No icon

பேராயர் மச்சாடோ

மக்கள் தொடர்பு சேவை கிளர்ச்சி உண்டாக்க அல்ல

மக்கள் தொடர்பு சேவை என்பது நாட்டில் ஒரு புரட்சியை ஏற்படுத்துவதற்காக அல்ல என்று பெங்களூரு உயர்மறை மாவட்டத்தின் பேராயர் பீட்டர் மச்சாடோ அவர்கள் அண்மையில் இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் ஊடக சேவை மற்றும் கத்தோலிக்க பத்திரிகையாளர்களின் சங்கமான சிக்னிஸ் என்ற அமைப்பும் சேர்ந்து பெங்களூரு பாலனா பாவனா மேய்ப்பு பணி நிலையத்தில் நடத்திய கூட்டத்தில் இவ்வாறு பேசினார்.

திரு அவை என்பது தனிநபரின் சொத்து அல்ல; அது அனைத்து இறை மக்களின் உரிமை சொத்து. எனவே திரு அவை என்பது மக்களோடு நல்லுறவு கொண்டிருக்கவும், அவர்களிடம் உண்மையாகவும், வெளிப்படையாகவும், அவர்கள் விரைவில் அணுகுவதற்கு எளிதாகவும் இருக்க வேண்டும். கத்தோலிக்க திரு அவையின் மக்கள் தொடர்பு செய்தியாளர்கள் என்ற நிலையில் நாம் அனைவரும் எப்போதும் பேசுபவர்களாக மட்டுமல்லாமல், மக்கள் பேசுவதையும் கேட்பவர்களாக இருக்க வேண்டும். ஒரு கையில் திருவிவிலியத்தையும், மறு கையில் செய்தித்தாளையும் நாம் வைத்திருக்க வேண்டும்என்று பேராயர் மச்சாடோ கூறினார்.

இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் செயலாளர் அருள்பணி. ஸ்டீபன் அலதாரா, “மக்கள் தொடர்பு செய்தியாளர்கள் என்ற முறையில் முதலில் நாம் ஆண்டவர் இயேசுவோடு நல்லுறவில் இருக்க வேண்டும். அப்போதுதான் மக்களிடம் நமது பணியானது வெற்றியை பெற்று தரும்என்று கூறினார்.

உண்மையாகவே இந்த கருத்தரங்கானது மிகவும் பயனுள்ளதாகவும், சமூக ஊடகங்களின் சக்தி என்ன என்பதையும் எனக்கு உணர வைத்துள்ளது என்று அருள்சகோதரி. ஜெனோவா அவர்கள் கூறினார். அக்டோபர் 25 ஆம் தேதியிலிருந்து 27 ஆம் தேதி வரை நடைபெற்ற இந்த கருத்தரங்கில் நாட்டின் எல்லா பகுதியிலிருந்தும் ஊடகம் மற்றம் பத்திரிக்கை துறையை சார்ந்த 62 நபர்கள் கலந்து கொண்டனர்.

Comment