No icon

திருத்தந்தையின் முழக்கம்

 (நமது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் மற்றும் சுற்றறிக்கைகளின் சாரல்)

நாம் இயேசுவை மையமாகக் கொண்டு செயல்படும்போது, நமது வாழ்வின் கண்ணோட்டம் மாறுவதோடு மட்டுமல்லாமல், நம் உழைப்பு மற்றும் துன்பத் துயர்கள் மத்தியிலும், இயேசுவின் ஆவியால் ஆறுதலை உணர்ந்து, அவரின் வார்த்தையால் ஊக்கம் பெற்று, அவரின் அன்பால் நிலைப்படுத்தப்படுகிறோம்.”

ஆகஸ்ட் 8, திருத்தந்தையின்டுவிட்டர்செய்தி

ஒன்றிணைந்த திரு அவையின் பாதையில், திரு அவை சகோதரர்-சகோதரிகளுடன் இணைந்து நடந்து, எஜமானர்களாக அல்ல; மாறாக பணியாளர்களாகச் செயல்பட வேண்டும். மற்றவர்களின் பாதங்களைக் கழுவுபவர்களாகச் செயல்பட வேண்டுமே தவிர, மற்றவர்களைக் காலில் இட்டு நசுக்குபவர்களாக அருள்பணியாளர்கள் ஒரு போதும் செயல்படக்கூடாது.”

ஆகஸ்ட் 7, உரோம் அருள்பணியாளர்களுக்கு உரை

கிறிஸ்து நம் காலடிகளைக் கழுவுமளவிற்கும், நம் காயங்களைக் குணப்படுத்துமளவிற்கும், பணிவுடன் மனிதத்தின் அடித்தளத்தைத் தொடுமளவிற்கும் தம்மையே தாழ்த்திக் கொண்டு, நம்மில் ஒருவரானார். அவர் தமது மரணத்தின் பாதையில் தனிமையையும், பயத்தையும், வலியையும், துன்பத்தையும் அனுபவித்தார்.”

- ஆகஸ்ட் 4, இளையோர் திருச்சிலுவைப் பாதை

இளையோர்களே, நீங்கள் அனைவரும் ஒவ்வொருவரையும் நோக்கி, ‘நான் ஒரு புனிதராக வேண்டும்என்று குரலெழுப்பி ஆர்ப்பரியுங்கள். ஏனென்றால், நம் வாழ்வின் இறுதியில் அது மட்டுமே கணக்கிடப்படும். அதுவே நம்மை மகிழ்ச்சியடையச் செய்யும். எனவே, நாம் அனுதினமும், ‘நான் புனிதராக விரும்புகின்றேன்என்று கூறுவோம்.”

- ஆகஸ்ட் 6, லிஸ்பன் தன்னார்வலர்களுக்கு அருளுரை

அன்புள்ள சகோதரர் சகோதரிகளே,  ‘மரியா புறப்பட்டு விரைந்து சென்றார்’ (லூக்கா 1:39) என்பதுதான் இந்த உலக இளையோர் தினத்தின் மையக்கருத்தாக அமைந்துள்ளது. ‘அவர் ஏன் புறப்பட்டு தன் உறவினரிடம் விரைந்து சென்றார்?’ என்று நாம் கேட்கலாம். அவர் எலிசபெத்தின்மீது கொண்டிருந்த அன்புதான் இதற்குக் காரணம்.”

- ஆகஸ்ட் 6, இளையோர் தினக் கொண்டாட்டம்

Comment