ஜூன் 30
உரோமைத் திரு அவையின் முதல் மறைசாட்சிகள்
- Author Sr. மேரி ஆனந்த் DM --
- Thursday, 30 Jun, 2022
கத்தோலிக்கத் திரு அவை மறைசாட்சிகளின் இரத்தத்தால் கட்டப்பட்டது. கி.பி முதல் நூற்றாண்டு முதல் நான்காம் நூற்றாண்டு தொடக்கம் வரை இயேசு கிறிஸ்துவை ஆண்டவராக ஏற்றுக்கொண்ட கிறிஸ்தவர்களை சிலுவையில் அறைதல், தலைவெட்டுதல், நெருப்பில் எரித்தல், குளிர்ந்த நீரில் உரையவைத்தல், விலங்குகளுக்கு இரையாக்குதல், உயிரோடு தோல் உறித்தல் போன்ற பல்வேறு முறையில் கிறிஸ்தவர்கள் மறைசாட்சியாக இறந்தனர். 64 ஆம் ஆண்டு, பேரரசர் நீரோ தனது அரண்மனையை விரிவுப்படுத்த உரோமையில் தீ வைத்தார். மக்கள் கோபம் கொண்டு கொதித்தனர். மக்கள் தனக்கு எதிராக பிரச்சனை எழுப்புவதை அறிந்த பேரரசன், கிறிஸ்தவர்கள் தான் உரோமை நகருக்கு தீ வைத்தார்கள் என்று கூறி, மக்களை நம்ப வைத்தார். மக்களின் கோபம் முழுவதும் கிறிஸ்தவர்கள்மீது திரும்பியது. குற்றமற்ற கிறிஸ்தவர்கள் விலங்குகளுக்கும், தீக்கும் இரையானார்கள்.
Comment