No icon

ஆக்ரா உயர் மறைமாவட்டத்தின் FCRA இரத்து

திரு அவையின் சமூக சேவை நடவடிக்கைகளை முடக்கும் வண்ணம் கிறிஸ்தவக் கத்தோலிக்க மறைமாவட்டங்கள் வெளிநாட்டு நிதியுதவி பெறுவதைத் தொடர்ந்து தடுத்து நிறுத்தி வரும் ஒன்றிய பா... அரசு ஆக்ரா கத்தோலிக்க உயர் மறைமாவட்டத்தின் வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்தை (FCRA) அண்மையில் இரத்து செய்துள்ளது. 1886 -ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஆக்ரா மறைமாவட்டம் வட இந்தியாவின் முதல் கத்தோலிக்க மறைமாவட்டம் ஆகும். இது இன்றைய பாகிஸ்தான் மற்றும் திபெத்தின் சில பகுதிகள் உட்பட ஒரு பரந்த பகுதியை உள்ளடக்கியிருந்தது. தற்பொழுது, உயர் மறைமாவட்டத்தின் கீழ் 12 மறைமாவட்டங்கள் உள்ளன. இது கல்வி, சுகாதார வசதிகள் மற்றும் பிற மனித மேம்பாட்டுக் குறியீடுகளின் அடிப்படையில் ஏழ்மையான இந்திய மாநிலங்களில் ஒன்றாக அறியப்படுகிறது. கிறிஸ்தவத் தொண்டு நிறுவனங்கள், முதன்மையாக பெண்கள் சுய உதவிக் குழுக்களுடன் சமூக நலத்திட்டங்களிலும், கல்வி மற்றும் சுகாதாரப் பாதுகாப்புத் திட்டங்களிலும் ஈடுபட்டுள்ளன. இந்த FCRA தடையால் ஏழ்மையான மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Comment