No icon

50 -வது கத்தோலிக்கச் சமூக வாரத்தின் நிறைவுக் கூட்டம்

சமூக மாற்றமும், பொதுநலன் பங்கேற்பும் திரு அவையிடமிருந்து பிரிக்க முடியாது, ஜூலை 7 வடக்கு இத்தாலியின் திரியெஸ்தே நகரில் நடைபெற்ற 50 -வது கத்தோலிக்கச் சமூக வாரத்தின் நிறைவுக் கூட்டத்தில் பேசிய திருத்தந்தை பிரான்சிஸ், “சனநாயகத்தின் நெருக்கடியைக் காயப்பட்ட இதயமாகக் கருதி புறக்கணிப்புக் கலாச்சாரமானது தவிர்க்கப்பட வேண்டும். இந்தப் புறக்கணிப்புக் கலாச்சாரமானது ஏழைகள், கருவில் இருக்கும் சிசுக்கள், பலவீனமானவர்கள், நோயாளிகள், குழந்தைகள், பெண்கள் இளைஞர்கள், முதியவர்கள் போன்றவர்கள் இல்லாத நகரத்தை உருவாக்குகின்றது. ஓர் அரசு மனிதனுக்குப் பணியாற்றவில்லை என்றால், அது உண்மையான சனநாயக அரசு அல்ல; தான் இருக்கின்ற சமூகத்தை மதிக்கவில்லை என்றால், அது மனிதனின் மாண்பு, சுதந்திரம் மற்றும் சுயாட்சியை அதன் உயர்ந்த குறிக்கோளாகக் கொண்டிருக்கவில்லை; நிறைவாக, சமூக மாற்றத்தின் சாட்சியாகவும், பங்கேற்பின் சாட்சியாகவும் இருக்க வேண்டும்என்றார்.

Comment