No icon

கேரள கத்தோலிக்க ஆயர்கள் பேரவை

தலித் கிறிஸ்தவர்களுக்கான சலுகையை ஒன்றிய அரசு பறிக்க வேண்டாம்

 தென்னிந்திய மாநிலங்களில் ஒன்றான கேரள மாநிலத்தின் கத்தோலிக்க ஆயர்கள் பேரவையானது தலித் கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய சலுகைகளை குறித்து மறு ஆய்வு செய்ய வேண்டுமென்று ஒன்றிய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். கேரள கத்தோலிக்க ஆயர்கள் பேரவையானது டிசம்பர் 7ஆம் தேதி எர்ணாகுளத்தில் தாங்கள் எடுத்த முடிவை ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு அனுப்பி வைக்க இருக்கின்றனர். “நாங்கள் எங்களது முடிவை கோரிக்கையாக ஒன்றிய அரசுக்கு வைக்கின்றோம். கண்டிப்பாக எங்களின் முடிவுக்கு ஏற்றார் போல் ஒன்றிய அரசு ஒரு சிறந்த முடிவை அளிக்கும் என நினைக்கின்றோம்என்று கேரள கத்தோலிக்க ஆயர்கள் மன்றத்தின் செய்தி தொடர்பாளர் அருள்பணியாளர் ஜேக்கப் பலகப்பிள்ளி அவர்கள் கூறினார்.

தற்போது இந்திய உச்ச நீதிமன்றமானது, இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்களுக்கு, பாராளுமன்றம், நாடாளுமன்றம், அரசு வேலைகள் மற்றும் கல்வியில் அளிக்கப்பட்டு வரும் அரசு சலுகைகள் கிறிஸ்துவம் மற்றும் இஸ்லாமிய மதத்திற்கு மாறிய தலித் கிறிஸ்தவர்களுக்கு அளிக்கப்படக்கூடாது என மத்திய அரசு சமர்ப்பித்த ஆவண பத்திரத்தை ஆய்வு செய்து வருகிறது. 2022 நவம்பர் 9 ஆம் தேதி ஒன்றிய அரசானது கிறிஸ்தவமும் இஸ்லாமும் வெளிநாட்டிலிருந்து வந்த மதங்கள். எனவே அவைகளுக்கும் இங்கு நிலவும் சாதிய முறைகளுக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என்று ஒன்றிய அரசு கூறியது குறிப்பிடத்தக்கது. இது குறித்து அருள்பணியாளர் பலப்பிள்ளிஇந்திய அரசியலமைப்புச் சட்டமானது எவர் ஒருவரையும் மதத்தின் அடிப்படையில் பிரித்துப் பார்க்க அனுமதி அளிக்கவில்லை. எனவே அனைவருக்கும் சலுகைகள் தரப்பட வேண்டும்என்று UCA செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

Comment