No icon

​​​​​​​சமூகக் குரல்கள்

“பணம் இல்லையா, விளையாட முடியாதுஎன்பதே இந்தியாவில் இன்று பெரும்பாலான தடகள வீரர்களின் உண்மை நிலை. அடிப்படை வசதிகள் போதிய அளவு இல்லாமல் அவதிப்படுவதுடன், நாட்டின் விளையாட்டு அமைப்பு மீதான ஏமாற்றம் காரணமாக விளையாட்டில் பங்கேற்கும் இளைஞர்கள் நம்பிக்கையை இழந்து வருகின்றனர். இது இந்தியாவுக்கு ஒலிம்பிக் பதக்கத்தைத் தவறவிடுவதைவிட மிகப்பெரிய இழப்பு. இந்தியாவிடம் அளப்பரிய திறமை உள்ளது. தேவையான அனைத்து வசதிகளும் வெளிப்படையான முறையில், நியாயமாகக் கிடைப்பது மட்டுமே வெற்றிபெறக்கூடிய அனைத்து விளையாட்டு வீரர்களும் சமமாகப் பலனடைவதை உறுதி செய்யும்.”

- திரு. இராகுல் காந்தி, காங்கிரஸ் எம்.பி, எதிர்க்கட்சித் தலைவர்

“மதுவிலக்கு என்பது நான் கண்டுபிடித்த புதிய கோரிக்கை அல்ல; கௌதம புத்தர் காலத்தில் இருந்தே இந்தக் கோரிக்கை இருந்துகொண்டுதான் இருக்கிறது. காந்தியடிகளின் இரு கொள்கைகளான ‘மதச்சார்பின்மைமற்றும் ‘மதுவிலக்குஇரண்டிலும் நமக்கு உடன்பாடு உண்டு. சுகாதாரமான வாழ்வாதாரத்தை மக்களுக்கு உறுதிசெய்ய வேண்டும் என்று அரசியலமைப்பு கூறுகிறது. அதனால்தான், இந்திய அளவில் மதுவிலக்கு வேண்டும் என்கிறோம். தமிழ்நாட்டில் உள்ளவர்கள் மட்டுமல்ல, இந்தியாவில் உள்ளவர்களும் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில்தான் மதுவிலக்கு கோரப்படுகிறது. மதிப்பிட முடியாத மனிதவளத்தைப் பாதுகாக்க வேண்டும்.”

- திரு. திருமாவளவன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர்

“இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7 சதவிகிதமாக இருக்கும் நிலையிலும் போதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை என்பது சில மாநிலங்களின் காலிப் பணியிடங்களுக்குக் குவியும் விண்ணப்பங்கள் மூலம் தெரிய வருகிறது. எனவே, வேலைவாய்ப்பை அதிகரிக்கத் தொழிலாளர்கள் தேவை அதிகமுள்ள துறைகள் மற்றும் தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்க வேண்டும். நாட்டில் பொருளாதார ரீதியாக உயர்ந்த இடத்தில் உள்ள ஒரு தரப்பினர் சிறப்பான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள். ஆனால், பொருளாதார ரீதியாகப் பின்தங்கியுள்ள நாட்டின் பெரும் பகுதி மக்கள் வாங்கினால் மட்டும்தான் பொருள்களின் நுகர்வு அதிகரிக்கும். கொரோனா பெருந்தொற்றுக்கு முன்பு இருந்த பொருள் நுகர்வு இன்னும் எட்டப்படவில்லை. இது மிகவும் துரதிருஷ்டவசமானது.”

- திரு. இரகுராம் ராஜன், இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) முன்னாள் ஆளுநர்

Comment