’நம் வாழ்வுக்கு’ புதிய பாதை...புதிய இலக்குகள்... புதிய எண்ணங்கள்...
- Author குடந்தை ஞானி --
- Thursday, 20 Jun, 2019
தமிழக ஆயர் பேரவையின் அழைப்பில் நம் வாழ்வு வெளியீட்டுச் சங்கத் தலைவர் பேராயர் மேதகு ஜார்ஜ் அந்தோனிசாமி அவர்களின் வழிகாட்டுதலில் ஜெர்மனியிலிருந்து தமிழகம் திரும்பி, ஜூன் மாதம் 2017 ஆம் ஆண்டு நம் வாழ்வு ஆசிரியராகப் பொறுப்பேற்றது முதலே பொதுநல நோக்குடனும் தூய்மையான எண்ணத்துடனும் வலிமை யான திட்டத்துடனும் நம் வாழ்வை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்லவேண்டும் என்று முனைப்புடன் பணியாற்றத் தொடங்கினோம்.
ஜனவரி 2017 ல் தமிழக ஆயர் பேரவையின் நியமன ஆணை கிடைத்தப் பிறகு இடைபட்ட காலத்தில் ரூபாய் பத்துலட்சம் மதிப்பில் அச்சடித்து விற்பனைக்கு அனுப்பாமல் வைக்கப்பட்டிருந்த புத்தகங்கள் ஒருபுறம்! வைப்புத்தொகை கரைந்து, கரைந்து நிதி நெருக்கடி இன்னொருபுறம்! எனவே இக்கட்டான சூழ்நிலையில் பொறுப்பேற்ற பிறகு, எம் தலைவர் மேதகு பேராயர் ஜார்ஜ் அந்தோனிசாமி அவர்களின் வழிகாட்டுதலிலும் உடனிருப்பிலும் முன்னாள் ஆசிரியர்களும் எனது நெறியாளர்களுமான அருள்முனைவர் வின்சென்ட் சின்னதுரை, அருள் முனைவர் மதுரை ஆனந்த் அவர்களின் அறிவுரையின் பேரில் ‘இனியொரு விதி செய்வோம்; அதை எந்நாளும் காப்போம்” என்று புதிய இலக்குகளையும் புதிய பாதைகளையும் தேர்ந்தெடுத்து நேர்மையான மனத்தோடும் அறச் சிந்தனையோடும் பயணிக்க ஆரம்பித்தோம்.
நம் வாழ்வின் வடிவமைப்பினையும் உள்ளடக்கத்தையும் தரமிக்கதாக மாற்ற முயற்சி எடுத்தோம். அட்டைப்படம் முதல் இறுதிப் பக்கம் வரை 36 பக்கங்களும் முழுக்க முழுக்க பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்று புதிய புதிய எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தினோம். தரமிக்க படைப்புகளையும் படைப்பாளர்களையும் அடையாளம் கண்டு அறிமுகப்படுத்தினோம். இரண்டு கணிணிகள் இருந்த இடத்தில் ஏழு கணிணிகளை (i5/i7) தரத்தில் நிறுவினோம். செலவினங்களைக் குறைத்தோம். உள் கட்டமைப்பை வலிமைப்படுத்தினோம். புதிய வண்ணங்களை மட்டுமல்ல.. புதிய எண்ணங்களையும் தீட்டினோம். சந்தாதாரர்களின் எண்ணிக்கையை குறைந்த பட்சம் 20 சதவீதம் உயர்த்த வேண்டும் என்று முனைப்புடன் உழைத்தோம். வெளியீட்டுச் சங்கத்திற்கு இந்திய வருமான வரியின் 12ஏ விதிவிலக்கைப் பெற்று பாதுகாத்தோம். வருமான வரிக் கணக்குகளை முதல் முறையாகத் தாக்கல் செய்தோம்.
நம் வாழ்வு செலவுகளைக் குறைக்க வேண்டும் என்று தீர்மானித்து, இதுவரை வெளியே கொடுக்கப்பட்டு வந்த அஞ்சல் செய்வதற்கான வேலையை எம் அலுவலகமே மேற்கொண்டது. திங்கள் மற்றும் செவ்வாய்க் கிழமைகளில் இந்த வேலையைச் செய்து புதன்கிழமை எழும்பூர் பத்திரிகா சேனலில் நாங்களே எங்கள் வாகனத்தைக் கொண்டு அஞ்சல் செய்யத் தொடங்கினோம். படிப்படியாக நம் வாழ்வின் கணிணி வடிவமைப்பையும் நாமே மேற்கொள்ள வேண்டும் என்று தீர்மானித்து அதற்கான நபரை அடையாளங்கண்டு, ஆறுமாதங்கள் பயிற்சி கொடுத்து, அட்டைப் படம் முதல் இறுதிப் பக்கம் வரை வடிவமைக்கத் தொடங்கினோம். அஞ்சல் செய்வது மற்றும் கணிணி வடிவமைப்பின் வழியாக வாரத்திற்குப் பதினைந்தாயிரம் ரூபாய் செலவைக் குறைத்தோம்.
