No icon

பா.ச.க.வின் சித்து விளையாட்டு

அரசியல் நாகரிகம் என்பது, பிற கட்சிகளின் விவகாரத்தில் கருத்து தெரிவிக்காமல் இருப்பது, பிற கட்சிகளின் விவகாரத்தில் மூக்கை நுழைக்காமல் இருப்பது. பா...வின் குருபீடம் ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்குஒரே நாடு, ஒரே கட்சி, ஒரே தலைவர், ஒரே மதம், ஒரே மொழிஎன்ற கோட்பாட்டில் முழு நம்பிக்கை உண்டு. அதுவே அவர்களின் பெரும் சித்தாந்தம். இந்தியாவெங்கும் மக்கள் செல்வாக்கு மிக்க மாநிலக் கட்சிகளைக் கட்டி அணைத்து, கபளீ கரம் செய்வதே பா...வின் அடிப்படைக் கொள்கை.

பா... பல மாநிலங்களில் இந்தச் செயல் திட்டத்தால் ஆட்சியைப் பிடித்தது. முதல் கூட்டாளியும், சித்தாந்தத் தோழனுமான சிவசேனாவை மகாராஷ்டிரத்தில் அழித்தொழித்து ஆட்சியைப் பிடித்தது. அவர்களுக்குத் தேவை ஷிண்டேக்களும், பன்னீர்செல்வங்களும்தான். .தி.மு..வைப் பொறுத்தவரை, முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா இருக்கும்வரை அவரைப் போயஸ் தோட்டத்தில் இவர்கள் தேடிச் சென்று சந்தித்தனர். இதில் வாஜ்பாய், அத்வானி, நரேந்திர மோடி, வெங்கய்யா நாயுடு என்ற வரிசை உண்டு. 2014 தேர்தலில்மோடியா? லேடியா?’ என்று கேட்ட வரலாறும் உள்ளடக்கம். இன்று உள்துறை அமைச்சரின் சந்திப்புக்காக, .தி.மு.. வின் அனைத்து அணிகளும் காத்திருப்பது காலக்கொடுமை.

அன்றைய .தி.மு..வினர் ஜெயலலிதா மறைவிற்குப் பின்பு சசிகலாவைப் பொதுச் செயலாளராகவும், முதல்வராகவும் தேர்வு செய்தனர். சசிகலாவிற்குப் பதவிப் பிரமாணம் செய்து வைக்க வேண்டிய ஆளுநர் எங்கு உள்ளார் என யாருக்கும் தெரியவில்லை. ஆளுநரே தலைமறைவான அதிசயம் நடந்தது. அதற்குள் தேதி குறிப்பிடாமல், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த  சொத்துக் குவிப்பு வழக்கிற்குத் தீர்ப்பு எழுதப்பட்டது. சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரகாரம் சிறைக்குப் போனார். எடப்பாடி பழனிச்சாமி முதல்வரானார். பா...வின்  தமிழ்நாடு மூளை பட்டயக் கணக்காளர் குருமூர்த்தி  பன்னீர் செல்வத்தைதர்மயுத்தம்நடத்த உத்தரவிட்டார்.

புதுதில்லி சுல்தான்கள் ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர், துணை முதல்வர் எனச் சமாதானம் பேசி, .தி.மு..வைப் பிடிக்குள் கொண்டு வந்தனர். பா...வின் மக்கள் விரோதச் சட்டங்களை .தி.மு.. ஆதரித்தது. குடியுரிமைச் சட்டம் .தி.மு.. உறுப்பினர்களின் ஆதரவால் மாநிலங்களவையில் ஓட்டெடுப்பில் தப்பிப்  பிழைத்துச் சட்டமானது. ‘விவசாயிகளுக்கு எதிரான சட்டம் எக்காலத்திலும் திரும்பப் பெறப்பட மாட்டாதுஎன்ற எடப்பாடி, ஆளும் பா...விற்கு ஏக வக்காலத்து வாங்கினார். இதற்குப் பரிகாரமாக  ஒன்றிய அரசின் புலனாய்வு அமைப்புகளால் .தி.மு.. ஊழல் வழக்குகள் இன்றும் மூடிக் கிடக்கின்றன.

