No icon

ஹிமந்தா பிஸ்வா சர்மா

காவல்துறையினர் தரஆய்வை நிறுத்த அசாம் கிறிஸ்தவர்கள் கோரிக்கை

இந்தியாவின் அசாம் மாநிலத்தின் கிறிஸ்தவர்கள், தங்கள் சமூகங்கள், தேவாலயங்கள், தாங்கள் நடத்தும் நிறுவனங்கள் மற்றும் தங்களால் ஏதாவது மதமாற்றம் நிகழ்ந்திருக்கிறதா என்பதைப் பற்றி காவல்துறையினர் எடுத்து வரும் தர ஆய்வுகளை நிறுத்த வேண்டும் என்று மாநில அரசாங்கத்திற்கு கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.

அசாம் மாநிலத்தின் கோலாகாட் மாவட்டத்தில் கிறிஸ்தவ ஒன்றிய அமைப்பானது, மாநிலத்தின் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவிடம், ஜனவரி 20 ஆம் தேதி, காவல்துறையினர் இந்த கணக்கெடுப்பின் பேரில் கிறிஸ்தவர்கள் மீது தொடுக்கும் வன்முறைகளை நிறுத்துவதற்கு உடனடியாக தாங்கள் ஆணையிட வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கின்றனர். காவல்துறை ஆணையர் தீபக் தாமொலி, கிறிஸ்தவர்களைப் பற்றி இது போன்ற எந்த ஒரு கணக்கெடுப்பும் மேற்கொள்ளப்படவில்லை என்று கூறினார். ஆனால், கிறிஸ்தவ ஒன்றிய அமைப்பின் தலைவர் ஜடன் ஜண்ட் மற்றும் செயலாளர் லீடர் டோப்போ தாங்கள் முதலமைச்சருக்கு சமர்ப்பித்த அறிக்கையில், ஜனவரி 2 ஆம் தேதியிலிருந்து ஒரு சில காவல்துறை அதிகாரிகள், கிறிஸ்தவர்களைப் பற்றிய தர ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இது கிறிஸ்தவர்கள் மத்தியிலே ஒரு குழப்பத்தையும், சலசலப்பையும் ஏற்படுத்தி இருக்கின்றது. அமைதியோடு அன்போடும் பிறருக்கு பணி செய்து வாழ்ந்து கொண்டிருக்கும் கிறிஸ்தவர்களாகிய நாங்கள் எவ்வித வன்முறைகளுக்கும் இடம் அளிப்பதில்லை என்று UCA செய்தி நிறுவனத்திடம் கூறினார்கள்.

ஒரு சில உள்ளூர் தொலைக்காட்சி நிறுவனங்கள், இந்த கணக்கெடுப்பின் மூலமாக கிறிஸ்தவர்கள் மீது நடத்தப்படும் வன்முறைகளை, அண்மையில் தங்கள் ஊடகங்களில், காணொளியாக வெளியிட்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Comment