No icon

கிறிஸ்தவ, முஸ்லீம் தலித்துக்களை பிற்பட்டோர் பட்டியலில் சேர்த்திடுக…

மார்ச் 4 அன்று புதுதில்லியில் இந்திய கத்தோலிக்க ஆயர்பேரவையின் தலித் மற்றும் பிற்பட்டோர் பணிக்குழு நடத்திய கூட்டத்தில், இந்தியாவில் கிறிஸ்தவ மற்றும் முஸ்லீம் தலித்
மக்களை பிற்பட்டோர் பட்டியலில் சேர்ப்பதற்கு
உறுதி வழங்குவதை அரசியல் கட்சிகள் தங்களது
தேர்தல் அறிக்கைகளில் சேர்க்குமாறு இந்திய
திருஅவைத் தலைவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இந்து மதத் தலித் மக்களைப்போன்று கிறிஸ்தவ மற்றும் முஸ்லீம் தலித் மக்கள் அரசியல் முறைப்படியும், சட்ட முறைப்படியும் சம உரிமைகளைப் பெற வேண்டும். இந்தியாவில் வருகின்ற மே மாதத்தில் மக்களவைத் தேர்தல் கள் நடைபெறவுள்ள வேளையில், இதனை வலியுறுத்தியுள்ள இப்பணிக்குழு, இந்திய அரசியல்
அமைப்பில், 1935 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட சலுகையில் கிறிஸ்தவ மற்றும் முஸ்லீம் தலித்துக்களும் இணைக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகின்றது. பிரித்தானிய காலனி ஆதிக்கத்தில் மதத்தின் அடிப்படையில் எவரும் ஒதுக்கப்படவில்லை. 1950 ஆம் ஆண்டின் குடியரசுத் தலைவர் விதிமுறையில்தான் கிறிஸ்தவ மற்றும் முஸ்லீம் தலித் மக்களுக்கு சலுகைகள் மறுக்கப்பட்டன என இந்திய ஆயர்பேரவை தலித் பணிக்குழு வலியுறுத்துகின்றது.

Comment