2024-ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்த கடைசி நாள்கள், தமிழ்நாடு பா... கட்சித் தலைவர் அண்ணாமலை கேலியாகச் சிரித்துக்கொண்டு சொல்கிறார்: “பாராளுமன்றத் தேர்தலில் .தி.மு.. படுதோல்வி அடையும்; அதற்குப் பின் அக்கட்சியில் பெரும் குழப்பங்கள் நடைபெறும்.”

ஆம், நான்கு வருடங்களாக வீட்டில் இருந்து அரசியல் செய்த சசிகலா, ஊர்தோறும் சுற்றுப் பயணம் சென்று தொண்டர்களைச் சந்திக்கிறார். எடப்பாடி நடத்தும் தேர்தல் தோல்வி குறித்த காரணம் அறியும் மாவட்ட அளவிலான கூட்டங்களிலும், .தி.மு.. இணைப்பு குறித்து குரல்கள் எழுகின்றன. தமிழ்நாட்டின் காட்சி மற்றும் அச்சு ஊடகங்கள் இது குறித்த விவாதங்களைச் சூடாக்குகின்றன. புதுதில்லி புண்ணியவான்களின் காருண்யத்தில் இந்த நாடகங்கள் சிறப்பாக நடக்கின்றன.

எடப்பாடி பழனிசாமியின்வலது கரம்எனப்படும் வேலுமணி பொதுவெளியில் சொல்கிறார்: “தமிழ்நாட்டில் பா... எங்களுடன் கூட்டணி இருந்திருந்தால், எங்கள் கூட்டணி தமிழ்நாட்டில் பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும்.” எங்கெங்கு காணினும்  பா...வின் ஸ்லீப்பர் செல்கள்!

2024 - பாராளுமன்றத் தேர்தல்களில் பத்து தொகுதிகளில் பா..., .தி.மு..வைப் பின்னுக்குத் தள்ளி இரண்டாம் இடம் பிடித்துவிட்டது. வாக்குகளிலும் .தி.மு.. வாக்கு எண்ணிக்கையில் பாதியைப் பா... வாங்கி விட்டது. 52 வயது கொண்ட, ஏழு முறை ஆட்சிக்கு வந்த .தி.மு.. புதுதில்லி இயக்கத்தில்  தினம் தன் காட்சிகளை மாற்றுகிறது.

இன்றைய நிலையில் பா...வுக்கு மக்களவை மற்றும் மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லை. கடந்த முறை பா...வின் அனைத்து மக்கள் விரோதச் சட்ட வடிவுகளுக்கு ஆதரவு கொடுத்த ஒரிசாவின் நவீன் பட்நாயக் அவர்களும், ஆந்திராவின் ஜெகன் மோகன்ரெட்டி அவர்களும், தங்கள் நிலையிலிருந்து மாற வாய்ப்பு இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

பா... தேசிய சனநாயகக் கூட்டணி ஆட்சி எனச் சொல்கிறது. கர்நாடகாவின் குமாரசாமி தவிர முதல் பத்து இடங்களைப் பழைய பா..மூத்த அமைச்சர்களே  புதிய அரசிலும் கோலோச்சுகிறார்கள். மக்களவை  சபாநாயகர் பதவி கேட்ட பீகாரின் நிதீஷ்குமாரும், ஆந்திராவின் சந்திரபாபு நாயுடுவும் அமைதி காக்கிறார்கள். வருங்காலத்தில்  அரசு பெரும்பான்மைக்காக பா... தன் கள்ள ஆட்டத்தைக் காட்டும்போது, இவர்கள் கையை மீறி எல்லாம் போய்விடும்.

