உக்ரைன் சென்ற திருப்பீடச் செயலர்
திருப்பீடச் செயலர் கர்தினால் பியத்ரோ பரோலின் 5 நாள் பயணமாக ஜூலை 19 வெள்ளிக்கிழமை அன்று உக்ரைன் சென்றுள்ளார். ஜூலை 21, ஞாயிற்றுக் கிழமை உக்ரைன் நாட்டின், பெர்டிகீவ் தூய மரியன்னை தேசியத் திருத்தலத்தில் சிறப்புத் திருப்பலி நிறைவேற்றியுள்ளார். போர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இச்சமயத்தில் அவரின் வருகை மிக முக்கியமானதாக அமைகிறது. கீவில் உள்ள கிரேக்கக் கத்தோலிக்கப் பேராலயத்திற்குச் செல்ல உள்ள கர்தினால் பரோலின் அவர்கள், அவ்வுயர் மறைமாவட்டப் பேராயர் Sviatoslav shevchuk அவர்களையும் சந்திப்பார். வருடந்தோறும் சிறப்பிக்கப்படும் இந்த மரியன்னை தேசியத் திருத்தலத்தின் இறுதி நாள் திருவிழா கொண்டாட்டங்களின்போது எண்ணற்ற மக்கள் திருப்பயணிகளாக வந்து அன்னையிடம் தங்கள் வேண்டுதல்களை எடுத்துரைத்துச் செபிக்கின்றனர்.
Comment