No icon

தலைமை நீதிபதி கே. ஜி. பாலகிருஷ்ணன்

தலித் கிறிஸ்தவர்களை பட்டியலினத்தில் சேர்க்க ஆய்வுக் குழு

தலித் கிறிஸ்தவர்கள் மற்றும் தலித் இஸ்லாமியர்களை பட்டியலினத்தில் சேர்ப்பதற்கான சாத்திய கூறுகளை ஆய்வு செய்வதற்காக ஒன்றிய அரசாங்கம் முன்னாள் தலைமை நீதிபதி கே. ஜி. பாலகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் மூவர் குழுவை அமைத்திருக்கிறது. இரண்டு வருடங்களுக்குள் இதற்கான சாத்திய கூறுகளை ஆய்வு செய்து அரசாங்கத்திடம் சமர்ப்பிக்குமாறு இவர்களுக்கு ஆணையிட்டுள்ளது. ஒருபுறம் இந்தியக் கத்தோலிக்கத் திரு அவைத் தலைவர்கள் இதை வரவேற்றாலும் மறுபுறம் தலித் கிறிஸ்தவ தலைவர்கள் இது வெறுமனே கண்துடைப்பிற்கான ஒரு செயல் என்று கூறுகின்றனர்.

இது குறித்து இந்திய ஆயர் பேரவையின் பட்டியல் இனம் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் குழுவின் உறுப்பினர் ஆயர் மோசஸ் அவர்கள்இது ஒரு வரவேற்கப்படக்கூடிய விஷயம். இதை நேர்மறையான கண்ணோட்டத்தோடு நாம் பார்ப்போம். உண்மையாகவே இது நம்முடைய சகோதர சகோதரிகளுக்கு கிடைத்திருக்கிற ஒரு வாய்ப்பாக கூட அமையலாம் என்று UCA செய்தி நிறுவனத்திடம் கூறியிருக்கிறார். ஏழை கிறிஸ்தவர்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஆர். எல். பிரான்சிஸ்ஒன்றிய அரசாங்கம் மிக நேர்த்தியாக இந்த அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள் இவர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த அந்தஸ்து கிறிஸ்தவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் அளிப்பதற்கு ஆளும் பாரதிய ஜனதா கட்சி மிகவும் தயங்குகின்றது. மேலும் இரண்டு வருடங்களுக்குள் இந்த அறிக்கையை சமர்ப்பிக்க ஆணையிட்டுள்ளது. எதிர்வரும் தேர்தலை கருத்தில் கொண்டே ஒன்றிய அரசு இந்த அறிக்கையை வெளியிட்டிருக்கிறது என்று கூறினார்.

Comment