No icon

மூன்று பெண் நீதிபதிகள்

மணிப்பூரில் களமிறங்கும் உச்ச நீதிமன்றம்

இந்தியாவின் உச்ச நீதிமன்றம், வன்முறை மிகுந்த மணிப்பூர் மாநிலத்தில் அமைதியை ஏற்படுத்தவும், நிவாரணப் பணிகளைக் கண்காணிக்கவும் மூன்று ஓய்வுபெற்ற பெண் நீதிபதிகள் கொண்ட குழுவை அமைத்துள்ளது. இக்குழுவிற்கு உயர் அதிகாரம் தரப்பட்டுள்ளது. இம்மாநிலத்தை ஆளும் பாரதிய ஜனதா கட்சி, மே 3 ஆம் தேதி வெடித்த வன்முறையைக் கட்டுப்படுத்தத் தவறியுள்ள நிலையில், ஆகஸ்ட் 7 ஆம் தேதி இந்தியாவின் உச்ச நீதிமன்றம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இந்த மூன்று பெண் நீதிபதிகளும் மணிப்பூர் மாநிலத்திற்கு அப்பாற்பட்டவர்கள். எனவே, பாதிக்கப்பட்ட மக்கள் குறிப்பாகப் பெண்கள், தங்கள் புகார்களைத் தயக்கமின்றி பதிவு செய்ய இது ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும். மேலும், வன்முறையை அடக்க மாநில அரசு எதையும் செய்யாத நிலையில், உச்ச நீதிமன்றத்தின் இந்த நடவடிக்கை நம்பிக்கை தரும் செயலாகும்.

Comment