No icon

பீட்டர்பால் சல்தான்க

ஒன்றிய அரசை பாராட்டும் கிறிஸ்தவர்கள்

2023 மார்ச் 12 ஆம் தேதி இந்திய ஒன்றிய அரசாங்கம் உச்ச நீதிமன்றத்தில் ஓரின சேர்க்கை திருமணத்தை அங்கீகரிக்கக் கூடாது என்று தெரிவித்திருப்பதை கத்தோலிக்க கிறிஸ்தவர்களாகிய நாங்கள் முழு மனதோடு வரவேற்கிறோம் என்று இந்திய கத்தோலிக்க திரு அவையின் தலைவர்கள் கூறியுள்ளனர். இந்திய கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் கோட்பாடுகளுக்கான துறையின் உறுப்பினர்களுள் ஒருவரான மங்களூர் ஆயர் பீட்டர்பால் சல்தான்க, “ஓரின சேர்க்கை திருமணத்தை கத்தோலிக்க திரு அவையானது இயற்கைக்கு மாறுபட்ட ஒரு உறவாக கருதுகிறது. மேலும் தாய், தந்தை, பிள்ளைகள் என்ற குடும்ப முறையோடு வாழ வேண்டும் என்று இறைவன் கற்பித்த படிப்பினைக்கு எதிரானதாகவும் இருக்கிறது. கத்தோலிக்க திரு அவையானது ஓரின சேர்க்கை திருமணத்தை அனுமதிப்பதும் இல்லை, வரவேற்பதும் இல்லை. இத்தகைய நேரத்தில் ஒன்றிய அரசாங்கம் எடுத்திருக்கும் இந்த தீர்வானது உண்மையாகவே போற்றப்படக்கூடியது, அனைவராலும் வரவேற்கப்படக்கூடியதுஎன்று மார்ச் 13 ஆம் தேதி UCA செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

தில்லி சிறுபான்மை ஆணையத்தின் முன்னாள் உறுப்பினரும், உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்களில் ஒருவருமான அருட்சகோதரி அனஸ்தேசியா கில், “கடவுளின் படைப்பில் இவர்களும் முக்கியமானவர்கள், அதே நேரத்தில் நமது இந்திய சமூகமானது, இயற்கைக்கு மாறான இது போன்ற உறவு முறைகளை ஏற்றுக் கொள்வதற்கு இன்னும் தன்னை தயார்படுத்திக்கொள்ளவில்லை என்பதை இவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்என்று கூறினார்.

Comment