 
                     
                துளி துளியாய்..
- Author குடந்தை ஞானி --
- Wednesday, 13 Jan, 2021
யாரிடம் செல்வோம் இறை(வா)மக்களே!
துளி துளியாய்..
தமிழக இறைமக்களின் தனிப்பெரும் ஒரே வார இதழான நம் வாழ்வு வார இதழைப் பாதுகாப்பதும் பராமரிப்பதும் தொடர்ந்து அடுத்த தலைமுறைக்கு இதனை எடுத்துச் செல்வதும் தமிழக இறைமக்களின் தலையாய கடமையாகும். எனவே இந்த உன்னத நோக்கத்தை, உயர்ந்த இலட்சியத்தை அடைய ‘துளி துளியாய்’ என்னும் திட்டத்தை 2020 ஆம் ஆண்டில் உங்கள் நல்லாசியுடனும் ஒத்துழைப்புடனும் பங்கேற்புடனும் நம் வாழ்வு வெளியீட்டுச் சங்கம் முன்னெடுக்கிறது. இதன் மூலம் நிரந்தர வைப்பு நிதி உருவாக்கப்பட்டு, நம் வாழ்வின் எதிர்காலத்தை வலிமைப்படுத்த விழைகிறோம்.  சிறு துளி பெருவெள்ளம் என்பது நாமறிந்த உண்மை.  உங்கள் ஒவ்வொரு பங்களிப்புக்கும் உரிய அங்கீகாரமும் பாதுகாப்பும் அளிக்கப்படும் என்பதை உறுதியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். 
பொன்விழாவைக் நோக்கி 
நம் வாழ்வு வார இதழ், 1976 ஆம் ஆண்டு முதல் கடந்த 45 ஆண்டுகளாக இடைவிடாமல் வெளிவருகிற வார இதழ். 1876 ஆம் ஆண்டு முதல் வார இதழாக வெளிவந்து, ஈழப் போருக்குப் பின்பு கடந்த சில ஆண்டுகளாக மாத இதழாக வெளிவரும் பாதுகாவலன் இதழும், 1907 ஆம் ஆண்டு முதல்  புதுச்சேரி-கடலூர் உயர் மறைமாவட்டத்திலிருந்து வெளிவரும் சர்வவியாபி வார இதழும் நம் வாழ்வின் முன்னோடிகள் என்றால் அது மிகையாகாது. 1976 ஆம் ஆண்டு முதல்  தமிழக கத்தோலிக்க, கிறிஸ்தவ இறைமக்களின் அரசியல் -ஆன்மிக- சமூக விழிப்புணர்வு வார இதழாக வெளிவரும் நம் வாழ்வு வார இதழ் 2025 ஆம் ஆண்டு தன் பொன்விழாவைக் கொண்டாட தயாராகிக் கொண்டிருக்கிறது. பொன்விழாக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, நிரந்தர வைப்புநிதியை உருவாக்கும் நோக்கத்தோடு, இந்தத் துளி துளியாய் என்னும் இத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
ஒவ்வோர் ஆண்டும் ஆயிரம்பேரிடமிருந்து தலா ஆயிரம் ரூபாய் வீதம் துளி துளியாய் சேர்க்கப்படும் இந்த பத்து லட்ச ரூபாய், படிப்படியாக வளர்ந்து வரும் ஐந்து ஆண்டுகளில் ஐம்பது இலட்சம் ரூபாயை நிரந்திர வைப்புநிதியாக உருவாக்க வேண்டும் என்பதே என் அவா. நம் வாழ்வு ஆசிரியராகப் பொறுப்பேற்று மூன்று ஆண்டுகளைக் கடந்த நிலையில் இறைவன் விரும்பினால் விஞ்சியிருக்கும் இன்னும் மூன்று ஆண்டுகளில் உங்கள் பங்களிப்புடன் இத்திட்டத்தை முன்னெடுக்கிறேன். ஆகையால், இனிவரும் மூன்று ஆண்டுகளுக்குள் முப்பது இலட்சம் ரூபாய் இலட்சியம்; இருபத்தைந்து ரூபாய் இலட்சம் நிச்சயம்.
தமிழக ஆயர் பேரவையின் உறுதுணையுடன், எம் வெளியீட்டுச் சங்கத் தலைவர் மேதகு ஆயர் ஜார்ஜ் அந்தோணிசாமி அவர்களின் வழிகாட்டுதலில், ஏனைய சங்க உறுப்பினர்களின் நல்லாசியுடன், தமிழக இறைமக்களும் எம் வாசகர்களுமாகிய உங்களின் பங்கேற்புடன் இந்தத் துளி துளியாய் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இத்திட்டத்திற்கு பேராதரவுத் தந்து, உங்களுடைய பங்களிப்பையும் பங்கேற்பையும் செய்து, நம் வாழ்வின் எதிர்காலத்தை நாளைய தலைமுறைக்கும் கொண்டு சேர்க்க வேண்டி உங்கள் முன் நிற்கிறேன்.
