ஜூலை 27
புனித முதலாம் இன்னோசென்ட்
- Author Sr. மேரி ஆனந்த் DM --
- Saturday, 23 Jul, 2022
புனித முதலாம் இன்னோசென்ட் அல்பானோவில் பிறந்தார். குழந்தைப்பருவம் முதல் இளமை வரை துறவிகளுடன் வாழ்ந்து நற்பண்பில் வளர்ந்து, அனைவர் மனதிலும் இடம்பிடித்தார். 401 ஆம் ஆண்டு, டிசம்பர் 27 ஆம் நாள் முதலாம் அனஸ்தாசியுஸ் இறந்த 3 நாட்களுக்குப்பின், முதலாம் இன்னோசென்ட் திருத்தந்தையாக அருள்பொழிவு பெற்றார். 16 ஆண்டுகள் திரு அவையை இறைவனின் திருவுளப்படி வழிநடத்தினார். திரு அவையில் நிலவிய பிரச்சனைகளுக்கு எளிதில் தீர்வு கண்டார். பெலாஜிய தப்பறையை கண்டித்து, 416 இல் கார்த்தேஜில் ஆப்பிரிக்க ஆயர்களின் முடிவை ஏற்று பிரகடனம் செய்தார். கடிதங்கள் வாயிலாக திரு அவையின் போதனைகளையும், மறையுண்மைகளையும் எடுத்துரைத்தார். தூய வழியில் கடமைகள் நிறைவேற்றி திருப்பணி செய்த குருக்கள் மற்றும், ஆயர்களுக்கு ஆதரவு அளித்தார். அயராது இறைபணி செய்து 417 ஆம் ஆண்டு இறந்தார்.
Comment