தங்க ரோஜாக்களின் வரலாறு
தங்க ரோஜாக்களின் வரலாறு
ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 8-ஆம் தேதி அமல உற்பவ அன்னை திருவிழாவின்போது, மாலையில் உரோம் நக ரின் மையத்தில் உள்ள ஸ்பக்னா வளாகம் சென்று, அன்னை மரியாவின் சுரூபத்திற்குத் திருத்தந்தை மாலையிட்டு வணக்கம் செலுத்துவது வழக்கம். ஆனால், இவ்வாண்டு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் புனித மேரி மேஜர் பெருங்கோவில் சென்று சலுஸ் பாப்பிலி ரோமானி எனும் பெயர் கொண்ட அன்னை மரியாவின் சுரூபத்தின் முன்பாகச் செபித்து, தங்க ரோஜாக்களைக் காணிக்கையாக வழங்கினார். ஏறக்குறைய நான்கு நூற்றாண்டுகளுக்குப் பின்னர் இந்நிகழ்வானது மீண்டும் வரலாற்றில் இடம்பெற்றுள்ளது. 1551-ஆம் ஆண்டு திருத்தந்தை மூன்றாம் ஜூலியஸ் அவர்களாலும், 1613-ஆம் ஆண்டு திருத்தந்தை 5-ஆம் பவுல் அவர்களாலும் தங்க ரோஜாக்கள் சலுஸ் பாப்பிலி ரோமானி அன்னைக்குக் காணிக்கையாக வழங்கப்பட்டுள்ளன. பிரான்ஸ் நாட்டு அரசன் நெப்போலி யனின் படைகள் திருத்தந்தையின் நிர்வாகத்தின்கீழ் இருந்த இடங்களை முற்றுகையிட்டபோது இந்தத் தங்க ரோஜாக்கள் காணாமல் போயின. தற்போது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அம்மாபெரும் பாரம்பரியத்தைத் தொடர்ந்திடும் நோக்கத்தில் டிசம்பர் 8-ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று தங்க ரோஜாக்களை அன்னை மரியாவின் சுரூபத்திற்குக் காணிக்கையாக வழங்கினார்.
Comment