ரோனிரோலர் சாகச விளையாட்டு
சாத்தியமற்றதை சாத்தியமாக்கும் திறன் பெற்றவர்கள் சாகச கலைஞர்கள்
- Author குடந்தை ஞானி --
- Thursday, 16 Feb, 2023
சாத்தியமற்றதை சாத்தியமாக்கும் திறன் பெற்ற சர்க்கஸ் என்னும் சாகச விளையாட்டு நிகழ்ச்சிக்கு ஏழைகள், வீடற்றவர்கள், இடம்பெயர்ந்தோர், புலம்பெயர்ந்தோர் என 2,000 பேருக்குத் திருத்தந்தையின் பெயரால் திருப்பீடத்தின் நற்கருணை பேராயம் அழைப்பு விடுத்துள்ளது.
பிப்ரவரி 11, சனிக்கிழமையன்று, ரோனிரோலர் சாகச விளையாட்டு (சர்க்கஸ்) நிகழ்ச்சிக்கு 2,000 பேருக்குத் திருப்பீடத்தின் நற்கருணை பேராயம் அழைப்பு விடுத்ததை அடுத்து, உரோமையில் வாழும் உக்ரைன், சிரியா, காங்கோ, சூடான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த சிறாரும் அவர்களது குடும்பங்களும் இதில் பங்கேற்றனர்.
உரோமையில் வாழும் சில புலம்பெயர்ந்தோர் குடும்பங்கள், டோர்வாயானிகா தெருக்களில் இருந்தும், பல்வேறு தங்குமிடங்களிலிருந்தும் ஏறக்குறைய 150 க்கும் மேற்பட்ட மக்கள், மற்றும், புனித அன்னை தெரசாவின் பிறரன்பு சபை அருள்சகோதரிகள் உட்பட பல தன்னார்வலர்களின் உதவியுடன் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
சர்க்கஸ் என்னும் சாகச விளையாட்டு நிகழ்ச்சி எப்போதும் நம்மை உற்சாகப்படுத்தும் அழகுடன் தொடர்பு கொள்ள வைக்கிறது என்று அக்கலைஞர்களுடனான சந்திப்பின் போது திருத்தந்தை பிரான்சிஸ் கூறியுள்ளார். மேலும், இறைவனை அடைய, அவரை நெருங்கிச் செல்ல வாய்ப்பளிக்கும் இக்கலைநிகழ்ச்சி, கடினமான வாழ்க்கையை எதிர்கொள்பவர்களுக்கும் நம்பிக்கையைத் தூண்டுவதற்கு உதவி தேவைப்படுபவர்களுக்கும் சில மணிநேர அமைதியை வழங்க ஒரு வழியாக அமைகிறது" என்று கர்தினால் கொன்ராட் கிராஜெவ்ஸ்கி அவர்களும் இதனைப் பற்றி குறிப்பிட்டுள்ளார்.
கலைக்கும் அழகுக்கும் பின்னால் மணிக்கணக்கான பயிற்சி மற்றும் தியாகங்கள் பல உள்ளன என்பதை இந்நிகழ்ச்சி நினைவுபடுத்துகிறது என்றும், சர்க்கஸின் கலைஞர்கள் விடாமுயற்சியால் சாத்தியமற்றதை சாத்தியமாக்கும் திறன் படைத்தவர்கள் எனவும் அக்கலைஞர்களைப் பற்றிக் கர்தினால் கொன்ராட் கிராஜெவ்ஸ்கி கூறியுள்ளார்.
Comment