கர்தினால் பரோலின்
ஊடகங்கள் நம்மை மீட்கவேயன்றி மூழ்கடிப்பதற்கல்ல
- Author குடந்தை ஞானி --
- Saturday, 11 Feb, 2023
கத்தோலிக்க ஊடக செய்திகள் மீட்பிற்கு நம்மை வழிநடத்துவதற்கே தவிர உலகில் மூழ்குவதற்கு அல்ல என்றும், அமைதியைக் கட்டியெழுப்புவதற்கான வழிமுறைகளில் மிகவும் துல்லியமான அறிகுறிகள் கல்வி மற்றும் உரையாடலில் உள்ளது என்றும் கர்தினால் பரோலின் கூறியுள்ளார்.
ஜனவரி 25 புதன் கிழமை முதல் 27 சனிக்கிழமை வரை பிரான்சில் உள்ள லூர்து நகரில் நடைபெற்ற 26வது புனித பிரான்சிஸ் தே சேல்ஸ் நாளை முன்னிட்டு கத்தோலிக்க ஊடகங்களின் கூட்டமைப்பு நடத்திய ஜாக்குஸ் ஹாமல் 2023 பரிசை வழங்க பிரான்சில் உள்ள லூர்து நகருக்கு வந்தபோது திருப்பீடச் செயலர் கர்தினால் பியத்ரோ பரோலின் இவ்வாறு கூறியுள்ளார்.
ஐரோப்பா, ஆப்ரிக்கா, அமெரிக்கா, ஆசியா என 25க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட ஊடகப் பிரதிநிதிகள், பத்திரிகையாளர்கள், ஊடக வல்லுநர்கள் மற்றும் கத்தோலிக்கத் தொடர்பாளர்களை ஒன்றிணைக்கும் புனித பிரான்சிஸ் டி சேல்ஸ் கத்தோலிக்க ஊடகங்களின் கூட்டமைப்புக் கூட்டத்தில் திருப்பீடத்தின் செயல்பாட்டையும் கர்தினால் பரோலின் விளக்கி பேசினார்.
கத்தோலிக்க ஊடகத்தின் இருப்பு, தீவிரமாக ஊக்கமளிக்கும் ஒன்றாக இருக்க வேண்டும், என்றும், இதனால் உண்மையிலேயே வரலாற்றின் ஓட்டத்திற்குள் கொண்டு வரப்படுவதை நாம் உணர முடியும் என்றும் கூறியுள்ள கர்தினால் பரோலின் அவர்கள், கத்தோலிக்க ஊடக செய்திகள் மீட்பிற்கு நம்மை வழிநடத்துவதற்கே தவிர உலகில் மூழ்கடிப்பதற்கு அல்ல என்று வலியுறுத்தியுள்ளார்.
Comment