அடுத்தக் கட்ட முயற்சியாக கணக்கு வழக்குகளை வெளிப்படைத் தன்மையோடும் எளிதாகவும் நிர்வகிக்க ஒரு கணிணி மென்பொருளையும், சந்தாதாரர்களுக்கென்று பிரத்யேகமாக தற்போது உள்ளதை விட மேம்படுத்தப்பட்ட ஒரு மென்பொருளையும் உருவாக்க வேண்டும் என்று கோவை ஓ-ஞடுடீறுஐஷ் ளுடீடுருகூஐடீசூ ஐசூனுஐஹ ஞஏகூ.டுகூனு என்று நிறுவனத்தை அணுகி அவர்களிடம் எங்கள் தேவைகளையும் எதிர்பார்ப்புகளையும் எடுத்துரைத்தோம். ஒரு சந்தாதாதரருடைய செல்போன் எண்ணைக் கொண்டோ, பெயரைக் கொண்டோ, அஞ்சல் குறியிட்டு எண்ணைக் கொண்டோ அடையாளம் காணவும் அவர் சந்தாத் தொகையைச் செலுத்தி கணிணியில் பதிவு செய்தவுடன் அவருக்கு ஒரு குறுந்தகவல் செல்லும் வண்ணம் ஒரு புதிய மென்பொருள் வடிவமைக்கப்பட்டது. இதன் வழியாக அவர் சந்தா முடிவடையும் தேதியுடன், தோழமைக்கு நன்றி சொல்லி குறுந்தகவல் அனுப்பப்பட்டு வருகிறது. சந்தாவைப் புதுப்பிக்க வேண்டுகோள் விடுத்தும் குறுந்தகவல் அனுப்பப்படுகிறது. ஞாயிறு திருப்பலிக்கு நாங்கள் வரும்போதும் தகவல் தெரிவித்து குறுந்தகவல் அனுப்பப்படுகிறது. இந்த மென்பொருள் ஏனைய கத்தோலிக்க மாத இதழ்களுக்கும் பயன்படும் விதத்தில் மிகக்குறைந்த கட்டணத்தில் மேற்கண்ட நிறுவனத்திடமிருந்து விற்பனைக்கு உள்ளது. இங்ஙனம் நம் வாழ்வின் உள் கட்டமைப்பை மேம்படுத்தி வலிமைப்படுத்திய பிறகு, இணையதளம் மற்றும் ஓர் ஆப் உருவாக்கும் பணியை அதே நிறுவனத்தின் மூலம் மேற்கொண்டோம். றறற.யேஅஎயணாஎர.உடிஅ என்ற இணையதளத்தை பெயர் சொல்ல விரும்பாத ஒரு தனிநபர் முடக்கி வைத்துள்ள நிலையில் .in .டிசப ஆகியவற்றை வாங்கி, றறற.யேஅஎயணாஎர.in
றறற.யேஅஎயணாஎர.டிசப என்ற பக்கங்களை நிறுவினோம்.
இணையதளப் பக்கத்தோடு நின்றுவிடக் கூடாது என்று ஆன்லைன் விற்பனைக்கு நம் வாழ்வைக் கொண்டுச் செல்ல தீர்மானித்தோம். அதற்கான ஒப்பந்தங்களை மேற்கொண்டு உஉயஎநரேந நிறுவனத்தாரிடம் ஒப்பந்தம் செய்து, நம் வாழ்வுச் சந்தாவைப் புதுப்பிக்கவும் நம் வாழ்வு வெளியீடுகளை விற்பனைச் செய்யவும் பிரத்யேக தளத்தை உருவாக்கினோம். நம் வாழ்வு வெளியீட்டுச் சங்கத் தலைவர் பேராயர் மேதகு ஜார்ஜ் அந்தோனிசாமி அவர்களுடைய பங்களிப்பும் அளித்த ஊக்கமும், செலுத்திய அக்கறையும், கொடுத்த அறிவுரையும், காட்டிய வழிகாட்டுதலும் ஈடுபாடும் மிகுந்த பாராட்டுக்குரியவை. தளர்ந்து போகிறபோது தாங்கிப்பிடித்து, சோர்ந்து போகிறபோது ஊக்கப்படுத்தி, அமைப்பை ஒழுங்குப்
படுத்துகிறபோது அனுபவத்தைப் பகிர்ந்து, நேர்மையை விதைத்து, நம்மை நெறிப்படுத்தியமை நன்றிக்குரியது.
