No icon

``புதிய ரூபாய் நோட்டுகளில் விநாயகர், லட்சுமி படங்கள்!"

நாடு வளம்பெற மோடிக்கு கெஜ்ரிவால் யோசனை  

புதிய ரூபாய் நோட்டுகளில் லட்சுமி, விநாயகரின் படங்களைச் சேர்க்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தியிருக்கிறார்.

இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``புதிய ரூபாய் நோட்டுகளில் ஒருபுறம் மகாத்மா காந்தியின் படத்தை வைத்துவிட்டு, மறுபுறம் லட்சுமி தேவி, விநாயகரின் படங்களைச் சேர்க்க வேண்டும். புதிய ரூபாய் நோட்டுகளில் இரு தெய்வங்களின் உருவங்கள் இருப்பது நாடு செழிக்க உதவும். நாம் என்னதான் முயற்சிகளை மேற்கொண்டாலும், கடவுள்களின் ஆசி இல்லையென்றால் சில சமயங்களில் நம்முடைய முயற்சிகளுக்குப் பலன் இருக்காது.

கடந்த சில மாதங்களாக இந்தியப் பொருளாதாரம் நல்ல நிலையில் இல்லை. இந்தோனேசியாவில், ரூபாய் நோட்டுகளில் ஒரு பக்கம் விநாயகர் உருவம் இருக்கிறது. அது ஒரு முஸ்லிம் நாடு. அந்த நாட்டில் 85 சதவிகிதத்துக்கும் அதிகமான முஸ்லிம்கள் இருக்கின்றனர். அவர்களால் அதைச் செய்ய முடிந்தால், நம்மாளும் அதை செய்ய முடியும். இது குறித்து ஓரிரு நாள்களில் பிரதமருக்குக் கடிதம் எழுதவிருக்கிறேன்.

டெல்லி மாநகராட்சித் தேர்தலுக்கு ஆம் ஆத்மி கட்சி முழுமையாகத் தயாராக இருக்கிறது. மக்கள் பா..-வை நிராகரிப்பார்கள். கடந்த 27 ஆண்டுகளாக பா.. ஆட்சி நடத்திவரும் குஜராத்தில் செய்த ஒரு நல்ல பணியை மேற்கோள் காட்டுங்கள்’’ என்றார்.

 

Comment