No icon

நம்புங்க... மரம் இல்ல முடி!

9 அடி உயர கிறிஸ்துமஸ் ட்ரீ ஹேர் ஸ்டைல்; கின்னஸ் உலக சாதனை அங்கீகாரம்!

`கோபுரமே உன்னைச் சாய்த்துக்கொண்டு கூந்தலில் மீன் பிடிப்பேன்’ எனக் கார்கூந்தலின் அழகைக் கண்டு வியக்காதவர்கள் இல்லை. தங்களுக்குப் பிடித்த விதங்களில் இறுக்கி, முறுக்கி, வளைத்து கூந்தலை அழகுபடுத்திக்கொள்ளும் பெண்கள் பலர்.

அப்படியிருக்கையில், சிரியாவைச் சேர்ந்த ஹேர் ஸ்டைலிஸ்ட் டேனி ஹிஸ்வானி, ஒரு பெண்ணுக்கு 2.90 மீட்டர் அளவில் (9 அடி 6.5 இன்ச்) கிறிஸ்துமஸ் மரம் போன்ற சிகை அலங்காரத்தைச் செப்டம்பர் 16-ல் செய்துள்ளார்.

அந்த சிகை அலங்கார வீடியோவை கின்னஸ் உலக சாதனை வியாழன் அன்று, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அந்த வீடியோவில், ஒரு பெண் கம்பிகள் இருக்கும் ஹெல்மெட் அணிந்திருக்க அவரின் முடி அதில் கொஞ்சம் சுற்றப்பட்டு, விக்குகள் சொருகப்பட்டு, கிறிஸ்துமஸ் மரம் போல் அழகாக அடுக்கப்படுகிறது. கூடுதல் அலங்காரத்துக்காக விளக்குகள் மாட்டப்படுகின்றன. பச்சை வண்ண சாயம் ஆங்காங்கே பூசப்படுகிறது.

இத்தகைய உயரமான ஹேர் ஸ்டைல் செய்ததற்காக டேனி ஹிஸ்வானி கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார். கூந்தலால் கிறிஸ்துமஸ் ட்ரீ அலங்காரம் செய்யும் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Comment