No icon

அமன் சிங் போர்த்தே

பொய்த்துப்போன குற்றசாட்டுகள்

இந்தியாவின் மத்திய மாநிலமான மத்திய பிரதேசத்தில், பழங்குடிகள் அதிகமாக இருக்கும் திண்டோரி மாவட்டத்தின் ஜுன்வானி என்ற கிராமத்தில், ஜபல்பூர் கத்தோலிக்க மறைமாவட்டத்தின் மேல்நிலைப் பள்ளியானது 80 வருடங்களாக இயங்கி வருகிறது.

இப்பள்ளியில் தற்போது ஏறக்குறைய 600-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் மறைமாவட்ட  விடுதியில் தங்கி பயின்று வருகின்றனர். 2023 மார்ச் 3 ஆம் தேதி மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையமானது இப்பள்ளி மற்றும் ஆண் பெண் தங்கும் விடுதிகளை சோதனை செய்தது. அப்போது பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் பள்ளியின் முதல்வர் தன்னை தகாத இடங்களில் தொடுவதாக அவர்களிடம் புகார் அளித்ததாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் 8 மாணவிகள் அதே குற்றத்தை பள்ளியின் முதல்வர், ஆண் விடுதி காப்பாளர் அருட்தந்தை, பெண் விடுதி காப்பாளர் அருட்ககோதரி மற்றும் ஆசிரியர் ஒருவர் மீதும் தெரிவித்ததையடுத்து பள்ளியின் முதல்வர் மார்ச் 7 ஆம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

ஜபல்பூர் மறைமாவட்டத்தின் ஆயர் ஜெரால்ட் அல்மேடா இக்குற்றச்சாட்டுகள் பொய்யானது என்று நாங்கள் நீதிமன்றத்தில் நிரூபிப்போம் என்று கூறினார். இதுகுறித்து பழங்குடியினத்தின் அரசியல் கட்சியான கோண்ட்வானா கணதந்த்ரா கட்சியின் தலைவர் அமன் சிங் போர்த்தே, இக்குற்றசாட்டானது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது, போலியானது. நாங்கள் எப்போதும் ஏழைகளுக்கு உதவும் கத்தோலிக்க பள்ளிக்கு துணை நிற்போம் என்று கூறினார்.

மார்ச் 14 ஆம் தேதி, இக்குற்றத்தை கூறிய 11 ஆம் வகுப்பு மாணவியின் நெருங்கிய உறவினரான சிவ்குமார் பூசம் என்பவர், “மாணவி சொன்னது போன்று எந்த சம்பவமும் நடக்கவில்லை. வகுப்பு நடந்து கொண்டிருந்த நேரத்தில் மாணவி யாரிடமும் சொல்லாமல் வெளியே சென்று உண்பதற்கு இனிப்புகளை வாங்கி வந்திருக்கிறார். அப்பொழுது பள்ளி முதல்வர் அவர்கள் அவரது கன்னத்தில் லேசாக அறைந்தது உண்மை. ஆனால் இது பாலியல் வன்கொடுமை வழக்காக தவறாக வேண்டுமென்றே சித்தரிக்கப்பட்டிருக்கிறதுஎன்று UCA செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

எனது இரண்டு மகள்களும் இப்பள்ளியில்தான் தங்கி படிக்கிறார்கள். ஆனால் இதுவரை எந்த அசம்பாவிதங்களும் நடந்தது இல்லை. இங்கே அரசாங்க அதிகாரிகள் ஆய்வு செய்வதற்கு முன் நான் இங்குதான் என் மகள்களோடு இருந்தேன். அப்போது அவர்கள் இது போன்ற குற்றச்சாட்டுகளை எதுவும் என்னிடம் சொல்லவில்லை. நன்றாகதான் என்னிடம் பேசி மகிழ்ந்தார்கள். ஆனால் அரசாங்க அதிகாரிகள் வந்து ஆய்வு செய்த ஒரு சில மணி நேரங்களுக்கு பிறகுதான் இது போன்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன. இவை எல்லாவற்றிக்கும் மேலாக பள்ளியின் முதல்வருக்கு எதிராக இந்த குற்றச்சாட்டுகளை தெரிவிக்க எனக்கும் மற்ற 8 மாணவிகளின்  பெற்றோர்களுக்கும் பத்தாயிரம் ரூபாய் காசோலை வழங்கப்பட்டது. மேலும் இக்காசோலையை நிராகரித்தால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றும் அச்சுறுத்தப்பட்டோம்என்று யாதவ் கூறினார்.

யாதவும் மற்ற பெற்றோர்களும் இணைந்து, முன்னறிவிப்பு ஏதுமின்றி இரவு 7 மணிக்கு குழந்தைகள் விடுதிக்குள் நுழைந்தது மட்டுமில்லாமல், தங்களுக்கு தகவல் கொடுக்காமல் தங்கள் குழந்தைகளை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று பொய் வழக்கை தயாரித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட காவல்துறையினரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

Comment