்வு என, அனைத்துமே புதியனவாக இருந்துள்ளன. இறைவார்த்தையின் ஒளியில், முதுமையின் அர்த்தம் மற்றும் அதன் மதிப்பு பற்றிய நம் மறைக்கல்வியுரையில், உண்மையிலேயே மனிதாபிமானம் நிறைந்த ஒரு சமுதாயத்தின் வளர்ச்சிக்கு, முதுமை நிலை எத்தகைய பங்கை ஆற்றமுடியும் என்பது குறித்து இன்று சிந்திப்போம். இத்தகைய ஒரு சமுதாயத்திற்கு, எல்லா வயதினருமே ஏதாவது ஒன்றை வழங்க இயலும். வயது முதிர்ந்தோர், வாழ்வின் அர்த்தம் என்ன என்பது குறித்து  நமக்குக் கற்றுக்கொடுக்க முடியும். அவர்களின் முதிர்ந்த வயது, ஞானமுள்ளது, காலம் காலமாகப் பக்குவம் அடைந்திருப்பது. அதனால், வெகு வேகமாக வளர்ந்து வரும் இக்காலச் சமுதாயத்தால் எழுப்பப்படும் புதிய புதிய கேள்விகள் மற்றும் சவால்களை நாம் எதிர்கொள்வதற்கு, அவர்களால் நமக்கு உதவ முடியும். இக்காரணத்தினால், தாத்தாக்கள் பாட்டிகள் மற்றும் வயது முதிர்ந்தோரைக் கௌரவப்படுத்துவதற்கென்று, ஜூலை மாதத்தில், ஒரு சிறப்பு நாளை உருவாக்க விரும்பினேன். நலமான ஒரு சமுதாய வாழ்வுக்கு இன்றியமையாததாக அமைந்துள்ள இளையோருக்கும் வயது முதிர்ந்தோருக்கும் இடையேயுள்ள பிணைப்பு, இன்றைய பரபரப்பான வாழ்வுக்கு மத்தியில், ஆண்களும் பெண்களும் இறைச்சாயலில் படைக்கப்பட்டவர்கள் என்பதையும், நமது வாழ்வை ஒன்று சேர்ந்து முழுமையாய் வாழ அழைக்கப்பட்டுள்ளோம் என்பதையும் நினைவுபடுத்திநம் மத்தியிலுள்ள, இறைப்பிரசன்னத்தைக் கண்டுணர நமக்கு உதவ முடியும். அதோடு, நம் சகோதரர் சகோதரிகளின் தேவைகளை நிறைவேற்ற நாம் அழைக்கப்பட்டுள்ளோம் என்பதையும் நாம் உணர்ந்துகொள்ள அது உதவும்.

பின்னர் உக்ரைன் நாட்டில் அமைதி நிலவுவதற்காக, இறைவேண்டல் மற்றும் உண்ணாநோன்போடு இன்று நாம் தொடங்கியிருக்கும் தவக்காலப் பயணம், தூய்மைப்படுத்தப்பட்ட இதயங்களோடு, கிறிஸ்து உயிர்ப்பின் மகிழ்விற்கு நம்மை இட்டுச்செல்வதாக என்றுரைத்து, திருத்தந்தை பிரான்சிஸ் தன் அப்போஸ்தலிக்க ஆசிரை அளித்தார்.

Comment