மிஷன் 2033
செப்டம்பர் 11-ஆம் தேதி புனித ஜான் சுகாதார அறிவியல் நிறுவனத்தில் ‘Journeying towards a Synodal Church: Mission 2033’ என்ற தலைப்பில் நடந்த கூட்டத்தின்போது CCBI-இன் தலைவர் கர்தினால் பிலிப் நேரி ஃபெரோ அவர்கள் மிஷன் 2033 என்னும் தேசிய மேய்ப்புப்பணித் திட்டத்தை வெளியிட்டார். இந்தியாவிலுள்ள கத்தோலிக்கத் திரு அவையின் 5,000-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை உள்ளடக்கிய, ஒரு வருட உழைப்பின் பலனாக இத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. ‘இத்திட்டம் ஒரு கூட்டுத் திட்டம். இது தூய ஆவியாருடன் எழும் உரையாடல்களின் பலன்’ என்று கர்தினால் ஃபெரோ கூறினார். இதனை நனவாக்க ஒவ்வொருவரும் பங்களிக்க வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
Comment