ஜூலை 26
புனித சுவக்கின் மற்றும் அன்னா
- Author Sr. மேரி ஆனந்த் DM --
- Saturday, 23 Jul, 2022
புனித சுவக்கின் மற்றும் அன்னா இவர்கள் அன்னை மரியாவின் பெற்றோர். இறைவனின் பார்வையில் நீதிமான்களாக வாழ்ந்த இறை நம்பிக்கையாளர்கள். செல்வாக்கு பெற்றிருந்தபோதும், குழந்தைச் செல்வம் இல்லாததால் வருத்தமுற்றனர். ஆண்டவரின் திருவுளம் நிறைவேற காத்திருந்தனர். சுவக்கின் ஆலயத்தில் பலி செலுத்தி, ஆண்டவரின் இரக்கம் தனக்கு கிடைக்கும்வரை காத்திருந்தார். அன்னா ஆண்டவரிடம் மலட்டுத்தன்மையை தன்னிடமிருந்து நீக்குமாறும், தனக்குப் பிறக்கும் குழந்தையை இறைபணிக்கென அர்ப்பணிப்பதாகவும் வேண்டினார். ஆண்டவர் அன்னாவை கண்ணோக்கியபோது, கருவுற்று மரியாவை ஈன்றெடுத்தார். மரியாவை இறைவனின் தாயாகும் தகுதியுள்ளவராக வளர்த்து, இறைவனுக்கு அர்ப்பணித்தனர். மரியா இறைவனின் திருவுளம் நிறைவேற்றினார். சுவக்கின் மற்றும் அன்னா தாத்தா பாட்டிகளின் பாதுகாவலர்.
Comment