No icon

செயின்ட் ஜோசப் பள்ளி

கிறித்துவர்கள் எங்கள் பண்டிகையை இழிவுபடுத்துகிறார்கள்

தீபாவளி திருநாளை எவ்வாறு கொண்டாட வேண்டும் சுற்றுச்சூழலை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்று மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள கந்த்வா மறைமாவட்டத்தின் கீழ் இயங்கி வரும் செயின்ட் ஜோசப் பள்ளியானது தனது ஆசிரியர்களையும் மாணவர்களையும் வைத்து வீதிநாடகம் ஒன்றை அக்டோபர் 21 ஆம் தேதி அரங்கேற்றியது. இதைக் கண்ட இந்து அடிப்படைவாதிகள் இந்த கிறித்துவ பள்ளியானது இந்துக்களின் விழாவான தீபாவளி திருநாளை கொச்சைப்படுத்துகிறது. இந்நாளை கொண்டாடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடகங்களை அரங்கேற்றுகிறது என்று குற்றம் சாற்றி பள்ளியின் முன்பாக அக்டோபர் 25 ஆம் தேதி இரவு பட்டாசுகளை வெடித்து வன்முறையில் ஈடுபட்டனர். மேலும் கிறித்துவர்களுக்கு இது முதலும் கடைசியுமான எச்சரிக்கை. மீண்டும் இது போன்ற காரியங்களை செய்தால் கடுமையான விளைவுகளை அவர்கள் சந்திப்பார்கள் என்று இந்து மத அடிப்படைவாதிகள் அச்சுறுத்தினர்.

இது குறித்து பள்ளியின் முதல்வர் அருள்சகோதரி நேகா மேத்யூ, மேட்டர்ஸ் இந்தியா செய்தி நிறுவனத்திடம்நாங்கள் யாரையும், எந்த மதத்தையும் குறி வைத்தோ அல்ல புண்படுத்த வேண்டும் என்பதற்காகவோ இத்தகைய நாடகங்களை அரங்கேற்றவில்லை. மாறாக மாணவர்கள் எவ்வாறு பாதுகாப்பாக திருநாளை கொண்டாட வேண்டும் என்றும், சுற்றுச்சூழலை மாசுபடாமல் எவ்வாறு காப்பாற்ற வேண்டும் என்பதைத்தான் ஒரு விழிப்புணர்வு நாடகமாக அரங்கேற்றினோம். சிலர் வேண்டுமென்றே பள்ளியின் நட்பெயரை கெடுப்பதற்காகவும், மதத்தின் அடிப்படையில் வன்முறையை தூண்டுவதற்காகவும் இத்தகைய குற்றச்சாட்டுகளை முன் வைக்கிறார்கள். தீபாவளி திருநாளை நாங்கள் மாணவர்களோடும் ஆசிரியர்களோடும் சேர்ந்து பள்ளியில் கொண்டாடினோம்என்று கூறினார்.

கந்த்வா மறைமாவட்ட மக்கள் செய்தி தொடர்பாளர் அருள்பணியாளர் அலெக்ஸ்சகோதரர்களாக வாழ்ந்து கொண்டிருக்கும் இந்துக்கள் மற்றும் கிறித்துவர்களுடைய வகுப்புவாதத்தை தூண்ட வேண்டும் என்பதற்காகவே ஒரு சிலர் இத்தகைய குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள். அடிப்படை ஆதாரங்களின்றி கிறித்துவர்களையும், கிறித்துவ நிறுவனங்களையும் குறைகூறுவதை, தாக்குவதை மத அடிப்படைவாதிகள் நிறுத்த வேண்டும். சாதி மதத்தின் பெயரால் நாங்கள் எத்தகைய பாகுபாட்டையும் உருவாக்குவதில்லைஎன்று மேட்டர்ஸ் இந்தியா செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

Comment