No icon

குரங்கு அம்மை தொற்று நோய்

இந்திய கத்தோலிக்க மருத்துவமனைகள் தயார்நிலையில் உள்ளன

இந்திய கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் நடத்திவரும் மருத்துவமனைகள், குரங்கு அம்மை தொற்று நோயினால் ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய சவாலினை சந்திக்க தங்களை தயார்படுத்தி வருகின்றன. 2022, ஜூலை 24 ஆம் தேதி உலக சுகாதார நிறுவனம் (WHO) வெளியிட்டுள்ள அறிக்கையில், இதுவரை இந்தியாவில் நான்கு நபர்கள் இந்த குரங்கு அம்மை தொற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருப்பதாக  தெரிவித்துள்ளது. இந்திய கத்தோலிக்க மருத்துவ ஆணையத்தின் தேசிய செயலாளர் அருள்பணியாளர் ஜார்ஜ் அவர்கள், “குரங்கு அம்மையினால் ஏற்பட்டிருக்கும் அச்சத்தை போக்கும் வண்ணம் நாங்கள் எங்களது மருத்துவமனைகளை மிகுந்த அக்கறையோடு தயார்படுத்தி வருகிறோம். ஏற்கனவே கேரளாவில் உள்ள கத்தோலிக்க மருத்துவமனைகள் அம்மாநில அரசின் வழிகாட்டுதலுக்கு ஏற்ப குரங்கு அம்மை நோயினை எதிர்கொள்ள தங்களை தயார்படுத்தியிருக்கின்றன. கிறிஸ்துவர்களாகிய நாங்கள் எப்பொழுதும் அரசாங்கத்தின் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்வதில் ஆர்வம் காட்டி வருகிறோம். தற்போது சூழ்நிலை கட்டுக்குள் இருந்தாலும் மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கையாள வேண்டும்” என்று UCA செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

இந்தியாவில் இதுவரை 4 பேருக்கும், உலக அளவில் 75 நாடுகளில் 16000 பேருக்கும் குரங்கு அம்மை தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

Comment