கிறிஸ்தவர்களின் அரசியல் நிலைப்பாட்டையும், சமூக அக்கறையையும், ஆன்மிக மறுமலர்ச்சியையும் ஒரு சேர குழைத்து, மதவாதத்தால் ஜனநாயகத்திற்குப் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள இந்நிலையில், ‘நம் வாழ்வு’ மட்டுமே அரசியல் அரங்கிலும் சமூக தளத்திலும் நம் குரலை ஓங்கி ஒலிக்கச் செய்ய இயலும் என்பதை நீங்கள் மறவாதீர்கள். தொலைக்காட்சி ஊடகங்கள் வழியாக ஆன்மிகத்தை மட்டுமே மலரச் செய்ய முடியும். அதைத்தான் அவை செய்துகொண்டிருக்கின்றன. ஜனநாயகத்தின் வலிமையான நான்கு தூண்களில் ஒன்றான நம் வாழ்வு போன்ற அச்சு ஊடகங்கள் அதன் பங்களிப்பை வலிமையாகச் செய்திடும். அரசியலும் ஆன்மிகமும் ஒன்றுசேரும்போதுதான் நம் ஜனநாயக உரிமைகள் பேணப்படும். ஆகையால், தாராள உள்ளத்துடன் இத்திட்டத்தில் சேர்ந்து, பங்கேற்று, உங்கள் துளிகளால் நம் வாழ்வின் அட்சயப் பாத்திரத்தை நிரப்பும்படி இருகரம் கூப்பி வேண்டுகிறேன்.
அதற்கான நடைமுறைகள்
•நீங்கள் ஆயிரத்தில் ஒருவராக இணைந்திட இந்தத் துளி துளியாய் திட்டம் உள்ளது. 
•ஒரே தவணையாக ஆயிரம் ரூபாயை நீங்கள் செலுத்தலாம் அல்லது ஆறு மாதங்களுக்கு ஒருமுறை வீதம் இரு தவணைகளாக செலுத்தலாம். அல்லது மூன்று மாதங்களுக்கு ஒருமுறைவீதம் நான்கு தவணைகளாகவும் செலுத்தலாம் அல்லது மாதாமாதம் ரூ.100 வீதம் உங்கள் வங்கி கணக்கிலிருந்து நீங்கள் எங்கள் வங்கி கணக்கிற்கு தானியங்கி முறையில் செலுத்தலாம். அதற்குரிய வங்கி விண்ணப்பப் படிவம் அனுப்பிவைக்கப்படும்.
• நீங்கள் அனுப்பும் மணியார்டர், சூநுகுகூ ஆகியவற்றில் குடிச ஊடிசயீரள குரனே
என்பதைக் குறிப்பிட வேண்டும். 
• Nam Vazhvu Publication Society என்ற பெயரில் நீங்கள் உங்கள் காசோலையை அனுப்ப வேண்டும். அல்லது 
        Account No.:0149 0530 0000 6344  
        Name: Nam Vazhvu Publication Society
        IFSC code: SIBL0000149, 
        South Indian Bank, Mylapore
        என்ற கணக்கிற்கு நேரடியாக நீங்கள் பணம் செலுத்தலாம். 
• உங்கள் பெயர் மற்றும் முகவரி நன்றியுணர்வுடன் நம் வாழ்வில் பிரசுரிக்கப்படும்.
• ஒவ்வோர் ஆண்டும் நம் வாழ்வு வெளியிடும் தினசரி திருவழிபாட்டுக் காலண்டரும். அவ்வாண்டு வெளியிடப்படும் ஓர் ஆன்மிக நூலும், ஆண்டிற்கு ஒருமுறை கிறிஸ்மஸ்க்கு முன்பாக வாழ்த்து அட்டையுடன் அனுப்பி வைக்கப்படும்.
• நம் வாழ்வு நிரந்தர வைப்புநிதியில் சேர்க்கப்படும் தொகை ஒவ்வொரு வாரமும் நம் வாழ்வு வார இதழில் வெளியிடப்படும்.
• துளி துளியாய் என்னும் இத்திட்டத்தில் சேர்ந்து ஆண்டுதோறும் ஆயிரம் ரூபாய் பணம் செலுத்தும் ஒவ்வொருவருக்கும் லேமினேட் செய்யப்பட்ட நம் வாழ்வு குடும்ப உறுப்பினர் அட்டை அனுப்பி வைக்கப்படும். அதற்காக,ஒரு விண்ணப்பப்படிவம் அனுப்பப்படும். தொடர்புக்கொள்ள வேண்டிய எண்: 94980 32244 - 91767 32244 னவைடிச@யேஅஎயணாஎர.in
• நம் வாழ்வு குடும்ப உறுப்பினர்களுக்காக ஒவ்வொரு வாரமும் புதன் கிழமை நம் வாழ்வில் பணியாற்றும் குருக்களின் தனிப்பட்ட திருப்பலிக் ண்டாட்டத்தில் அவர்களின் கருத்துகளுக்காகச் சிறப்பாக செபிக்கப்படும்.
• துளி துளியாய் திட்டத்தில் சேரும் ஒவ்வொரு வருக்கும் அவர்கள் பெயரில் தனித்தனியே கணக்கு வைத்து பராமரிக்கப்படும். எனவே, இந்தத் திட்டத்தில் சேர்ந்து நம் வாழ்வின் வளர்ச்சிக்கும் எதிர்காலத்திற்கும் உதவும்படி தமிழகத் திருஅவை யின் இறைமக்களாகிய உங்களை அன்புடனும் உரிமையுடனும் வேண்டுகிறேன். 
குடந்தை ஞானி, ஆசிரியர்.
 
                    

 
                                                         
                                                         
                                                         
                                                         
                                                        
Comment