No icon

விஷ்வ ஹிந்து பரிஷத்

தலித் கிறித்துவர்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு தரக்கூடாது- VHP

விஷ்வ ஹிந்து பரிஷத் அல்லது உலக இந்து சபாவானது இந்து மதத்தில் இருந்து கிறித்துவம் மற்றும் இஸ்லாமிய மதங்களுக்கு மாறும் இந்துக்களுக்கு அளிக்கப்படும் எல்லா விதமான சலுகைகளையும் நிறுத்த வேண்டுமென்று இந்திய அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளது. விஷ்வ ஹிந்து பரிஷத் குழுவினுடைய செய்தி தொடர்பாளர் விஜய் சங்கர் திவாரி, ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்பூர் நகரில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில்இந்து மதத்தில் இருந்து கிறித்துவம் மற்றும் இஸ்லாமிய மதங்களுக்கு மாறும் இந்துக்கள் தங்களின் பெயர்களை மாற்றாமல் அப்படியே வைத்துக் கொண்டு பட்டியலினத்து மக்களுக்கு அளிக்கப்படும் சலுகைகளை தொடர்ந்து அனுபவித்து வருகிறார்கள். இது குறித்து மத்திய அரசாங்கம் புள்ளி விவரங்களை சேகரித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பாராளுமன்றம், மாநில சட்ட மன்றம், அரசாங்க வேலை, கல்வித் துறையில் இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் புத்த மதத்தினரை சேர்ந்தவர்களுக்கு 15 சதவீதம் இட ஒதுக்கீடு அளிப்பது போல தங்களுக்கும் அளிக்க வேண்டும் என்று போராட்டங்களை நடத்துகிறார்கள். கிறித்துவம் மற்றும் இஸ்லாமிய மதங்கள், தங்கள் மதங்களில் சாதிய கோட்பாட்டை கடைபிடிப்பதில்லை என்று கூறுகின்றனர். எனவே இவர்களுக்கு பட்டியலினத்து மக்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை பெற உரிமையில்லைஎன்று கூறினார்.

இதுகுறித்து இந்திய கத்தோலிக்க ஆயர்கள் ஆணையத்தின் தலித் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் குழுவின் செயலாளர் அருள்பணியாளர் விஜயகுமார் நாயக்நாங்கள் நீதிமன்றத்தில் இந்த அநீதி பாகுபாடு எதிர்த்து சட்ட ரீதியாக போராடிவரும் நிலையில் விஷ்வ ஹிந்து பரிஷத் போன்ற குழுவிடமிருந்து இத்தகைய குற்றச்சாட்டு வருவது குறித்து ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று கூறினார். தலித் கிறிஸ்தவர்களின் தேசிய ஆணையத்தின் பொதுச் செயலாளர் D. சார்லஸ்எங்கள் ஆணையத்தின் சார்பாக 2020 இல் நாங்கள் அளித்த புகாரினை நீதிமன்றம் விசாரித்து கொண்டிருக்கும் தருணத்தில், இவ்வழக்கை அடிப்படையாக கொண்டு மத்திய அரசாங்கம், ஒரு குழுவை அமைத்து கிறித்துவம் மற்றும் இஸ்லாமிய மதத்திற்கு மாறிய தலித் மக்களுக்கு பட்டியலின அங்கீகாரம் அளிப்பது பற்றி ஆய்வு நடத்த உத்தரவிட்டிருக்கும் நேரத்தில், விஷ்வ ஹிந்து பரிஷத் போன்ற குழுக்கள்  கிறித்துவம் மற்றும் இஸ்லாமிய மதங்களுக்கு மாறிய தலித்துக்களுக்கு பட்டியலினத்து அங்கீகாரம் கிடைத்து விடக்கூடாது என்பதற்காகவே இது போன்ற குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார்கள்என்று UCA செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

Comment