No icon

மக்கள் கொல்லப்படாமல் ஒருநாளைக் கூட கடக்க முடியாது!

மே 25 அன்று திருத்தந்தை தன்னுடைய உரையில், “காங்கோவிலிருக்கும் வடக்கு கிவுவைச் சேர்ந்த கத்தோலிக்கர்களின் தியாகத்தைக் குறித்து நான் நன்றி செலுத்துகின்றேன்என்றார். ஆப்பிரிக்க சனநாயகக் குடியரசில் இருக்கும் காங்கோவில் 14 கத்தோலிக்கர்கள் மாற்று மதத்திற்கு மதம் மாற மறுத்ததால் கொல்லப்பட்டார்கள். ‘நேச சனநாயகப் படைகள்என்று அழைக்கப்படும் தீவிரவாதக் குழு இந்த நாச வேலையைச் செய்து கொண்டிருக்கிறது. இதுபோல மே 13-ஆம் தேதியும் 11 கத்தோலிக்கர்கள் கொல்லப்பட்டார்கள். அவர்களின் வாழ்வாதாரம், உடைமைகள் அழிக்கப்பட்டன என்று இந்தக் குழுவிலிருந்து தப்பித்துப் பிழைத்து வந்தவர்கள் கூறுகின்றார்கள். மரணம் அல்லது மதமாற்றம் இந்த இரண்டு மட்டும்தான் எங்களுக்குத் தேர்வாகக் கொடுக்கப்படுகின்றது. மக்கள் கொல்லப்படாமல் ஒருநாளைக் கூட நாங்கள் கடக்க முடியாது என்றார்கள். ஆயர் மெல்கிசெடெக் இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், அவர் கூறும்போது, இப்படிப்பட்ட துன்பங்களை எதிர்கொள்ளும் கிராம வாசிகள் தங்கள் நம்பிக்கையை இழக்கவில்லை. அவர்களுக்குப் பின்னடைவு இருந்தாலும் தைரியத்துடனும், நம்பிக்கையுடனும் இருப்பதைக் கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை என்கிறார்.

Comment