ஆம் ஆத்மிதப்பிப்  பிழைத்த கட்சி. அதன்  விலையாக அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா ஆகியோருக்குச் சிறை தண்டனை கிடைத்தது. ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனும் பா... எதிர்ப்பால் பெரும் தண்டனை பெற்று விட்டார். செந்தில் பாலாஜி சில ஒப்புதல் வாக்குமூல மறுப்பால், தொடர் பிணை மறுப்பால் அவதியுறுகிறார்.

ஆந்திரா, பீகார், மகாராஷ்டிரா தவிர பா... முடிந்த அளவு தொடர் ஆசிர்வாதங்களை வழங்கி, சாம, பேத தண்ட முறையில் மாநிலக் கட்சிகளை ஒழித்துவிட்டது. ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி இல்லை. தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவின் தெலுங்கானா இராஷ்ட்ரிய சமிதி அடையாளமே இல்லாமல் அழிந்துவிட்டது. மதுபானக் கொள்கை வழக்கில் சந்திரசேகர் ராவின் மகள் கவிதாவைச் சிறையில் தள்ளிவிட்டனர். ஊழல் வழக்குகளுக்காக சந்திரபாபு நாயுடுவும், ஜெகன் மோகன் ரெட்டியும் மாறி மாறிப் பா...வின் பாதம்  தாங்குகிறார்கள். பீகாரில் தேர்தல் வந்தால் நிதீஷ் நிலைமை மாறிவிடும் என்கிறார்கள்.

பஞ்சாப்பை ஆண்ட அகாலிதளம் பா... கூட்டணியால் மாநிலத்தைத் தவறவிட்டுதில்லி ஆம் ஆத்மிக்குத் தாரைவார்த்து விட்டனர். கூடா  பா.. நட்பு  கேடாய் முடியும் என்ற நாட்டு நடப்பிலிருந்து, பல மாநிலக் கட்சிகள் பாடம் கற்க மறுக்கின்றன. அவர்களின் தற்போதைய நிலை கவலைக் கிடமாக மாறிவிட்டது. ஜம்முவில் மக்கள் சனநாயகக் கட்சி, தன் தோழமைக் கட்சியான பா...விடம் தேர்தல் நடத்துங்கள் என்று கேட்க முடியாத கையறு நிலை. இதுபோக கோர்க்கா சன முக்தி, இராஷ்ட்ரிய லோக் தந்தரிக் கட்சி ஆகிய வட இந்திய மாநிலக் கட்சிகள் பா... ஊடுருவலால் இருந்த இடம் தெரியாமல் தேய்ந்து விட்டன. அதன் அடையாளமாக மக்களவைத் தேர்தலில் எதிர்க் கட்சிகள் மற்றும் தோழமைக் கட்சிகளிலிருந்து பா...வுக்கு மாறியவர்களுக்குக் கால் பகுதி வாய்ப்பு பா...வில்  அளிக்கப்பட்டது.

பா... தன்னை நிலைநிறுத்திக் கொண்ட பின் தன் வழக்கமான அழுகுணி ஆட்டத்தைத்  தொடரும். அதிகாரவெறி, ஆட்சிப் பிடிப்பு, மாநிலக் கட்சி ஒழிப்பு எனப் பா... அல்லாத மாநில அரசுகளைச் சீண்டும். மாநில உரிமைகளை மறுக்கும். புது தில்லியை மையப்படுத்திய அதிகாரக் குவியலை அதிகப்படுத்தும். இந்திய  மக்கள் விழிப்புப் பெற்று, தங்கள் வாழ்வாதாரம் காக்கப்பட மாநிலக் கட்சிகளை ஆதரிப்பது என்பது காலக்கட்டாயம். அதில் நமது சிறுபான்மையோர் நலனும் உள்ளடக்கம் என்பதை நாம் நன்கு உணர்வோம். விழிப்புணர்வு பெறுவோம்.

Comment