நம் வாழ்வின் தரம் கூடியிருக்கிறது.. வடிவமைப்பு நன்றாக இருக்கிறது.. என்று பலரும் பாராட்டுகிறபோது எங்கள் உழைப்பை இன்னும் இரட்டிப்பாக்க வேண்டும் என்ற உத் வேகம் பிறக்கிறது. உலக அளவில் தமிழ்பேசும் கிறிஸ்தவர்களின் ஒரே வார இதழ் ’நம் வாழ்வு’ தான். அதையும் தமிழக ஆயர்பேரவை தொலை நோக்கோடு நிறுவியிருக்கிறது என்கிறபோது தூய ஆவியாரின் வழிகாட்டுதலும் இறைபராமரிப்பும் நம் நெஞ்சங்களில் நிழலாடுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் நம் வாழ்வின் சந்தாதாரர்
களுடைய எண்ணிக்கை 25 சதவீத அளவிற்குக் கூடியுள்ளது. சந்தாவைப் புதுப்பிப்பதற்காக ஒரு மாதத்திற்கு முன்பாகவே ரூ.10 செலவில் அஞ்சல் வழியாக விபரமான கடிதம் அனுப்பப்படுகிறது. குறுஞ்செய்தியும் அனுப்பி சந்தாவை புதுப்பிக்க
நினைவுபடுத்தப்படுகிறது. இந்த அணுகுமுறை
களை சந்தாதாரர்கள் பெரிதும் வரவேற்கின்றனர். மேலும், அதன் உள்ளடக்கங்களில் வேலைவாய்ப்புச் செய்திகளையும் கருத்துச் சித்திரங்களையும் சேர்த்து செறிவூட்டியிருக்கிறோம். ஒவ்வோர் இதழையும் சிரத்தையெடுத்து உழைப்பை மட்டுமே மூலதனமாக்கி இறைவனின் துணையோடு பதிப்பிக்கிறோம்.
சமூக அக்கறையோடு தேவையிலிருப் போருக்கு உதவியிருக்கிறோம். இரத்தப் புற்று நோயால் பாதிக்கப்பட்ட சகோதரிக்கும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தேவைப்பட்ட சகோதரனுக்கும்.. நீட் பலிகொண்ட அனிதாவின் நினைவு நூலகத்திற்கும் உங்கள் வழியாக உதவியுள்ளோம். வீண் ஆடம்பரச் செலவைக் குறைத்து கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து ஒக்கிப் புயலால் பாதிக்கப்பட்ட கோட்டாறு மறைமாவட்டத்திற்கும் கஜா புயலால் பாதிக்கப்பட்ட தஞ்சை மறைமாவட்டத்திற்கும் உதவியிருக்கிறோம். இவ்வேளையில் தங்கள் கருத்தாழமிக்க கட்டுரைகளாலும் தாங்கிப் பிடிக்கிற எழுத்தாளர் படைப்பாளிகளுக்கும் தாரளாமாக தொடர் விளம்பரம் தருகின்ற விளம்பரதாரர்களுக்கும் மிக்க நன்றி. நம் வாழ்வின் வளர்ச்சியில் இறைமக்களாகிய உங்களுடைய பங்களிப்பும் பங்கேற்பும் மிக மிக அதிகம். ஆகையால் பொதுநிலையினரான வாசகர்களாகிய இறைமக்கள் அனைவருக்கும் மிக்க நன்றி..
பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி, சென்னையில் நடைபெற்ற மறைமாவட்ட ஊடகப்பணிக்குழுச் செயலர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் எம் வெளியீட்டுச் சங்கத் தலைவர் பேராயர் மேதகு ஜார்ஜ் அந்தோனிசாமி அவர்கள் றறற.யேஅஎயணாஎர.in
றறற.யேஅஎயணாஎர.டிசப என்ற எம் இணையதளப் பக்கங்களை கிளிக் செய்து இணையதள விற் பனையைத் தொடங்கி வைத்தார்.
இனி நீங்கள் உங்கள் நம் வாழ்வுச் சந்தாவை ஆன்லைனில் செலுத்தலாம். மணியார்டர் பண்ணுவதற்காக அஞ்சல் நிலையம் செல்ல வேண்டியதில்லை. செக் அல்லது டிடி எடுப்பதற்காக வங்கிக்குச் செல்ல வேண்டியதில்லை. மிக மிக எளிய முறையில் உங்கள் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளைக் கொண்டும் உங்கள் நெட்பேங்கிங் கணக்கைக் கொண்டும் மிக மிக எளிதாகச் செலுத்தலாம். அதற்கான வழிமுறைகள் இவ்விதழில் உள்ள வண்ண, நடுப்பக்கங்களில் விளக்கப்பட்டுள்ளன. இனி நீங்கள் உடனுக்குடன் திருஅவைச் செய்திகளையும் நம் வாழ்வில் இடம் பெறும் கட்டுரைகளையும் இணையதளத்தில் படித்து மகிழலாம்.
Comment