No icon

முனைவர் A.M. மனோண்மணி

உயரிய விருதுபெற்ற புதுவை மருத்துவ ஆராய்ச்சியாளர்

புதுச்சேரியில் உள்ள வினோபா நகர் புனித சூசையப்பர் ஆலயபங்கைச் சார்ந்த மருத்துவ விஞ்ஞானி மற்றும் ஆராய்ச்சியாளர் திருமதி. Dr. A.M. மனோண்மணி அவர்கள், கொசுக்கள் மூலம் பரவும் நோய்த் தடுப்பிற்கான மருத்துவ கண்டுபிடிப்பில் சாதனைப் படைத்ததன் காரணமாக, புதுவை ஜிப்மர் கல்லூரியில் மார்ச் 13 ஆம் தேதி நடைபெற்ற விழாவில் பாண்டிச்சேரி துணை நிலை ஆளுநர் மாண்புமிகு மருத்துவர் தமிழிசை சவுந்தரராஜன் அவர்கள் மத்திய அரசின் மிகவும் பெருமைக்குரிய “பத்மபூஷன் Dr. V.P. ஷர்மா விருது” கொடுத்து கௌரவிக்கப்பட்டார். மத்திய அரசின் புகழ்பெற்ற மருத்துவ ஆராய்ச்சி நிறுவனமான  ICMR (Indian Council of Medical Research) புதுச்சேரி பிரிவில் உள்ள வெக்டார் கன்ட்ரோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் விஞ்ஞானியாகப் பணிபுரிந்து ஓய்வுப் பெற்றுள்ளார். இவர்  மலேரியா மற்றும் டெங்கு தடுப்பு நடவடிக்கை குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் வெக்டார் கன்ட்ரோல் ஆராய்ச்சி நிறுவனத்தில், Vector Bio - ecology and Control என்னும் தலைப்பில் ஆராய்ச்சி மேற்கொண்டு, கொசுக்கள் மூலம் பரவும் நோய்களைத் தடுக்கும்பொருட்டு, கொசுக்களுக்கு எதிராக இயற்கையான முறையில் செயல்படும் நுண்ணுயிர் பாக்டீரியாவைக் கண்டுபிடித்துள்ளார். ஆராய்ச்சிப்பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவ விஞ்ஞானியான அருள்சாமி மேரி மனோண்மணி அவர்கள் ஒரு மூத்த ஆராய்ச்சியாளர் ஆவார். 

வளரும் நாடுகளுக்கு இம்முறையிலான கொசு ஒழிப்பு என்பது மிகப்பெரிய வரப்பிரசாதமாகும். இதன்மூலம் மிக மிகக் குறைந்த செலவில் கொசுக்களைக் கட்டுப்படுத்தி, அதன்மூலம் பரவும் மலேரியா, டெங்கு போன்ற நோய்களைக் கட்டுப்படுத்த முடியும். ஆராய்ச்சியாளர் திருமதி மனோண்மணி அவர்களை புதுவை வினோபா நகர் பங்குத்தந்தை அருள்திரு. V. சின்னப்பன் அவர்கள் தலைமையில் பங்கு இறைமக்களும், புனித சூசையப்பர் சபை உறுப்பினர்களும் மீண்டும் ஒருமுறை மார்ச் 19 ஆம் தேதி பாராட்டி மகிழ்ந்தனர். நம் வாழ்வு வார இதழும் வாழ்த்தி மகிழ்கிறது.

Comment